ம்ம்ம் சரி, ஹோமங்களில நல்ல பலன் இருந்தாலும் அதை சரியா செய்ய இப்பல்லாம் வசதி குறைவாத்தான் இருக்கு.
என் கதை வேற. நானே செய்ய பழகிட்டேன். மத்தவங்க? நல்லா செய்யற ஆசாமியை சொல்லு, எனக்கு வேணும்ன்னு நண்பர்கள் கேட்டத்தான் இதோட சீரியஸ்னஸ் சரியா புரிஞ்சது...
இப்படி ஒரு சூழலில ஆர்ய சமாஜ் துவக்கின அக்னிஹோத்ரமே பரவாயில்லைன்னு தோணிடுத்து. வேண்டியதெல்லாம் ஒரு பிரமிட் - தலைவெட்டி கவிழ்த்த தோற்றத்தில ஒரு தாமிர பத்திரம். விலைக்கு கிடைக்கும்ன்னு நினைக்கிறேன். சரியான சூரிய உதய சூரிய அஸ்தமன நேரம் என்கிறதை முக்கிய கண்டிஷனா வெச்சு இருக்காங்க. அதே மாதிரி சுத்தமான நெய், சுத்தமான நாட்டு மாட்டு சாணத்தில செய்த வரட்டி. அந்தந்த வேளைக்கு அக்னி எழுப்பி சரியான நேரத்துக்கு இரண்டே -அக்னிக்கும் ப்ரஜாபதிக்கும்- ஹோமம். யார் வேணுமானாலும் செய்யலாம் என்கிறாங்க.
வெற்றிடம் இயற்கை இல்லை. ஒரு காரியம் கெட்டுப்போச்சுன்னா இன்னொன்னு அதோட இடத்தை பிடிச்சுக்கும். அது மாதிரி க்ளாசிகல் அக்னிஹோத்ரம் காணாம போகிற இந்த நாட்களில இது பிரபலம் ஆகிட்டு இருக்கு. அக்னிஹோத்திரம் என்கிறது போபால் விஷ வாயு நிகழ்ச்சிக்கு அப்புறமா ப்ரபலமாயிடுத்து. ஒத்தர் வீட்டில அக்னிஹோத்திரம் செய்ய அந்த வீட்டில இருந்தவங்க பாதிப்படையலை ன்னு செய்தி எல்லாம் வந்தது. அவர் செய்துகிட்டு இருந்தது இந்த மாதிரியான அக்னிஹோத்திரம்தான். இதுக்கே இவ்வளவு சக்தின்னா க்ளாசிகல் அக்னிஹோத்திரம் எவ்வ்வளோ சக்தி வாய்ந்ததுன்னு நினைப்பை தவிர்க்க முடியலை.
சீர்காழியில ஒரு வீட்டில தங்கி அக்னிஹோத்திரம் செய்ய ஆள் தேடிகிட்டு இருக்கோம். வீடு, அதோட பராமரிப்பு இலவசம். கர்மா கெடாத வரை தானே சுயமா சம்பாதிக்க வேலைக்கு போகலாம். மாசம் ரெண்டு இஷ்டி, தினசரி அக்னிஹோத்திரம் செய்ய உதவித்தொகை ரூபாய் 7000 கொடுக்க ரெடி. யாரும் முன் வரலை. என்ன செய்யலாம்? :-((((((
சரி இன்னைய சூழ்நிலையில என்ன நம்மால செய்ய முடியும்? வீடு நம்மதா இருந்தா அக்னிக்கு ஒரு இடம் ஒதுக்கி தினசரி ஹோமம் செய்யலாம். அது க்ளாசிகலாவோ ஆர்ய சமாஜ் வழியாவோ இருக்கலாம். க்ளாசிகலா செய்யறவங்க வேதத்துக்கு அதிகாரம் இல்லைன்னா அக்னயே நமஹ, அக்னயே ஸ்விஷ்டக்ருதே நமஹ ன்னு ஹோமம் செய்யலாம். அரிசியை களைந்து ஹோமம். வலது கையில் கட்டை விரல் நீக்கி நான்கு விரல்களில இருக்கிற 12 ரேகைகளும் மறைகிற அளவு ஒரு ஆஹுதின்னு கணக்கு. இரண்டாவது ஹோமத்துக்கு முதல் ஹோமத்தைவிட கொஞ்சம் அதிகமாக இருக்கணும்.
அக்னி வழிபாடு மறைய மறைய அக்னியில் தோன்றிய முருகன் வழிபாடு அதிகமாகிட்டு இருக்கோன்னு ஒரு எண்ணம்.....
5 comments:
திவா அண்ணா ,
பொழப்புக்காக வெளிநாட்டுக்கு போன எனக்கு நித்திய ஹோமம் பண்ணனும்ன்ர பேராச இருக்கு.ஆனா என்ன பண்றது...ப்ராப்தம் இல்லாம இருந்த நான், இப்ப தகுதியும் எழந்து நோகறேன்...ஒரு நப்பாச..கடல் தாண்டி வந்த எனக்கு நீங்க சொல்ற ஆர்ய சமாஜ அக்னிஹோற்றமாவது follow பண்ற தகுதி கெடைக்குமா? அப்டி இருந்தா கொஞ்சம் help பண்ணுங்க please
மஹேஸ்வரன் சார், உங்களைப்போல நிறைய பேர் இருக்காங்க. என்ன செய்யறது...
ஆர்ய சமாஜ் 'அக்னி ஹோத்ரம்' செய்ய யார் செய்யலாம்ன்னு அவங்க எந்த கட்டுப்பாடும் விதிக்கலை. ஆனா சரியான நேரத்துக்கும், சுத்தமான பொருட்களை கொண்டும் செய்யச்சொல்கிறாங்க. இது நம்ம ஊர்ல செய்கிற ஔபாசனம் போலத்தான். விவரங்கள் இங்கே http://tinyurl.com/3pt85ky
திவா சார், இந்த link share செஞ்சுன்டதுக்கு ரொம்ப நன்றி. என்னோட வைதீக வாதியார்ட்டையும் அட்வைஸ் கேட்டுக்கறேன்.
maheswaran ji, no vaidika immersed in tradition will accept it! but then if you are not in india you have no choice!
ok sir:(
Post a Comment