Pages

Friday, January 3, 2020

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 66





63 ஆவது ஆச்சார்யர் பற்றிய விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ மகாதேவேந்திர ஸரஸ்வதி (6)
பிறப்பு இடம்: கும்பகோணம்
பூர்வாஶ்ரம பெயர்: அன்னு ச்ரௌதி
பீடாதிபதியாக ஆண்டுகள் : 31
சித்தி: 4914 ஶ்ரீமுக ஆஷாட சுக்ல த்வாதசி (பொது ஆண்டு 1813-ஜூலை -10)
சித்தியான இடம்: கும்பகோணம்
வேறு:
இந்த ஆச்சார்யர் தர்ம சாஸ்திரத்தில் ஒரு நிபுணர் என்று அந் நாளைய முஸ்லீம் ஆட்சியாளர்களால் கூட மிகவும் மதிக்கப்பட்டார். ஆகையால் அவரது சொல்லே அனைத்து தர்மம் குறித்த சர்ச்சைகளிலும் இறுதி வார்த்தை என்று கருதப்பட்டது. கர்நாடக போர்கள் நடந்து கொண்டு இருந்த போதிலும், இவர் பக்தர்களின் இடங்களுக்குச் சென்று, வழிகாட்டுதல் மற்றும் ஆறுதலளிக்கும் வகையில் பயணிக்க அனுமதி அனைத்து தரப்பினராலும் வழங்கப்பட்டது.
கும்பகோணத்தில் ஆதி கும்பேஶ்வரர் கோவிலில் சோமாஸ்கந்த மண்டபம் கட்டியுள்ளார்.

No comments: