Pages

Thursday, October 20, 2011

பஞ்சத³ஶீ 1 -5


ஸுப்தோத்த்தி² தஸ்ய ஸௌஷுப்த தமோ போ³தோ⁴ ப⁴வேத் ஸ்ம்ரு«தி​: |
ஸா சாவபு³த்³த⁴ விஷயாவ பு³த்³த⁴ம்° தத்ததா³ தத​: || 5|| 

சுசுப்தி எனும் ஆழ் உறக்கத்திலிருந்து வெளி வருபவன் சுசுப்தியில் ஒன்றும் அறியப்படவில்லை என நினைவில் வைத்திருக்கிறான். நினைவில் வைத்து இருப்பது என்பது முன்பேயே அறியப்பட்டதாகவே இருக்கவேண்டும். ஆகவே ஆழ் உறக்கமானாலும் ஏதும் அறியப்படவில்லை என்பது அறியப்படுகிறது. 

Friday, October 14, 2011

பஞ்சதஶீ 1-4



ததா² ஸ்வப்நே'த்ர வேத்³யந்து ந ஸ்தி²ரம்° ஜாக³ரே ஸ்தி²ரம்|

தத்³பே⁴தோ³'தஸ்தயோ​: ஸம்°விதே³க ரூபா ந பி⁴த்³யதே || 4||




அதே போல் கனவு நிலையும். அதில் காண்பவை நிலையற்றை என்கிறோம். விழிப்பு நிலையில் காண்பவை நிலையானவை எனச்சொல்கிறோம். இப்படி இவை வேறானவை. ஆயினும் இந்த கனவை காண்பதும் நினைவை காண்பதும் ஒரே பொருளாகும்.

Wednesday, October 12, 2011

விடை...


ரஷ்யாவில் அது சின்ன நகரம். எல்லாரும் ஒரு ராபியின் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்தார்கள்.
அவர்களை பொறுத்த வரை அது ஒரு முக்கியமான நிகழ்வு. அரிதாகத்தான் அந்த மாதிரி யாரும் அங்கே வருவார்கள். ஆகவே பலமான ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருந்தன. எல்லாரும் அவர்களை வாட்டி வதைக்கும் பிரச்சினைகளை பட்டியலிட்டு அவற்றுக்கு என்ன தீர்வு என்று கேட்க துடித்துக்கொண்டு இருந்தார்கள்.

அந்த நாளும் வந்தது. டவுன் ஹாலில் எல்லாரும் ஆஜர்.

ராபியும் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தார். அவர் ஒன்றுமே பேசவில்லை. ஒவ்வொருவரையும் உற்று பார்த்தார். கொஞ்ச நேரத்தில் ஏதோ ஒரு பாடலை ஹம் செய்ய ஆரம்பித்தார். கேட்கவே இதமாக இருந்தது. விரைவில் எல்லாருமே சேர்ந்து ஹம் செய்யத்துவங்கினர். இன்னும் கொஞ்ச நேரத்தில் உடலை அப்படியும் இப்படியும் ஆட்ட ஆரம்பித்தார். மக்களும் அவ்வறே. சில நிமிடங்களில் அது நடனமாக மாறிவிட்டது. எல்லாருமே கூச்சம் விட்டு நடனமாடிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் உள்ளிருந்த மன இறுக்கம் பறந்தது. சுமார் ஒரு மணி நேரத்தில் மெதுவாக எல்லாரும் ஓய ஆரம்பித்தார்கள்.

ஒரே நிசப்தம். மிருதுவான குரலில் ராபி பேசினார். அன்றைக்கு அவர் பேசிய வார்த்தைகள் இவ்வளவே. "உங்கள் கேள்விகள் எல்லாவற்றுக்கு விடை சொல்லிவிட்டேன் என்று நம்புகிறேன்." யாரும் ஆட்சேபிக்கவில்லை!

Tuesday, October 11, 2011

பஞ்சதஶீ 1-3


ஶப்³த³ஸ்பர்ஶாத³யோ வேத்³யா வைசித்ர்யாஜ்ஜாக³ரே ப்ரு«த²க் | 
ததோ விப⁴க்தா தத் ஸம்°விதை³க்ய ரூப்யாந்ந பி⁴த்³யதே || 3||

சப்தம், தொடுதல் முதலானவற்றை தனித்தனியாக அறிகிறோம். ஆனாலும் அவற்றுக்கு அப்பாற் பட்ட அவற்றை அறியும் பொருள் ஒன்றே. 

Saturday, October 8, 2011

பஞ்சதஶீ 1-2


த த்பாதா³ம்பு³ருஹ த்³வந்த்³வ ஸேவா நிர்மல சேதஸாம் | 
ஸுக² போ³தா⁴ய தத்த்வஸ்ய விவேகோ'யம்° விதீ⁴யதே || 2||

அந்த பாதங்களுக்கு சேவை செய்து உள்ளத்தூய்மை அடைந்தோருக்கு சுகத்தை தரும் புத்தியில் தத்வத்தின் விவேகம் பிரகாசிக்கிறது. 

Friday, October 7, 2011

இறை தூதர்...


ஒரு பணக்கார யூத விவசாயி. ஒரு நாள் தன் வீட்டுக்குள் அரக்க பரக்க ஓடி வந்து சேர்ந்தார். "ரெபக்கா, ரெபக்கா! எல்லாம் போச்சு, எல்லாம் போச்சு!"
"என்ன விஷயம்?"
"ஊர்ல எல்லாரும் பேசிக்கிறாங்க. ஒரு இறை தூதர் வந்துட்டாராம்!"
"அதனால என்ன?"
"என்னவா? வருஷக்கணக்கில கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்சோம். இப்ப நமக்கு ஆயிரம் பசு மாடுகள் இருக்கு. வயலெல்லாம் நிறைய விளைஞ்சு குதிரில தானியங்கள் நிறைய இருக்கு. தோப்புகளில மரங்கள் நல்லா காய்ச்சு இருக்கு. நிறைய பணம் இருக்கு."
"பின்னே?"
"இப்ப இது எல்லாத்தையும் விட்டுட்டு இந்த இறைதூதர் பின்னாலே போகணுமே!"
"கவலைப்படாதீங்க! நமக்கு பேரோ இருந்தார், ஒரு ஹமன் இருந்தார், ஹிட்லர் இருந்தார். எல்லார்கிட்டேந்தும் கடவுள் நம்பளை காப்பாத்தலையா? இறை தூதர்கிட்டேந்தும் காப்பாத்துவார்!"

Thursday, October 6, 2011

பஞ்சதஶீ, முதல் பாகம் -1


  ஸ்ரீ வித்யாரண்ய ஸ்வாமி எழுதிய பஞ்ச தஶீ என்னும் அத்வைத நூல் இனி வாரம் 3-4 நாட்கள் வரும்.
தத்வவிவேகோநாம - ப்ரத²ம​: பரிச்சே²த³​:.
தத்துவ விவேகம் எனும் முதல் பாகம்.

நம​: ஶ்ரீஶங்கராநந்த³ கு³ரு பாதா³ம்பு³ஜந்மநே |
ஸ விலாஸ மஹா மோஹ க்³ராஹ க்³ராஸைக கர்மணே || 1||

என் குரு ஶ்ரீஶங்கராநந்தரின் பாத கமலங்களை வணங்குகிறேன். அவர் மஹா மோஹத்தின் காரியமான இந்த பிரபஞ்சத்தை நசிக்கச்செய்கிறார்.

Saturday, October 1, 2011

ப்ரார்த்தனை.....


ஹிட்லரின் கொடுமையால் யூதர்கள் கொதித்துப்போயிருந்தனர். அதனால் ஹிட்லரை கொல்ல விரிவான திட்டம் தீட்டினர். இரண்டு பேர் ஹிட்லர் குறிப்பிட்ட இடத்துக்கு குறித்த நேரத்தில் வரும் போது சுட்டு விட ஏற்பாடானது. இரண்டு பேரும் துப்பாக்கியுடன் காத்திருந்தார்கள். நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. ஹிட்லரை காணோம்! அரை மணி ஒரு மணி.... ஒருவன் சொன்னான், "ஜோஷுவா, இன்னும் ஹிட்லரை காணலையே! ஹிட்லருக்கு ஒண்ணும் ஆகி இருக்கக்கூடாது என்று ஒரு ப்ரார்த்தனை சொல்லு!"