Pages

Wednesday, October 12, 2011

விடை...


ரஷ்யாவில் அது சின்ன நகரம். எல்லாரும் ஒரு ராபியின் வருகைக்காக காத்துக்கொண்டு இருந்தார்கள்.
அவர்களை பொறுத்த வரை அது ஒரு முக்கியமான நிகழ்வு. அரிதாகத்தான் அந்த மாதிரி யாரும் அங்கே வருவார்கள். ஆகவே பலமான ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருந்தன. எல்லாரும் அவர்களை வாட்டி வதைக்கும் பிரச்சினைகளை பட்டியலிட்டு அவற்றுக்கு என்ன தீர்வு என்று கேட்க துடித்துக்கொண்டு இருந்தார்கள்.

அந்த நாளும் வந்தது. டவுன் ஹாலில் எல்லாரும் ஆஜர்.

ராபியும் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தார். அவர் ஒன்றுமே பேசவில்லை. ஒவ்வொருவரையும் உற்று பார்த்தார். கொஞ்ச நேரத்தில் ஏதோ ஒரு பாடலை ஹம் செய்ய ஆரம்பித்தார். கேட்கவே இதமாக இருந்தது. விரைவில் எல்லாருமே சேர்ந்து ஹம் செய்யத்துவங்கினர். இன்னும் கொஞ்ச நேரத்தில் உடலை அப்படியும் இப்படியும் ஆட்ட ஆரம்பித்தார். மக்களும் அவ்வறே. சில நிமிடங்களில் அது நடனமாக மாறிவிட்டது. எல்லாருமே கூச்சம் விட்டு நடனமாடிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் உள்ளிருந்த மன இறுக்கம் பறந்தது. சுமார் ஒரு மணி நேரத்தில் மெதுவாக எல்லாரும் ஓய ஆரம்பித்தார்கள்.

ஒரே நிசப்தம். மிருதுவான குரலில் ராபி பேசினார். அன்றைக்கு அவர் பேசிய வார்த்தைகள் இவ்வளவே. "உங்கள் கேள்விகள் எல்லாவற்றுக்கு விடை சொல்லிவிட்டேன் என்று நம்புகிறேன்." யாரும் ஆட்சேபிக்கவில்லை!

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

என்னதான் விடை?

Geetha Sambasivam said...

"உங்கள் கேள்விகள் எல்லாவற்றுக்கு விடை சொல்லிவிட்டேன் என்று நம்புகிறேன்." யாரும் ஆட்சேபிக்கவில்லை!


இப்படி ஒருத்தரை இங்கேயும் எதிர்பார்க்கிறேன். எவ்வளவு நல்லா இருக்கும். ராபியே வருக!