Pages

Monday, March 31, 2008

வழி-2



பலனை எதிர்பாக்காதேன்னா அனேகமா யாருமே அப்படி செய்ய மாட்டாங்க. யாரா இருந்தாலும் எதோ ஒரு பலன் - விளைவு நடக்கும்ன்னுதானே வேலை செய்யறோம். அத எதிர் பாக்காதேன்னு சொன்னா யார் வேலை செய்வாங்க?
ஒரு வேலையை செய்யலாம், செய்யாம விடலாம் அல்லது வேற மாதிரி செய்யலாம். அதுக்கு உனக்கு அதிகாரம் இருக்கு! ஒரு போதும் பலன்ல அதிகாரமில்ல.
பலன் இப்படிதான் இருக்கணும்னு சொல்கிறத்துக்கு நமக்கு அதிகாரம் இல்ல. ஏன்னா பலன் நம்ம மட்டுமே பொருத்தது இல்ல. நேரம், இடம், நாம் செய்யற வேலைல பங்கு இருக்கிற மத்தவங்க எப்படி என்ன செய்யறாங்க இதெல்லாம் வருது இல்லையா?

நாம நல்லா படிச்சு பரீட்சை எழுதலாம். அதை திருத்தறவருக்கு அது சரியா போய் சேரனும். அவர் அப்ப நல்ல மூட்ல இருக்கனும். ஏதாவது பக்கத்தை பாக்காம விட்டுடக்கூடாது. மார்க் கூட்டி போடறது சரியா இருக்கனும். அத சரியா கணினில பதியனும். நம்ம மார்க் வந்து சேரத்துக்குள்ளே இப்படி எவ்ளோ விஷயம் இருக்கு?

எதுவுமே இப்படித்தான் இருக்கணும்ன்னு நினைக்கிறப்போதான் நமக்கு பிரச்சினை வருது. நடக்குமோ நடக்காதோன்னு தூக்கம் கெட்டு போகுது. நடக்கலேனா என்ன செய்யறதுன்னு ரொம்ப யோசனை செய்ய ஆரம்பிக்கிறோம். நினைச்சபடி நடக்கலைனா அதுக்கு தடையா இருந்தது எதுவோ, அது மேல கோபம் வருது. அதப்பத்தி ஒண்ணும் செய்ய முடியலைனா விரக்தி வருது.

நம்மால முடிஞ்ச வரை செஞ்சோம். அப்புறம் அவன் விட்ட வழின்னு யார் நினைக்கிறாங்களோ அவங்க அவ்வளவு கஷ்டப்பட மாட்டாங்க. மனசு அமைதியா இருப்பதாலே அவரால வேலையை நல்லாவே செய்ய முடியும்.

முன் காலத்துல இந்த கர்மாங்கிறதை அவரவர் ஜாதிக்கு ஏற்பட்ட கர்மான்னு சொன்னாங்க. அதுவும் முக்கியமா யாகங்கள், ஹோமங்கள், பூஜைகள் இதையே சொன்னாங்க. அது ஒரு காலம். அப்பல்லாம் ஒருத்தர் வேலையை வேறு ஒருத்தர் செய்ய மாட்டாங்க. மத்தவங்க வேலையை பறிச்சு கொள்ளக் கூடாதுன்னு ஒரு கட்டுப்பாடு. இப்ப பல வருஷங்களா இது அடிபட்டு போயாச்சு. மகாபாரத காலத்துலேந்தே ஜாதி கலப்பு ஏற்பட்டு போயாச்சு. பல வேலைகள் காணாமப்போச்சு. பல புது வேலைகள் வந்தாச்சு. அதனால இப்ப இத எப்படி எடுத்துக்கிறது?
பகவான் எதோ ஒரு வேலைல இப்ப நம்மள கொண்டு வெச்சிருக்கான் இல்லையா அந்த கர்மான்னு எடுத்துக்கணும்.

நாம செய்யற வேலையை சிறப்பா செய்யனும். முழு ஈடுபாட்டோட திறமையோட, கவனத்தோட செய்யனும். எந்த பலன் கிடைச்சாலும் சரி, இது பகவான் நமக்கு கொடுத்தது ன்னு எடுத்துக்கணும். அது நாம் நினைச்சதுக்கு மேலே இருக்கலாம்; நாம் நினைச்சபடியே இருக்கலாம்; குறைவா இருக்கலாம்; இல்லை வேற மாதிரியே இருக்கலாம். எதானாலும் அதை அப்படியே ஏத்துக்கணும்.

இது கர்மா வழி.

அடுத்து எந்த வழி?
கடலூர் பண்ணுருட்டி வழியா சென்னை.

5 comments:

sury siva said...

//ஆன்மீகம்4டம்ப்மீஸ்//


உண்மை என்ன என
உணராத நிலையில்
உண்மையில் நாம் எல்லோருமே
dummies
தான்.
உண்மை இதுவெனத்தெரிந்துவிடின்
ஊமையாய்ப்போவோம்.

இதில் ஐயம் உண்டோ ?

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://pureaanmeekam.blogspot.com
http://arthamullavalaipathivugal.blogspot.com

திவாண்ணா said...

வாங்க சூரி ஐயா! வணக்கம்.
நீங்க சொல்றது உண்மையே. கண்டவர் விண்டிலர் ன்னு சொல்லி இருக்காங்க இல்லையா? அது ரொம்பவே உசந்த நிலை.
அதுக்கு கீழே நாமெல்லாம். நான் எழுதுவதே எழுதும்போது இன்னும் கொஞ்சம் புரியுமோ என்றுதான்.
புரியும் வரை dummies . புரிஞ்ச பிறகு dumb.
சரிதான்.

ambi said...

அருமையா கர்ம யோகத்தை பத்தி சொல்லி இருக்கீங்க.

ரொம்ப சுருக்கமா முடிச்ச மாதிரி இருக்கு.
பரவாயில்ல, கோவில்ல சுண்டல் ப்ரஸாதம் கொஞ்சம் தான் கொடுப்பாங்க, ஆனா சுவையா இருக்குமே! அதான் வேணும். :))

கீதைல சொன்ன கர்ம யோகத்தை எளிய தமிழில் சொன்னதுக்கு மிக்க நன்னி.


//வேலை அதிகமா இருக்கிறப்போ உங்களையே எழுத சொல்லலாமான்னு நினைக்கிறேன்.
//

சரியா போச்சு! இரும்பு அடிக்கற எடத்துல ஈக்கு என்ன வேலை?னு கமண்டு விழும். :D

முதலில் தன் நெஞ்சே தன்னை சுடும். :))

திவாண்ணா said...

@ அம்பி
முடிக்கலையே அம்பி. இது வெறும் முன்னோட்டம்தான். வழிகளைப்பத்தி கொஞ்சம் தெரிஞ்சுகிட்டு மேலே விரிவா போகப்போறோம்.
அவ்ளோ சுலபமா விடறதா இல்லை!

மெளலி (மதுரையம்பதி) said...

//நினைச்சபடி நடக்கலைனா அதுக்கு தடையா இருந்தது எதுவோ, அது மேல கோபம் வருது. அதப்பத்தி ஒண்ணும் செய்ய முடியலைனா விரக்தி வருது. நம்மால முடிஞ்ச வரை செஞ்சோம். அப்புறம் அவன் விட்ட வழின்னு யார் நினைக்கிறாங்களோ அவங்க அவ்வளவு கஷ்டப்பட மாட்டாங்க. மனசு அமைதியா இருப்பதாலே அவரால வேலையை நல்லாவே செய்ய முடியும்.//

நிதர்சனமான உண்மை....