ஸ்னானம்
பல்
துலக்கிய பின் குளிக்க வேண்டும்.
மஹா நதியின்
கரையில் இருப்போர் அதிலேயே
குளிக்க வேண்டும்.
(தீர்த்தக்கரை
பாவியாகி விடக்கூடாது!)
மற்ற எதில்
ஸ்னானம் செய்யலாம் என்பதை
பின்னால் பார்க்கலாம்.
இப்படி
ஸ்னானம் செய்வதால் பலம்,
அழகு,
புகழ்,
தர்மம்,
ஞானம்,
சுகம்.
தைரியம்,
உயர்ந்த
ஆரோக்கியம் ஆகியன கிட்டுகின்றன.
ஸ்னானம்
செய்யாமல்,
ஜபம்
செய்யாமல்,
ஹோமம்
செய்யாமல்,
தானம்
கொடுக்காமல் சாப்பிடக்கூடாது.
அப்படி
சாப்பிட்ட பொருள் மலம்,
சீழ்,
ரத்தம்,
புழு,
விஷம்
ஆகியவற்றுக்கு சமானமாகும்
என்பது கருத்து.
வேத கர்ம
சூத்திரங்கள் எதை பார்த்தாலும்
ஸ்னானம் செய்து விட்டு என்றே
ஆரம்பிக்கும்.
ஸ்னானம்
செய்யாதவன் ஜப ஹோமங்களுக்கு
யோக்கியன் அல்ல என்பதே கருத்து.
ப்ரம்ஹச்சாரி
காலை ஒரு வேளை செய்தால் போதும்.
க்ருஹஸ்தன்
காலை மத்தியானம் என இரு வேளை
செய்ய வேண்டும்.
சன்யாசிகள்
இவற்றுடன் மாலையும் -
ஆக 3
வேளை -
செய்ய
வேண்டும்.
உடல்
நலமாக இல்லாத போதும் நீர்
பற்றாக்குறை இருந்தாலும்
ஒரு வேளை ஸ்னானம் போதும்.
உடல்
நலமில்லாதவன் வெந்நீரிலும்
செய்யலாம்.
கால்
அலம்புதல்.
காயத்ரி
ஜபம், அர்க்யம்
ஆகியனவற்றை ஸூர்ய முகமாக
செய்வது போலவே இயன்றபோது
ஸ்னானத்தையும் ஸூர்யனை எதிர்
கொண்டு செய்ய வேண்டும்.
நதியின்
ப்ரவாகத்துக்கு எதிர் கொண்டு
செய்ய வேண்டும்.
தேவதைகளுக்கு
எதிரில் அமைந்த குளங்களானால்
தேவதையை நோக்கி செய்ய வேண்டும்.
ஸ்னானத்திற்கு
முன் சங்கல்பம்,
வருண ஸூக்த
ஜபம், தீர்த்த
ப்ரோக்ஷணம்,
அகமர்ஷண
ஸூக்த ஜபம்,
தேவ தர்பணம்
ஆகியன ஸ்னானத்திற்கு அங்கங்கள்
ஆகும்.
ஜலத்தின்
மத்தியில் நின்று வேறு எண்ணங்கள்
இல்லாமல் ஹரியை நினைத்து
முழுகியபடி மும்முறை அகமர்ஷண
ஸூக்தத்தை ஜபிக்க வேண்டும்.
இப்படி
செய்பவன் மீண்டும் பிறக்க
மாட்டான்.
No comments:
Post a Comment