ஜென் மாஸ்டர் பாங்கி பேசப்போகிறார் என்றால் பெரிய கூட்டமே சேரும். அவருடைய சீடர்கள் என்று மட்டுமில்லை. பலருக்கும் அவருடைய உரைகள் பிடித்து இருந்தது. அவர் பெரிதாக எந்த புத்தகத்தையும் மேற்கோள் காட்டுவது போன்றவற்றை செய்ய மாட்டார். இதயத்தில் இருந்து பேசுவார். அது கேட்போர் உள்ளத்தை தொடும்.
இது நிச்சிரன் என்ற கோஷ்டியை சேர்ந்த ஒருவருக்கு பொறாமையை கொடுத்தது.
ஒரு நாள் அவர் பாங்கியுடன் வம்பு வளர்க்க முடிவு செய்து அவரது உரை நடத்துமிடத்துக்கு போனார்.
"ஓய் பாங்கி, உமக்கு பெரிய கூட்டம் சேரலாம். அவர்கள் உன் மீது மதிப்பு வைத்திருக்கலாம். நீ சொல்லும்படி நடக்கலாம். ஆனால் எனக்கு உன் மீது மதிப்பு இல்லை. நீ சொல்வது போல நான் நடந்து கொள்ள மாட்டேன். உன்னால் என்னை அப்படி நடந்து கொள்ள வைக்க முடியுமா?"
பாங்கி அமைதியாக சொன்னார். "ஓ நடந்து கொள்ள வைக்கலாமே! இப்படி வாருங்கள்"
இவரும் போனார்.
"இங்கே இடது பக்கம் உட்காருங்கள்."
உட்கார்ந்தார்.
"அங்கே வேண்டாம், இங்கே வலது பக்கம் உட்கார்ந்தால் இன்னும் நன்றாக பேச முடியும் போல் இருக்கிறது. வலது பக்கம் வாருங்கள்."
இடம் மாறினார்.
"பரவாயில்லை! நீங்கள் எவ்வளவு நல்லவர்! நான் சொன்ன படி எல்லாம் நடந்து கொள்கிறீர்களே! இப்போது உட்கார்ந்து என் உரையை கேளுங்கள்!"
மூலம்: http://www.ashidakim.com/zenkoans/4obedience.html
1 comment:
ha!ha!
சாதுர்மாஸ்ய சங்கல்பம் , அது ஆரம்பிச்ச விதம் இப்ப நடைமுறைக்கு அதோட ரெலவன்ஸ் பத்தி கொஞ்சம் சொல்லரேளா மிஸ்டர் தி வா? புத்த மதத்திலேந்து
நம்பளவா பின்பற்ற ஆரம்பிச்சாளா இல்லை முன்னாலேயே இருக்கா?
Post a Comment