Pages

Saturday, January 4, 2020

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 67





64 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி (5)
பிறப்பு இடம்: கும்பகோணம், மடத்துக்கு அடுத்த வீடு
பூர்வாஶ்ரம பெயர்: வெங்கடசுப்ரமண்யன்
பீடாதிபதியாக ஆண்டுகள்: 37
சித்தி: 4951 சாதாரண கார்த்திக கிருஷ்ண ப்ரதமை (பொது ஆண்டு 1850- நவம்பர் -20)
சித்தி இடம் : கும்பகோணம் மடம்
மற்றவை:
இந்த ஆச்சார்யர் சிறந்த ஶ்ரீவித்யா உபாசகர்.
காஞ்சி காமாட்சி கோயிலின் கும்பாபிஷேகத்துக்காக போதுமான நிதியை ஏற்பாடு செய்ய சென்னையில் தங்கியிருந்தபோது தேவி அவரது கனவில் வந்து அவரை காஞ்சிபுரத்திற்குத் திரும்பும்படி உத்தரவிட்டார். அங்கு தேவையான நிதி வந்து சேரும் என்றாள். அதே போல தேவையான நிதி தானாக வந்து சேர்ந்தது. பெரிய அளவில் சிறந்த முறையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
மாற்று கருத்துடைய சிலர் உருவாக்கிய கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில் திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரிக்குத் தாடங்க பிரதிஷ்டை செய்தார். பின்னர் தஞ்சாவூர் மன்னன் தனது கனவில் சிவபெருமான் இட்ட கட்டளைப்படி அவருக்கு கனகாபிஷேகம் செய்தார். இது மேலே கூறிய கஷ்டங்களால் ஏற்பட்ட செலவினங்களை ஈடுகட்ட உதவியது.

No comments: