ராஜ யோக வழி:
யோகம் ன்னு பல இடங்கள்ல பல விதமா சொல்லை பயன்படுத்தறாங்க. யோகம் ன்னா ஒண்ணு சேக்கிறது. ராஜ யோகம் என்கிறது அட்டாங்க யோகம் னு சொல்லுவாங்க. அதில 8 படிகள். கொஞ்சம் புரியாட்டாலும் பட்டியல் போட்டுடுவோம்.
1. யமம்
2. நியமம்
3. ஆசனம்
4. ப்ராணாயாமம்
5. ப்ரத்யாகாரம்
6. தாரணை
7. தியானம்
8. சமாதி
என்னங்க நீங்க சமாதி, எமனை எல்லாம் கூப்பிட்டு பயமுறுத்தறிங்க?
பயப்படாதீங்க. சும்மா ஒரு பதிஞ்சு வக்கதான் அப்படி எல்லாம் சொன்னேன். அதெல்லாம் என்னன்னு பாத்தா பயம் இருக்காது. சரியா?
1. யமம் -எமன் இல்ல- அப்படின்னா சுய கட்டுப்பாடு.
அட, அத அப்படி முன்னேயே சொல்லக்கூடாதா?
இல்லைங்க. எல்லா சமாசாரத்துக்கும் ஒரு தனி அகராதி உண்டு. அத தெரிஞ்சு கிட்டோம்னா பின்னால பயன்படும். அதனால சொல்றேன்.
2. நியமம்: இது நமக்கு பழகினதுதானே?பூஜை கீஜை செய்யறப்ப நியமமா இருக்கணும்னு!
பெரியவங்க வீட்டுல ஆரம்பிச்சு வச்ச பழக்கங்களை கடை பிடிக்கிறது; அத பத்தி ஏன் எதுக்கு எப்படின்னு தெரிஞ்சுகிறது; அதுல ஈடு பாடு காட்டறது- இதான் நியமம்.
3. ஆசனம்: இதுதாங்க யோகா யோகான்னு எங்க பாத்தாலும் பேசறது. யோகாசனம். அதாவது செய்கைகளால உடம்பையும் மனசையும் இணைக்கிறது.
கொஞ்சம் விரிவா பாக்கலாமா?
இப்ப சில பேர் ஒரே டென்ஷன் பட்டுகிட்டு இருப்பாங்க. அவங்களுக்கு தூக்கம் வராது.
அட இதெல்லாம் தெரியாதா என்ன?
சரி சரி மேலே கேளுங்க. சிலர் மனசில நிறைய கஷ்டங்களை போட்டு பூட்டி வச்சு இருப்பாங்க. அவங்க காலைலை மலம் கழிக்க கஷ்டப்படுவாங்க. சிலர் அடிக்கடி மலம்கழிக்க போக வேண்டி இருக்கும். சிலருக்கு தோலெல்லாம் அரிப்பு, சிரங்கு போல வரும்.
இதுக்கெல்லாம் நாம வைத்தியர் கிட்டே போனா இருக்கிற, இல்லாத பரிசோதனை எல்லாம் பண்ணிட்டு ஒண்ணுமே இல்லைம்பாங்க. நமக்கா கோவமா வரும். பின்ன கஷ்ட படறது நாமதானே! அதாவது உடல் ரீதியா கோளாறு இல்லைன்னு அர்த்தம்.
அப்படின்னா?
நம் மனசுக்கும் உடம்புக்கும் ஒரு தொடர்பு இருக்கு. மனசில இருக்கிற வியாதி உடல் உபாதைகளா வெளிப்படும். அதுக்கு ஒரு பேரு வச்சிருக்காங்க. psycho somatic.
என்னது நாம சைக்கோவா?
நாம நினைக்கிற மாதிரி இல்ல அண்ணாச்சி, இங்க அதுக்கு “மன” ன்னு பொருள். சோமா =உடம்பு. அதாவது மனசால வர உடல் வியாதி.
இப்ப பாருங்க, மனசு உடம்ப பாதிக்குது; அதே போல உடம்பும் மனச பாதிக்கணுமே?
அதானே!
அதேதான். நமக்கு ரொம்ப சுரம் அடிக்குது. நாலு நாளா விடலை. அப்ப மனசு எப்படி இருக்கும்? ஒரு டிப்ரெஷன் வரும். சோர்ந்து போயிருவோம்.
இப்படி மனசு உடம்பையும் உடம்பு மனசையும் பாதிக்கிறதை நமக்கு சாதகமா பயன்படுத்திக்கலாம்.
எப்படி?
8 comments:
எப்படி???
காத்திருக்கோம்.
3 நாட்களுக்கு முன்பு கம்பெனி பாஸிடம் கால் கடுதாசி கொடுக்கும் போது இந்த மாதிரி பரபரப்பு இருந்தது,ஏன் என்று தெரியவில்லை.வேண்டாம் என்றாலும் இந்த பரபரப்பு ஒட்டிக்கொள்கிறது.
வயதாகிக்கொண்டு வருகிறது?
வாங்க குமார். கால் கடிதாசியா, அடப்பாவமே! எப்படிங்கிறதை நாளையே தெரிஞ்சுக்கலாம். வயதுக்கும் ஆன்மீகத்துக்கும் ரொம்ப ஒண்ணும் தொடர்பு இருக்கிறதா சொல்ல முடியாது. அடிபட்டு ஆன்மீகம் பக்கம் திரும்ப வாய்ப்பு அதிகம் அவ்வளவே.
நல்ல விளக்கமா போகுது பதிவு. நெசமாலுமே டம்மீஸ் தான். :)
ஆமாம், 'காமா-சோமான்னு இருக்கு' அப்படின்னு ஒரு சொலவடை உண்டே, அதுக்கும் இந்த பதிவுல நீங்க சொல்லியிருக்கும் 'சோமா' வுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? :)
கொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் நியமத் திடையில்நின் றானே.
பொழிப்புரை :
கொல்லாமை, பொய்யாமை, விருப்பு வெறுப்புக்கள் இன்மை, கரவாமை, மாசின்மை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, என்னும் பத்தனையும் முற்ற உடையவனே இயம யோகம் கைவரப் பெற்றவனாவான்.//
யமம் பற்றிய பாடல் திருமூலரின் திருமந்திரத்தின் மூன்றாம் தந்திரத்தின் முதல் பாடல்,
@கீதா
நன்றி அக்கா. மற்றவர்களும் இது போல வலு சேர்க்கும் பின்னூட்டங்களை இடலாம்.
யமம், நியமம், ஆசனம் வரைக்கும் சொல்லிட்டீங்க. அடுத்த படிகளையும் படிக்கிறேன். :-)
மெதுவா ஒவ்வொன்னா படிக்கிறேன்னு சொன்னேன்ல. இப்பத் தான் இந்த இடுகைக்கு வந்திருக்கேன். :-)
பரவாயில்லை குமரன்.
மெதுவாகவே படித்து கொண்டு வரலாம். ஒரு பிரச்சினையும் இல்லை!
Post a Comment