Pages

Monday, May 7, 2018

கிறுக்கல்கள் -200





ஒருவர் மாஸ்டரை கேட்டார்: உங்கள் சீடர்களுக்கு நீங்க என்ன செய்கிறீர்கள்?
மாஸ்டர் சொன்னார். "ஒரு சிற்பி என்ன செய்வானோ அதைத்தான் செய்கிறேன். புலியின் சிலையை வடிவமைக்க சிற்பி ஒரு பெரிய கல்லை எடுத்து புலி போல இல்லாததை வெட்டி அப்புறப்படுத்துகிறார்.”

அவருடைய சீடர்கள் அப்புறமாக விளக்கம் கேட்டார்கள்.

மாஸ்டர் சொன்னார்: “என் வேலை நீ அல்லாத எல்லாவற்றையும் உன்னிடமிருந்து உடைத்து எறிவது. உன் கடந்த காலம், கலாசாரத்தில் இருந்து உன்னுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் தேவையற்ற எண்ணங்கள், உணர்வுகள், மனப்பாங்கு, கட்டாயங்களை உடைத்து எறிவது. “

Friday, May 4, 2018

கிறுக்கல்கள் - 199





ஒரு பெண் சீடர் மாஸ்டரிடம் வந்தார். தான் உலக விஷயங்களில மிகவும் அமுங்கி சுய நலத்தோட ஆன்மீக முன்னேற்றமே இல்லாம இருப்பதாக உணர்ந்தார். ஆனால் ஒரு வாரம் மடாலயத்தில் தங்கின பிறகு மாஸ்டர் அவரிடம் "நீ இப்ப நல்லா இருக்கே. ஆன்மீக நாட்டம் இருக்கு" என்றார்.

ஆனா, நான் மத்த சீடர்கள் போல ஆன்மீக வழியில இல்லையே? அதுக்கு என்ன செய்யலாம்
 
மாஸ்டர் சொன்னார் " இத கேளு. ஒரு ஆசாமி புதுசா ஒரு கார் வாங்கினார்.ஆறு மாசம் ஓட்டிவிட்டு கணக்கு போட்டு அது மைலேஜ் நல்லா கொடுக்கலைன்னு முடிவுக்கு வந்தார். காரை வொர்க்‌ஷாப்புக்கு கொண்டு போனார். அங்கே மெகானிக் நல்லா சோதிச்சு பாத்துட்டு "கார் நல்ல கண்டிஷன்ல இருக்கு" ன்னு சொன்னார். இவர் கேட்டார்: பின்ன மைலேஜ் கிடைக்கலையே? மத்தவங்க சொல்ற மாதிரி மைலேஜ் கிடைக்க நான் செய்யக்கூடியது ஒண்ணுமில்லையா?"

, இருக்கே? மத்தவங்க மாதிரி நீங்களும் செய்யலாமே?

என்ன அது?

மைலேஜ் பத்தி பொய் சொல்லறது!

Thursday, May 3, 2018

கிறுக்கல்கள் - 198





என் முன்னாள் மாஸ்டர் பிறப்பையும் இறப்பையும் ஒப்புக்கொள்ள கத்துக்கொடுத்தார்!

பின்னே இப்ப நீ ஏன் எங்கிட்ட வந்தே?

ரெண்டுக்கும் நடுவில இருக்கிறதை எப்படி ஒப்புக்கொள்ளறதுன்னு கத்துக்க!

Wednesday, May 2, 2018

கிறுக்கல்கள் - 197





குழந்தைகளை ஒழுக்கத்தோட வளர்க்கிறது பத்தி மாஸ்டர் இதை சொன்னார்:

நான் பதின்ம வயசு பையனா இருந்தப்ப என் அப்பா என்னை கூப்பிட்டு நகரத்தில் சில இடங்களைப்பத்தி எச்சரிக்கை செஞ்சார்.
"மகனே இரவு விடுதிக்கு போகாதே!”
"ஏன்பா?”
"அங்கே போனா நீ பார்க்கக்கூடாததை எல்லாம் பார்க்க நேரும்!”
இது இயற்கையா என்னை உசுப்பி விட்டது, கிடைச்ச முதல் வாய்ப்பில இரவு விடுதிக்குப்போனேன்!
சீடர்கள் கேட்டார்கள்: “ அங்கே பார்க்கக்கூடாததை எல்லாம் பாத்தீங்களா மாஸ்டர்?”
மாஸ்டர் சொன்னார்: "ஆமாம்.அங்கே என் அப்பாவை பாத்தேன்!”

Tuesday, May 1, 2018

கிறுக்கல்கள் - 196





மாஸ்டரின் சீடர் ஒருவர் விருந்தாளி ஒத்தர்கிட்ட பெருமையா சொல்லிகிட்டு இருந்தார் "நிறைய பேர் சீடரா ஏத்துக்கச்சொல்லி மாஸ்டர்கிட்ட வந்தாங்க. ஆனா மாஸ்டர் அவங்களை எல்லாம் ஏத்துக்கல. என்னைத்தான் ஏத்துக்கொண்டார்!”

அப்புறமா மாஸ்டர் அவனைக்கூப்பிட்டு சொன்னார் : "அப்பனே, நா மத்தவங்களை விட்டுவிட்டு உன்னை சீடனா ஏத்துக்க காரணம் உனக்கு குருவின் தேவை அவங்களுடையதை விட அதிகமா இருந்தது!”