அனாயாஸேன
மரணம்ʼ
வினாதை³ன்யேன
ஜீவனம்ʼ
தே³ஹி
மே க்ருபயா ஶம்போ⁴ த்வயி
ப⁴க்திம்ʼஅசஞ்சலாம்
இது
பூஜா பத்ததி புத்தகத்தில்
இருக்கிற ப்ரார்த்தனை.
நமக்கா சரியான
ப்ரார்த்தனை செய்யத்தெரியாது.
என்
மாமாவிடம் பேசிக்கொண்டு
இருந்தேன். அவன்
யோகி ராம்சுரத் குமார் பக்தர்.
அவரிடம்
உனக்கு என்ன வேணுமோ கேளு
என்றாராம். இவர்
ஒண்ணுமே கேட்கலை.
ஏன்
மாமா என்றேன்.
“டேய்
ஒத்தர் நிறைய தங்க காசு கொடுக்க
தயாரா இருக்கறப்ப கொஞ்சமே
கொஞ்சம் பித்தளை காசு கொடுன்னு
கேட்கறாப்பல ஆயிடும்.
இவங்களுக்கே
நமக்கு என்ன வேணும்ன்னு
தெரியும்; நாம
எதுக்கு கேட்க்கணும்?”
என்றார்.
சில
பல வருஷங்களாக எனக்கு பிரார்த்தனை
செய்யவே வராது. என்னத்தான்
பூஜை செய்ய உக்காரும்போது
இதை பிரார்த்தனை செஞ்சுக்கணும்
அதை செஞ்சுக்கணும்ன்னு
நினைச்சுகொண்டு உக்காந்தாலும்
அந்த நேரத்துல ஒண்ணும் வராது.
கடந்த
அஞ்சு வருஷத்துல எவ்வளோ தரம்
தனியா பிரார்த்தனை செஞ்சேன்னு
நினைச்சுப்பாத்தா ரெண்டு
மூணு தரம் இருக்கலாம்;
அதுவும்
எந்த சொந்த சமாசாரத்துக்கும்
இல்லை!
மேலும்
ரமணர் பக்கம் வந்த பிறகு இது
சுத்தமா இல்லாம போயிடுத்து!
எப்பவும்
என்ன நடக்கணுமோ அதான் நடக்கறது;
இதுல நாம
கேட்க என்ன இருக்கு?
ந்னு
தோணிப்போச்சு. பரம
சௌக்கியம்!
இந்த
சமயத்துல ரொடீனா சொல்கிற
இந்த ஸ்லோகம்தான் அப்ளை
ஆகிறது.
அனாயாஸேன
மரணம்ʼ
வினாதை³ன்யேன
ஜீவனம்ʼ
தே³ஹி
மே க்ருபயா ஶம்போ⁴ த்வயி
ப⁴க்திம்ʼ
அசஞ்சலாம்
என்ன
கேட்கிறோம்?
அனாயாஸேன
மரணம்.
பிறக்கிறவங்க
எப்படியும் இறந்துதானே ஆகணும்?
ரைட்டு!
போகலாம்.
ப்படி
போகீற போது இழுத்து பிடிச்சுகிட்டு
நாமும் கஷ்டப்பட்டு மத்தவங்களையும்
கஷ்டப்படுத்திக்கொண்டு ஏன்
போகணும்?
இடக்கை
நொந்ததென்றார் இறந்தொழிந்தாரே
ந்னு பட்னு போகலாமே?
சில
பேருடைய இறப்பு பத்தி
கேள்விப்பட்டு இருக்கேன்.
ஒத்தர் சந்தியாவந்தனம் செய்ய
உக்காந்தார்.
ஆசமனம்
செய்தார்.
அச்சுதாய
நமஹ,
அனந்தாய
நமஹ ...
கோவிந்தாய வுக்கு
அவர் இல்லை!
சாய்ஞ்சுட்டார்!
இன்னொருத்தர்
கோவிலுக்குப்போனார்.
ஸ்வாமி
தரிசனம் எல்லாம் ஆச்சு.
வெளியே
வரும்போது கீழே விழுந்து
நமஸ்காரம் செய்வோமில்லையா?
செய்தார்.
எழுந்திருக்கவில்லை.
கூட
வந்தவங்க எவ்வளோ நேரம் நமஸ்காரம்
செய்வீங்கன்னு எழுப்பப்பாத்தா
பிராணனை விட்டுவிட்டார்ன்னு
தெரிஞ்சது!
போறதுன்னா
இப்படிப்போக வேணாம்?
அதுக்குத்தான்
பிரார்த்தனை.
அனாயாஸேன
மரணம்,
No comments:
Post a Comment