மஹா
பெரியவாளுடன் இவரது தொடர்பும்
அப்படித்தான். அந்த
கதையை இவர் எழுதி இருப்பதை
படிக்க வேண்டும்! சன்னியாசியாம்,
மடமாம், எல்லாம்
சும்மா என்ற ரீதியில் எண்ண
ஓட்டத்துடன் பெற்றோர்
வற்புறுத்தலுக்காக இவரும்
போனார். எல்லோரும்
வரிசையில் நின்று தர்சனம்
செய்து நமஸ்காரம் செய்து
ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு
இருந்தனர். வரிசை
பாட்டுக்கு நகர்ந்து கொண்டிருக்க
பெரியவாளின் பார்வையோ கணபதி
மேலேயே இருந்தது! இவர்கள்
முறை வந்த போது இவரது தந்தை
கொண்டு போயிருந்த பொருளை
வினயத்துடன் சமர்ப்பித்தார்.
தம்பதிகள் வணங்கி
ஆசீர்வாதம் பெற்றனர்.
குங்கும பிரசாதமும்
பெற்றனர். ஆனால்
பெரியவா பார்வையோ இவரைவிட்டு
அகலவில்லை. பெற்றோர்
செய்தது போலவே இவரும் நமஸ்காரம்
செய்துவிட்டு வந்துவிட்டார்.
கூடியிருந்த எல்லாரும்
யார் நீங்க? இந்த
பையன் யார்! ஏன்
பெரியவா இபப்டி இவனையே
பார்த்துக்கொண்டிருந்தார்
என்று ஆச்சரியத்துடன்
கேட்டுக்கொண்டி இருந்தனர்.
இவருக்கு
அப்போது ஒன்றும் தெரியவில்லை.
ஆனால் இரண்டு நாட்களில்
ஏன் என்று புரியாமலே அவர்
நினைவாகவே இருக்க ஆரம்பித்தார்.
அவரில்லாமல் தான்
இல்லை என்ற நிலையே வந்துவிட்டது.
பின் காலத்தில்
பெரியவாளுடன் பல மணி நேரம்
விஸ்தாரமாகவும் அந்தரங்கமாகவும்
பேசும் பாக்கியமும் ஏற்பட்டது.
சகஜமாக பேச்சு வார்தை நடந்ததுக்கு ஒரு சாம்பிள்:
பெரியவா: எல்லாரும் என்னை பெரியவா பெரியவா ன்னு சொல்லறா. ஏன்? ஒரு வேளை பெரிய வாய் என்கறது பெரியவா ஆயிடுத்து போல இருக்கு.
ஸ்ரீ க: நிஜம்தான் போல இருக்கு
பெரியவா: உனக்கு பெரியவாயா இருக்கும் போலிருக்கே! எப்படி?
ஸ்ரீ க: நீங்க.... மஹா வாக்கியங்களை உபதேசம் செய்யற வாய் அதனாலே பெரிய வாய்தானே?
பெரியவா: உனக்கு பெரிய வாய்தான்டா!
சற்று நேரம் கழித்து: பின்ன ஏன் பெரிய வாள் ன்னும் பலர் சொல்லறா!
ஸ்ரீ க: நீங்க பெரிய வாளும்தான்! எங்களோட காமம் க்ரோதம் ன்னு எல்லாத்தையும் அறுத்து எறியறதால....
மஹா பெரியவாள் ஆதி
சங்கரரின் வாழ்கை சரிதத்தை
எழுதும்படி பணித்தார்.
“எனக்கு ஒண்னும்
தெரியாதே! எப்படி
எழுதுவேன்?” என்றார்.
"அம்பாளை
நினைச்சு கொண்டு எழுத ஆரம்பி;
அம்பாள் பேனாவில்
மசி ஊற்றுவா. அது
தானா எழுதும்!” என்றார்
மஹா பெரியவா. இப்படித்தான்
'ஹர ஹர சங்கர,
ஜெய ஜெய சங்கர'
எழுதலாயிற்று.
1 comment:
முழுதா படிக்க முடியல்லைனு வருத்தமா இருக்கு .பெரியவா ரெண்டுபேரோட சம்பாஷணை மட்டும் தெளிவா படிக்க முடியறது மத்ததெல்லாம் alphabet ஆ இருக்கே Mr Thivaa.
Post a Comment