Pages

Friday, April 22, 2011

யோக சாஸ்திரம் நிறைவு...




  पुरुषार्थशून्यानां गुणानां प्रतिप्रसवः कैवल्यं स्वरूपप्रतिष्ठा वा चितिशक्तिरिति ।।34।।
புருஷார்த²ஶூந்யாநாம்° கு³ணாநாம்° ப்ரதிப்ரஸவ​: கைவல்யம்° ஸ்வரூபப்ரதிஷ்டா² வா சிதிஶக்திரிதி || 34||

புருஷார்த²ஶூந்யாநாம்° = இனி செய்ய வேண்டிய புருஷார்த்தங்கள் இல்லாத; கு³ணாநாம்° = (புத்தி முதலிய பரிணாமங்களை அடைந்த சத்வம் முதலான) குணங்களின்; ப்ரதி ப்ரஸவ​: = தத்தம் காரணத்தில் ஏற்படும் லயத்தால் ப்ரக்ருதியில் ஒடுங்கி விடுதலானது; கைவல்யம்° =கைவல்யம் எனப்படும்; ஸ்வரூப = சொந்த ரூபத்தில்; ப்ரதிஷ்டா² = நிலை பெறல்; வா = அல்லது; சிதிஶக்தி = சத் சக்திக்கு; இதி = இவ்வாறு (யோக சாஸ்திரம் நிறைவுற்றது)

ஸத்வம் முதலான குணங்கள் புத்தி முதலிய பரிமாணங்களை அடைகின்றன. போகம், விவேக க்யாதி என்ற இரண்டு குணங்களையும் ஒரு புருஷனுக்கு சம்பாதித்து கொடுத்துவிட்டால் அவற்றின் காரியம் அத்துடன் முடிந்துவிடும். அவை சம்பாதித்து கொடுக்க வேண்டிய புருஷார்த்தம் ஏதும் இல்லை. வேலை இல்லாததால் அவை தாம் வந்த வழியே தம் தம் காரணத்தில் லயமடைகின்றன. மனதில் உள்ள ஸமாதி நிரோதம், வ்யுத்தானம் ஆகியன மனதிலும், மனம் அஹம் தத்துவத்திலும், அஹம் தத்துவம் மஹத் தத்துவத்திலும், மஹத் ப்ரதானத்திலும் லயமாகும். ஒரு தனி நபரின் விஷயத்தில் இதுதான் மோக்ஷமாகும்.

இன்னொரு வழியில் சொல்ல சுத்த சைதன்யமான புருஷனுக்கு அந்தக்கரணம் முதலிய உபாதிகள் விலகி, தன் உண்மையான சொரூபத்தில் நிலை பெறுதல் மோக்ஷம் ஆகும். இந்த யோக சாத்திரத்தில் சொல்லியுள்ள சாதன அனுஷ்டானத்தால் ஒவ்வொருவரும் புருஷ விவேக ஞானத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்பது தெளிவு.

इति पातञ्जलि योगसूत्रं सम्पूर्णम् ।।
இதி பாதஞ்ஜலி யோக³ஸூத்ரம்° ஸம்பூர்ணம் ||
ॐ शान्तिः शान्तिः शान्तिः ।
ஓம்° ஶாந்தி​: ஶாந்தி​: ஶாந்தி​: |
சுபம்!

4 comments:

Karthik Raju said...

நான் இன்னும் 90% படிக்க பாக்கியுள்ளது . ஆனாலும் நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். நான் விரைவில் படித்துவிடுவேன் ஏன் நம்புகிறேன். நன்றி .
இப்போது comments அதிகம் வருவதில்லயே?

திவாண்ணா said...

ஆஹா! நன்றி கார்திக்.
யோக சாஸ்திரம் கடினமான பாடம் என்று புரிந்து கொண்டு இருப்பீர்க்ள். ஒவ்வொரு சூத்திரத்தையும் உள்ளே வாங்காமல் அடுத்ததுக்கு போக முடியாது. உள் வாங்கிவிட்டால் கேள்வியும் இராது. அதனால் பின்னூட்டங்கள் இல்லை என்றூ நினைக்கிறேண்.

Geetha Sambasivam said...

படிச்சேன் என்றாலும் முழுசாப் புரிஞ்சதுனு சொல்ல முடியாது. ஆனாலும் திரும்பத் திரும்பப் படிக்கிறேன். என்னிக்காவது புரியலாம். நன்றி.

திவாண்ணா said...

இப்போதைக்கு குண்டசா புரிஞ்ச்சக்கூட சரிதான்!. திருப்பி திருப்பி படிக்கத்தான் புரியும்.