Pages

Wednesday, January 16, 2013

அத்ருஷ்டம் - வாசனைகள் நீக்கம்இந்த வாசனைகள் நம்மை ஆட்டி வைக்குதுன்னு தெரிஞ்சதும், அப்படின்னா அதை நாசம் செய்யலாமேன்னு  இயல்பா  தோணும். ம்ம்ம்ம் அது சரிதான் . ஆனா அது ரொம்பவே அட்வான்ஸ்ட் லெவல்.

நாம செய்யக்கூடியது கெட்ட வாசனைகளை கையாளுவதே. நல்ல வாசனைகளையும் ஒரு ஸ்டேஜில் விடத்தான் வேண்டும்னாலும் அது கடைசியில் வருவது. இப்போதைக்கு கெட்ட வாசனை. கெட்டதுன்னு எப்படி தெரியும்ன்னாதெரியும், அவ்வளோதான். திருடனுக்குக்கூட  தான்  திருடுகிறோம் அது தப்புன்னு  நிச்சயமா உள்ளுக்குள்ள  தெரியவே தெரியும். வெளியே சும்மா வாதத்துக்காக  தான் செய்யறது சரிதான் ன்னு விவாதம் செய்யலாம்.

சரி, இப்படி வெச்சுக்கலாம். தப்பு ன்னு நமக்கு தெரிகிற சமாசாரத்தை விலக்க முயற்சி செய்யணும். அது நிறையவே இருக்கிறதால நாம் அது நிஜமா தப்பா ன்னு விவாதிக்க வேண்டாம். ஒவ்வொண்ணா நீக்கிக்கொண்டு வரும் போதே எல்லாம் சரியாயிடும்.
உதாரணமாக குடி. மதுவைத்தான் சொல்லறேன். இந்த பழக்கம் நமக்கு இருக்கா?  இது தப்புன்னு தோணுதா? அதை நீக்க முயற்சி செய்யலாம். இது தப்பில்லைன்னு தோணினா? சும்மா விடுங்க. அடுத்து நாம செய்யறதுல எது தப்புன்னு தேடலாம். ஏதாவது ஒண்ணு ரெண்டு நீக்க முடியுதான்னு முதல்ல பார்க்கலாம். இருந்தாலும், சரி சும்மா உதாரணத்துக்கு மது குடிக்கிறது தப்பு, அதை நீக்கணும். ரைட்!

மது குடிக்கிறது என்கிறது ஒரு வாசனையோட வெளிப்பாடு. முன்னே இதே ஜன்மத்திலேயோ கடந்த  ஜன்மங்களிலேயோ குடிச்சு குடிச்சு பழக்கம்.  குடிக்கிறது என்கிற விருத்தி, அடிக்கடி நடக்க அது சம்ஸ்காரமாபண்புப்பதிவா ஆயிடுத்து. அதனாலது பலம் பெற்று வாசனை யாகிடுத்து.  அப்ப அதை விட முடியலை. இதே பழக்கம் இப்ப இந்த ஜன்மத்திலேயும் தொடருது. ஆனா இப்ப நமக்கு  இது தப்பு, விட்டுவிடணும் ன்னு தோணியாச்சு. அதை செயல்படுத்தணும். அதாவது வாசனையால தூண்டப்பட்டு எப்போல்லாம் குடிக்கணும்ன்னு தோணுதோ அப்பல்லாம் அதுக்கு எதிரா வேலை செய்யணும். அதாவது நம் வாசனைக்கு எதிரா செயல்படணும்.

அவ்வளோதான்!

என்னது அவ்ளோதான்னா என்ன அர்த்தம்? அது எவ்வளோ கஷ்டம் தெரியுமா? சும்மா இப்படி சொல்லிட்டு போனா என்ன அர்த்தம் என்றெல்லாம் சொல்லத்தோணுதா?
கஷ்டம்தான் யார் இல்லைன்னு சொன்னாங்க? வாசனைகளை  நீக்குவது அவ்வளவு சுலபமில்லை. இருந்தாலும் அது சாதிக்க முடியாத விஷயம் இல்லை. சிரம சாத்தியம் ன்னு சொல்வாங்க. கஷ்டப்பட்டு செய்யக்கூடியது.

எப்படி குடிக்காம இருக்கிறது என்கிறது ஒரு ஸ்பெஷல் பெரிய சப்ஜெக்ட். இங்கே உதாரணம்தான் காட்ட முடியும். செயல்முறைக்கு கொண்டு வருவது ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒவ்வொரு வாசனைக்கும் தனித்தனி வழியாக இருக்கும். அத்தனையும் இங்கே சொல்ல முடியாதில்லையா

பொதுவா சொல்ல, விட வேண்டிய வாசனையை விட்டுவிடுவேன் ன்னு ஒரு சங்கல்பம் மனசில வரணும். தினசரி எழுந்திருக்கும் போது இன்ன வாசனைக்கு இன்னைக்கு இடம் தர மாட்டேன் ன்னு  உறுதியா நமக்கு நாமே சொல்லிக்கணும். ஒரு நாளுக்கு தேவையானால் 3-4 முறை கூட சொல்லிக்கலாம். ஆனால் ஆரம்பத்திலே சின்னதா இன்னைக்குன்னு மட்டும் போகஸ் இருக்கலாம். இனி குடிக்கவே மாட்டேன்னு சொல்கிறது பெரிய இலக்கா தோணும், அதை மனசு ஏத்துக்காதுன்னு சொல்கிறாங்க. நாம் ஒவ்வொரு சின்ன சின்ன படியா போகலாம். சாதிக்க வாய்ப்புகள் அதிகமா இருக்கும்.

ஒத்தர் திருப்பதி மலையை நடந்து ஏறுவதா முடிவு பண்ணார். அவரோட நண்பரையும் சேர்த்துக்கொண்டார். நண்பருக்கு ஒரு ஆசை, வேண்டுதல் இருந்ததே தவிர பயம். தான் இதய நோயாளி, முடியாதுன்னு ஒரு நினைப்பு. ரெண்டு  பேரும் மலையடிவாரத்துக்கு போய் சேர்ந்தார்கள். நண்பர் மலைத்து போய் விட்டார். முடியவே முடியாது நான் வரலை நீ போய் வா ன்னு சொல்லிட்டார். இவர் விடலை. சரி சரி நானே முழுக்க மலை ஏறிக்கொள்ளறேன். நீ எவ்வளோ தூரம் கூட வர முடியுமோ வா ன்னார். நண்பரால ஒண்ணும் சொல்ல முடியலை. காலை வாரிட்டயேன்னு திட்டாம இருந்தா சரி ன்னு கிளம்பிட்டார். நூறு படி ஏறினதும் அவ்ளோதான்னார். அதெல்லாம் சரி, இன்னும் எவ்வளோ படி ஏற முடியும்ன்னு இவர் கேட்டார். இன்னும் அம்பது படி

சரி வா போகலாம். அம்பது படி ஆனதும் அவ்வளோதான்னார். சரி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம். எடுத்தார்கள். இன்னும் கொஞ்ச தூரம் கூட வாயேன். எவ்வளவு படி ஏற முடியும். சரி இன்னொரு நூறு படிகள். சரி வா. இப்படி கொஞ்சம் விட்டு விட்டு ஏறினதும் ஒரு நம்பிக்கை வந்துடுத்து. மீதி அத்தனை படிகளும் ஏறி மேலே போய் சேர்ந்தார்கள்.
இப்படியாக ஒரு சின்ன இலக்கை அப்போதைக்கு அப்போது வைத்துக்கொள்வது, நாம் முடியாது என்று நினைக்கும் வேலையை எளிதாக ஆக்குகிறது!

முன்னே ஒரு வழியில் பழகி பழகி ஒரு வாசனை வந்தது என்றால், இப்போது எதிர் வழியில் பழக பழக அது நடுவுக்கு வந்து பின் காணமல் போகும். இதுக்கு எவ்வளவு நாள் ஆகும் என்றால் அதுக்கு பதில் சொல்வது சுலபமில்லை. முன்னே எத்தனை ஜன்மங்களில்  இந்த வாசனை தொடர்ந்து வந்திருக்கோ யாருக்கு தெரியும்? அதை பொருத்தும் செய்கிற எதிர் வினையின் தீவிரத்தையும் பொருத்தும்  இது கை கூடும். இந்த வாசனைகளை அழிக்கிறது பெரிய சப்ஜெக்ட் என்றாலும் அதில் ஒரு சின்ன படியை பார்த்தோம்!

Post a Comment