Pages

Wednesday, April 13, 2011

வ்யுத்தான ப்ரத்யயம்:



तच्छिद्रेषु प्रत्ययान्तर्णि संस्कारेभ्यः ।।27।।

தச்சி²த்³ரேஷு ப்ரத்யயாந்தர்ணி ஸம்°ஸ்காரேப்⁴ய​: || 27||

தச்சி²த்³ரேஷு = விவேக க்யாதி ரூபமான சித்த விருத்தி தாரையின் இடைவெளிகளில்; ஸம்°ஸ்காரேப்⁴ய​: = வேறு விதமான சித்தவிருத்தியை உண்டு பண்ணுகிறதாயும், வாஸனா ரூபமாயும் இருக்கிற ஸம்ஸ்காரங்களில் இருந்து; ப்ரத்யயாந்தர்ணி = நான் என்னுடையது என்பதற்கு வேறு விதமான ஞானங்கள் உண்டாகின்றன.

விவேக க்யாதி ரூப சித்தவிருத்தியில் இருப்பவன் மோக்ஷத்தில் நிலைத்து இருக்கிறான். இதில் எல்லா நேரமும் இருக்கும் நிலை வரும் வரை அவன் அவ்வப்போது நடுவில் வாசனைகளால் பாதிக்கப்படுவான். அப்போது வேறு விதமான ஞானங்கள் உண்டாகின்றன. இந்த இடைக்காலத்தில் உண்டாகிற நான் எனது முதலான சித்த விருத்திகள் வ்யுத்தான ப்ரத்யயம் எனப்படும். பயிற்சி தொடர தொடர இவை குறைந்து காணாமல் போகும்.

2 comments:

Geetha Sambasivam said...

மோக்ஷத்தில் நிலைத்து= சமாதியில் ஆழ்ந்து போவதைக் குறிக்குமா?? மோக்ஷம் என்பதும் சமாதித் தத்துவமும் (ஒரே பரம்பொருளில் கரைந்து போவது) ஒன்றே தானா??

திவாண்ணா said...

சமாதியில் பல வகை உண்டுன்னு பார்த்தோமில்லையா?
மோக்ஷத்தில் வகைகள் இல்லை. ஒரே கரைந்து போதல்தான்.