Pages

Thursday, August 4, 2016

கிறுக்கல்கள் - 149





சமூக விடுதலைன்னு ஒண்ணு இருக்கா இல்லையா சார்?

இருக்கே!”

அதை நீங்க எப்படி விவரிப்பீங்க?”

மந்தையில்  சேராம இருக்க சுதந்திரம்!” 

Wednesday, August 3, 2016

கிறுக்கல்கள் - 148





வாழ்க்கையின் அர்த்தத்தை தேடிக்கொண்டு இருக்கிறேன்!” என்றார் விருந்தாளி.

ம்ம்ம்ம் வாழ்கைக்கு ஒரு அர்த்தம் இருக்குன்னு நினைச்சுகிட்டு இருக்கீங்க!”

பின்னே? இல்லையா?”

வாழ்கையை இருக்கிறபடியே அனுபவிச்சுகிட்டு இருந்தா - நீங்க நினைக்கறபடி இல்லை, அது இருக்கிறபடி - உங்க கேள்விக்கு அர்த்தமே இல்லைன்னு தெரிய வரும்!”

Tuesday, August 2, 2016

பிரார்த்தனை - 1





அனாயாஸேன மரணம்ʼ வினாதை³ன்யேன ஜீவனம்ʼ
தே³ஹி மே க்ருபயா ஶம்போ⁴ த்வயி ப⁴க்திம்ʼஅசஞ்சலாம்

இது பூஜா பத்ததி புத்தகத்தில் இருக்கிற ப்ரார்த்தனை. நமக்கா சரியான ப்ரார்த்தனை செய்யத்தெரியாது.
என் மாமாவிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவன் யோகி ராம்சுரத் குமார் பக்தர். அவரிடம் உனக்கு என்ன வேணுமோ கேளு என்றாராம். இவர் ஒண்ணுமே கேட்கலை.
ஏன் மாமா என்றேன்.
டேய் ஒத்தர் நிறைய தங்க காசு கொடுக்க தயாரா இருக்கறப்ப கொஞ்சமே கொஞ்சம் பித்தளை காசு கொடுன்னு கேட்கறாப்பல ஆயிடும். இவங்களுக்கே நமக்கு என்ன வேணும்ன்னு தெரியும்; நாம எதுக்கு கேட்க்கணும்?” என்றார்.
சில பல வருஷங்களாக எனக்கு பிரார்த்தனை செய்யவே வராது. என்னத்தான் பூஜை செய்ய உக்காரும்போது இதை பிரார்த்தனை செஞ்சுக்கணும் அதை செஞ்சுக்கணும்ன்னு நினைச்சுகொண்டு உக்காந்தாலும் அந்த நேரத்துல ஒண்ணும் வராது.
கடந்த அஞ்சு வருஷத்துல எவ்வளோ தரம் தனியா பிரார்த்தனை செஞ்சேன்னு நினைச்சுப்பாத்தா ரெண்டு மூணு தரம் இருக்கலாம்; அதுவும் எந்த சொந்த சமாசாரத்துக்கும் இல்லை!
மேலும் ரமணர் பக்கம் வந்த பிறகு இது சுத்தமா இல்லாம போயிடுத்து! எப்பவும் என்ன நடக்கணுமோ அதான் நடக்கறது; இதுல நாம கேட்க என்ன இருக்கு? ந்னு தோணிப்போச்சு. பரம சௌக்கியம்!
இந்த சமயத்துல ரொடீனா சொல்கிற இந்த ஸ்லோகம்தான் அப்ளை ஆகிறது.

அனாயாஸேன மரணம்ʼ வினாதை³ன்யேன ஜீவனம்ʼ
தே³ஹி மே க்ருபயா ஶம்போ⁴ த்வயி ப⁴க்திம்ʼ அசஞ்சலாம்

என்ன கேட்கிறோம்? அனாயாஸேன மரணம். பிறக்கிறவங்க எப்படியும் இறந்துதானே ஆகணும்? ரைட்டு! போகலாம். ப்படி போகீற போது இழுத்து பிடிச்சுகிட்டு நாமும் கஷ்டப்பட்டு மத்தவங்களையும் கஷ்டப்படுத்திக்கொண்டு ஏன் போகணும்? இடக்கை நொந்ததென்றார் இறந்தொழிந்தாரே ந்னு பட்னு போகலாமே?
சில பேருடைய இறப்பு பத்தி கேள்விப்பட்டு இருக்கேன். ஒத்தர் சந்தியாவந்தனம் செய்ய உக்காந்தார். ஆசமனம் செய்தார். அச்சுதாய நமஹ, அனந்தாய நமஹ ... கோவிந்தாய வுக்கு அவர் இல்லை! சாய்ஞ்சுட்டார்!
இன்னொருத்தர் கோவிலுக்குப்போனார். ஸ்வாமி தரிசனம் எல்லாம் ஆச்சு. வெளியே வரும்போது கீழே விழுந்து நமஸ்காரம் செய்வோமில்லையா? செய்தார். எழுந்திருக்கவில்லை. கூட வந்தவங்க எவ்வளோ நேரம் நமஸ்காரம் செய்வீங்கன்னு எழுப்பப்பாத்தா பிராணனை விட்டுவிட்டார்ன்னு தெரிஞ்சது!
போறதுன்னா இப்படிப்போக வேணாம்?
அதுக்குத்தான் பிரார்த்தனை. அனாயாஸேன மரணம், 

Monday, August 1, 2016

அந்தணர் ஆசாரம் - 5




ஸ்னானம்
பல் துலக்கிய பின் குளிக்க வேண்டும். மஹா நதியின் கரையில் இருப்போர் அதிலேயே குளிக்க வேண்டும். (தீர்த்தக்கரை பாவியாகி விடக்கூடாது!) மற்ற எதில் ஸ்னானம் செய்யலாம் என்பதை பின்னால் பார்க்கலாம்.
இப்படி ஸ்னானம் செய்வதால் பலம், அழகு, புகழ், தர்மம், ஞானம், சுகம். தைரியம், உயர்ந்த ஆரோக்கியம் ஆகியன கிட்டுகின்றன.
ஸ்னானம் செய்யாமல், ஜபம் செய்யாமல், ஹோமம் செய்யாமல், தானம் கொடுக்காமல் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்ட பொருள் மலம், சீழ், ரத்தம், புழு, விஷம் ஆகியவற்றுக்கு சமானமாகும் என்பது கருத்து. வேத கர்ம சூத்திரங்கள் எதை பார்த்தாலும் ஸ்னானம் செய்து விட்டு என்றே ஆரம்பிக்கும். ஸ்னானம் செய்யாதவன் ஜப ஹோமங்களுக்கு யோக்கியன் அல்ல என்பதே கருத்து.
ப்ரம்ஹச்சாரி காலை ஒரு வேளை செய்தால் போதும். க்ருஹஸ்தன் காலை மத்தியானம் என இரு வேளை செய்ய வேண்டும். சன்யாசிகள் இவற்றுடன் மாலையும் - ஆக 3 வேளை - செய்ய வேண்டும்.
உடல் நலமாக இல்லாத போதும் நீர் பற்றாக்குறை இருந்தாலும் ஒரு வேளை ஸ்னானம் போதும். உடல் நலமில்லாதவன் வெந்நீரிலும் செய்யலாம்.
கால் அலம்புதல். காயத்ரி ஜபம், அர்க்யம் ஆகியனவற்றை ஸூர்ய முகமாக செய்வது போலவே இயன்றபோது ஸ்னானத்தையும் ஸூர்யனை எதிர் கொண்டு செய்ய வேண்டும்.
நதியின் ப்ரவாகத்துக்கு எதிர் கொண்டு செய்ய வேண்டும். தேவதைகளுக்கு எதிரில் அமைந்த குளங்களானால் தேவதையை நோக்கி செய்ய வேண்டும்.
ஸ்னானத்திற்கு முன் சங்கல்பம், வருண ஸூக்த ஜபம், தீர்த்த ப்ரோக்‌ஷணம், அகமர்ஷண ஸூக்த ஜபம், தேவ தர்பணம் ஆகியன ஸ்னானத்திற்கு அங்கங்கள் ஆகும்.
ஜலத்தின் மத்தியில் நின்று வேறு எண்ணங்கள் இல்லாமல் ஹரியை நினைத்து முழுகியபடி மும்முறை அகமர்ஷண ஸூக்தத்தை ஜபிக்க வேண்டும். இப்படி செய்பவன் மீண்டும் பிறக்க மாட்டான்.


Thursday, July 21, 2016

அந்தணர் ஆசாரம் - 4





அடுத்து பல் துலக்குதல்.
கிழக்கு நோக்கி உட்கார்ந்து பல் துலக்க வேண்டும். வெறும் வாய் சுத்தத்திற்கு என்று இல்லாமல் இதை ஒரு கர்மாவாகவே சொல்லி இருக்கிறது. ரிஷி, சந்தஸ் தேவதையுடன் ஆயு: என்னும் மந்திரத்தால் பல்குச்சியை அபிமந்திரித்து துலக்க வேண்டும். குச்சி சுண்டு விரல் பருமனாகவும் 8 அங்குல நீளமும் இருக்க வேண்டும்.
முள் உள்ள எல்லா மரங்களின் குச்சிகளும் பல் துலக்க தகுந்தவைகள். அவை புண்ணியத்தை தரும். பால் உள்ள குச்சிகளாலும் துலக்கலாம்; அவை கீர்த்தியை கொடுக்கும்,
வேம்பு, நாயுருவி, அத்தி, க்ளா, கருங்காலி, கடம்பை, புன்கு, சாரடை, மூங்கில், வெண்மந்தாரை, நாவல், எருக்கு,வில்வம் - இவை சிலாக்கியமானவை. வில்வத்தை சில மஹரிஷிகள் ஒத்துக்கொள்ளவில்லை.
அச்வத்தம் (ஆல்), புரசு, சிம்சுபா ஆகியன தவிர்க்க வேண்டியவை. சதுர்தசீ, அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி, சங்க்ரமணம் ஆகிய தினங்களில் குச்சியால் பல் துலக்கக்கூடாது. ச்ராத்தம், உபவாஸம் ஆகிய தினங்களில் பல் துலக்குதல் தவிர்க்கப்பட வேண்டும். துலக்கினால் ப்ராயச்சித்தம் 100 காயத்ரி ஜபித்த நீரை பருகுதல்.
குச்சி இல்லாமல் இலைகளாலும் புல்லாலும் பல் துலக்கலாம். அமாவாசை ஏகாதசி தவிர இதற்கு விலக்கு இல்லை. நாவல், இச்சி, மாவிலை ஆகியனவற்றுக்கு இந்த விலக்கு கூட இல்லை. இவற்றுள் மாவிலை மிகவும் சிலாக்கியமாகும். கன்னிகை, ப்ரம்ஹச்சாரி, விதவை ஆகியோர் குச்சியால் என்றும் பல் துலக்கக்கூடாது.
சூர்ணங்களை பயன்படுத்தினால் ஆள்காட்டி விரலைத்தவிர்த்து மற்ற விரல்களால் துலக்கலாம்.
அலோபதி மருத்துவத்தில் தினசரி இரவு படுக்கப்போகும் முன் பல் துலக்கச்சொல்கிறார்கள். நெடு நேரம் உணவுபொருட்கள் பல்லுடன் சேர்ந்து இருப்பது இரவு நேரத்தில்தான். உணவு உண்ட பின் 16 முறை வாய்கொப்பளிக்கும் பழக்கம் இல்லாமல் போய்விட்டதால் வாயிலிருந்து எல்லா உணவுத்துகள்களையும் நீக்க இது அவசியமாகிவிட்டது.