கடும்
விரதங்கள் இருந்துவந்த சிவிஆர்
ஒரு நாள் குடலில் துளை விழுந்து
சிகிச்சை பலனில்லாமல் மறைந்தார்.
வருஷக்கணக்கில்
வெறும் காபி மட்டும் அருந்தி
வந்த அவரது அன்னையும் மறைந்தார்.
(மிகக் கொஞ்சமாக
சாப்பிடுவார். அவரது
வயிற்றில் பல புண்கள் வந்து
ஆறி வயிறே சுருங்கிப்போயிற்று)
தந்தை
சம்பாதித்து வைத்த வீட்டை
விற்று, சகோதரியின்
பங்கு போக மீதி வேத பாடசாலைக்கும்
இன்னும் சில விஷயங்களுக்கும்
சமர்பித்துவிட்டார்.
(இதைப்போலவேதான்
ஆர் எழுதிய வைத்த உயிலுக்கு
வேலை இல்லாமல் போனது.
இருந்ததை எல்லாம்
டிஸ்போஸ் பண்ணிவிட்டதால்
உயிலை ஒரு வருஷம் முன்
கிழித்துப்போட்டுவிட்டாராம்!)
இதன் பின் பல முறை
இடம் பெயர வேண்டி இருந்தது.
எங்கும் நிலை
கொள்ளவில்லை. கடைசியில்
லக்ஷ்மி காலனியில் அவரது
சகோதரியின் கணவர் கட்டிய
அபார்ட்மென்ட் குடியிருப்பிலேயே
ஒரு அபார்ட்மென்ட் இல் செட்டில்
ஆனார்.
விசிறி
சாமியார் என்கிற யோகி ராம்
சுரத் குமார் அவர்களின்
தொடர்பும் ஏற்பட்டது.
அவரைப்பற்றிய
புத்தகங்களும் வெளிவந்தன.
இப்போது வீடு வீடாக
மாறிக்கொண்டு அவஸ்தைப்பட்டுக்கொண்டு
இருந்த அண்ணாவுக்கு அவர் ஒரு
உதவியாளரை அனுப்பினார்.
அந்த ப்ரம்மசாரியை
கூப்பிட்டு பணித்த போது அவர்
நான் இங்கேதான் சேவை செய்ய
வந்திருக்கிறேன் என்றார்.
அதற்கு ராம்சுரத்
குமார் "செர்விங்
ரா.கணபதி ஈஸ்
செர்விங் தெ யூனிவெர்ஸ்"
என்று சொல்லி
அனுப்பினார்!
சங்கீத
ஞானம் மிக்கவர். முன்பெல்லாம்
அவ்வப்போது ஏதேனும் ஒரு பாட்டை
ஹம் செய்து கொண்டு இருப்பதை
கேட்டு இருக்கிறோம். சில
க்ருதிகளும் உருவாக்கி
இருக்கிறார் என்று சமீபத்தில்
தெரிய வந்தது! பக்த
மீரா குறித்த தொடரில் பல
பாடல்களை தமிழாக்கம்
செய்திருக்கிறார்.
பகவான்
ரமணரைப்பற்றியும் பல சுவையான
விஷயங்கள் எழுதி இருக்கிறார்.
கல்கி, அமுதசுரபி
போன்ற இதழ்களின் தீபாவளி
மலர்களில் இவரது கட்டுரை
கட்டாயம் இருக்கும் என்ற
காலகட்டம் பல வருஷங்கள்
இருந்தது.
கடைசியாக
வெளி வந்தது மஹா பெரியவாள்
ஓப்பனாக எல்லாருக்கும் செய்த
மந்திர உபதேச கட்டுரைதான்
என்று நினைக்கிறேன்.
என்
கதையையும் இங்கே சொல்ல வேண்டி
இருக்கிறது!