Pages

Wednesday, January 8, 2020

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 68





65 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ மஹாதேவேந்த்ர ஸரஸ்வதி (7)
அடைமொழி: சுதர்ஷன மஹாதேவா
பிறப்பு : மத்யார்ஜுனம்
பூர்வாஶ்ரம பெயர்: மஹாலிங்கர்
பூர்வாஶ்ரம பெற்றோர் பெயர்: சுப்புலட்சுமி, சேஷாத்ரி
பீடாதிபதியாக ஆண்டுகள் : 39
சித்தி: 4990 விரோதி பால்குன அமாவாசை (பொ.ஆ. 1890 மார்ச் 20)
சித்தியான இடம் : புதுக்கோட்டை மாவட்டத்தில் விஷ்ராமபுரா (இளையாத்தங்குடி)
இந்த ஆச்சார்யர் (40 ஆவது ஆச்சார்யர் ஷோபன மஹாதேவரைப் போன்ற) தெய்வீக அழகைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஏழைகளுக்கு உதவுவதில் அவரது பெருந்தன்மையும், கலைகளுக்கு அவர் அளித்த ஆதரவும் குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக அவர் சிறந்த ஶ்ரீவித்யா உபாசகர்.

Saturday, January 4, 2020

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 67





64 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி (5)
பிறப்பு இடம்: கும்பகோணம், மடத்துக்கு அடுத்த வீடு
பூர்வாஶ்ரம பெயர்: வெங்கடசுப்ரமண்யன்
பீடாதிபதியாக ஆண்டுகள்: 37
சித்தி: 4951 சாதாரண கார்த்திக கிருஷ்ண ப்ரதமை (பொது ஆண்டு 1850- நவம்பர் -20)
சித்தி இடம் : கும்பகோணம் மடம்
மற்றவை:
இந்த ஆச்சார்யர் சிறந்த ஶ்ரீவித்யா உபாசகர்.
காஞ்சி காமாட்சி கோயிலின் கும்பாபிஷேகத்துக்காக போதுமான நிதியை ஏற்பாடு செய்ய சென்னையில் தங்கியிருந்தபோது தேவி அவரது கனவில் வந்து அவரை காஞ்சிபுரத்திற்குத் திரும்பும்படி உத்தரவிட்டார். அங்கு தேவையான நிதி வந்து சேரும் என்றாள். அதே போல தேவையான நிதி தானாக வந்து சேர்ந்தது. பெரிய அளவில் சிறந்த முறையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
மாற்று கருத்துடைய சிலர் உருவாக்கிய கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில் திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரிக்குத் தாடங்க பிரதிஷ்டை செய்தார். பின்னர் தஞ்சாவூர் மன்னன் தனது கனவில் சிவபெருமான் இட்ட கட்டளைப்படி அவருக்கு கனகாபிஷேகம் செய்தார். இது மேலே கூறிய கஷ்டங்களால் ஏற்பட்ட செலவினங்களை ஈடுகட்ட உதவியது.

Friday, January 3, 2020

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 66





63 ஆவது ஆச்சார்யர் பற்றிய விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ மகாதேவேந்திர ஸரஸ்வதி (6)
பிறப்பு இடம்: கும்பகோணம்
பூர்வாஶ்ரம பெயர்: அன்னு ச்ரௌதி
பீடாதிபதியாக ஆண்டுகள் : 31
சித்தி: 4914 ஶ்ரீமுக ஆஷாட சுக்ல த்வாதசி (பொது ஆண்டு 1813-ஜூலை -10)
சித்தியான இடம்: கும்பகோணம்
வேறு:
இந்த ஆச்சார்யர் தர்ம சாஸ்திரத்தில் ஒரு நிபுணர் என்று அந் நாளைய முஸ்லீம் ஆட்சியாளர்களால் கூட மிகவும் மதிக்கப்பட்டார். ஆகையால் அவரது சொல்லே அனைத்து தர்மம் குறித்த சர்ச்சைகளிலும் இறுதி வார்த்தை என்று கருதப்பட்டது. கர்நாடக போர்கள் நடந்து கொண்டு இருந்த போதிலும், இவர் பக்தர்களின் இடங்களுக்குச் சென்று, வழிகாட்டுதல் மற்றும் ஆறுதலளிக்கும் வகையில் பயணிக்க அனுமதி அனைத்து தரப்பினராலும் வழங்கப்பட்டது.
கும்பகோணத்தில் ஆதி கும்பேஶ்வரர் கோவிலில் சோமாஸ்கந்த மண்டபம் கட்டியுள்ளார்.

Thursday, January 2, 2020

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 65




62 ஆவது ஆச்சார்யர் பற்றிய விவரங்கள்

ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி (4)
பூர்வாஶ்ரம விவரங்கள்: இந்த ஆச்சார்யரின் பூர்வாஶ்ரம விவரங்கள் கிடைக்கவில்லை. காஞ்சிபுரத்துக்கு அருகில் நடைபெற்ற கர்நாடக போர்கள் காரணமாக காஞ்சிபுரத்தில் இருந்து கும்பகோணத்துக்கு ஶ்ரீமடம் மாற்றப்பட்டதால், சில ஆவணங்கள் அழிந்திருக்கலாம்.
பீடாதிபதியாக ஆண்டுகள்: 37
சித்தி: 4883 சுபகிருது பௌஷ கிருஷ்ண திவிதியை (பொ.ச. 1783-ஜனவரி 20)
சித்தியான இடம்: கும்பகோணம்
வேறு:
இந்த ஆச்சார்யர் ஜெயதேவரின் அஷ்டபதி போல சிவஅஷ்டபதியை எழுதினார்.

Wednesday, January 1, 2020

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 65





61 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ மஹாதேவேந்திர ஸரஸ்வதி (5)
பூர்வாஶ்ரம பெயர்: நாராயணன்
பீடாதிபதியாக வருடங்கள்: 42
சித்தி: 4846 க்ரோதன ஜேஷ்ட சுக்ல நவமி (பொ.ச 1745-ஜூன்-08)
சித்தி இடம்: திருவொற்றியூர் (சென்னை அருகே)
மற்றவை:
இந்த ஆச்சார்யர் ஒரு பெரிய யோகியாக இருந்தார் என்று கூறப்படுகிறது. 7 வயது முதல் உலர் இலைகள் மற்றும் தண்ணீர் மட்டுமே குறைந்த அளவில் உணவாக உட்கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.