Pages

Thursday, September 17, 2015

பிள்ளையார் சதுர்த்தி - டாக்குமெண்ட் திருத்தம்.


நேற்று இட்ட பதிவில் குறிப்பிட்ட டாக்குமெண்டில் சிறு திருத்தம்.
ஸங்கல்பத்தில் கன்யா மாஸே என்பதற்கு பதிலாக ஸிம்ஹ மாஸே என திருத்திக்கொள்ளவும். கன்யா மாஸம் மத்யான வேளையில்தான் பிறக்கிறது.
​​
தவறுக்கு வருந்துகிறேன்.

கிறுக்கல்கள்! - 28


குரு அவ்வப்போது சொல்லுவார்: மனிதனுடைய துக்கத்துக்கு முக்கிய காரணம் உலகத்தில் தான் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியும் என்று எண்ணுவதுதான்.

கூடவே இந்த துணுக்கையும் சொல்லுவது அவருக்கு பிடிக்கும்!

கடைக்கு தான் வாங்கிப்போன ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவை ஒருவர் திருப்பிக்கொண்டு வந்தார். “இதில ஒலி முதக்கொண்டு எல்லாம் நல்லாவே இருக்கு. ஆனா இதை வெச்சுகிட்டு நல்ல ப்ரோக்ராம் வர ட்ரான்ஸிஸ்டர் கொடுங்களேன்!”


Wednesday, September 16, 2015

பிள்ளையார் சதுர்த்தி

 
நம்ம ப்ரெண்ட் பிள்ளையாருக்கு நாளைக்கு பொறந்த நாளாம். கொண்டாட வேண்டாமா?
கொழுக்கட்டை, பாயசம்ன்னு அவர் பேரைச்சொல்லி நாம் சாப்டாலும் அவருக்கு ஏதாவது செய்யணுமே?
பூஜை செய்யலாம். அதுக்கான பூஜா முறை இந்த பிடிஎஃப்ல இருக்கு! தேவையான படி பயன்படுத்திக்கொள்ளவும்.
சில இலைகள், பூக்கள் பிள்ளையாருக்கு விசேஷம்.  அதை இப்பவே பாத்து முடிஞ்சால் சேகரிச்சு வெச்சுக்கலாம்.

https://drive.google.com/file/d/0B0hsZOLFx-HfYjZoM2pDNUNBeU0/view?usp=sharing

டாக்குமெண்டில் சிறு திருத்தம்.
ஸங்கல்பத்தில் கன்யா மாஸே என்பதற்கு பதிலாக ஸிம்ஹ மாஸே என திருத்திக்கொள்ளவும். கன்யா மாஸம் மத்யான வேளையில்தான் பிறக்கிறது.
​​
தவறுக்கு வருந்துகிறேன்.

கிறுக்கல்கள்! - 27



மாஸ்டர் இள வயதில் ஒரு அரசியல்வாதியாக இருந்தார். அரசுக்கு எதிரான ஒரு பெரிய போராட்டத்தை துவக்கி இருந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் தன் வேலை வீடு எல்லாவற்றையும் துறந்து போராட்டத்தில் குதித்தனர். ஒரு பெரிய ஊர்வலத்துக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. ஊர்வலம் துவங்கி சிறிது நேரம் கூட ஆகவில்லை; அனைத்தையும் வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டார்.

சகாக்கள் வலுவாக எதிர்த்தனர்.

நீ இப்படி செய்ய முடியாது. இதற்கான ஏற்பாடுகள் மாசக்கணக்கில் செய்து இருக்கிறோம். நிறைய செலவாகி இருக்கிறது. இப்படி செய்தால் உனக்கு முரணான நிலைப்பாடு இருப்பதாக மக்கள் சொல்லுவார்கள்!

மாஸ்டர் சொன்னார்: என் அர்ப்பணிப்பு நிலைப்பாட்டுக்கு இல்லை; உண்மைக்கு!

Tuesday, September 15, 2015

கிறுக்கல்கள்! - 26


குருவின் உபதேசங்கள் குறித்து பிரபல தேசிய நாளிதழில் கிண்டல் அடித்து கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. சீடர்கள் பலருக்கும் வருத்தம்.

குரு அலட்டிக் கொள்ளவே இல்லை! யாரும் படித்தோ கேட்டோ கேலி செய்யாத விஷயம் உண்மையாக இருக்க முடியுமா என்ன?