Pages

Sunday, March 10, 2013

சக்யம் - 3

 
சரி சரி என்ன செய்வது, வயசான பிறகே திருமணம் நடந்து இருக்கிறது என்றால், ஒரு பெரிய பிரச்சினையும் இல்லை. கொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும், காமத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். இந்த மனிதனுடன்தான் என் மீதி வாழ்கையை கழிக்கப்போகிறேன்; அதனால் கொஞ்சமாவது விட்டுக்கொடுத்து இவனை நண்பன் ஆக்கிக்கொள்ளப்போகிறேன் என்று பெண்ணும்; இவள் என்னை நம்பி வீடு மாறி இங்கே வந்துவிட்டாள், இவளுடன்தான் மீதி வாழ்கையை வாழப்போகிறேன்; அதனால் கொஞ்சமாவது விட்டுக்கொடுத்து இவளை சகியாக ஆக்கிக்கொள்வேன் என்று ஆணும் நினைக்க ஆரம்பித்துவிட்டால் வாழ்கை சுகமாகவே கழிய வாய்ப்பு இருக்கிறது.

மாறாக நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என்ற ரீதியில் வாழ ஆரம்பித்தால் குடும்பம் சீராக ஓடாது. இந்த சூழ்நிலையில் குழந்தையும் பிறந்துவிட்டால் ... பாவம் அந்த குழந்தை!
குழந்தைகள் கண்டு, கேட்பதை விட பல விஷயங்களை சூக்ஷ்மமாகவே உணர்கிறார்கள். அதனால் நமக்கும் நம் மனைவி/ கணவன் நடுவில் இருக்கும் டென்ஷன் அவர்களுக்கு தெரியாது என்று ஏமாற வேண்டாம்.
கணவன் மனைவி ஆரம்பத்தில் சண்டை போட்டாலும் ஒவ்வொன்றையும் அன்றுடன் மறந்துவிட பழக வேண்டும். நண்பர்கள் போடாத சண்டையா! போகப்போக அட்ஜெஸ்ட்மெண்ட் எல்லாம் ஆகி சௌஜன்யம் வந்துவிடும்.

அப்புறம் ஏன் இதெல்லாம் 'ஆன்மீக' பதிவுகளில் வருகிறது என்று தோன்றலாம். ஆன்மீக ரீதியாக கணவனும் மனைவியும் ஒரு யூனிட் ஆகத்தான் பார்க்கப்படுவார்கள். தனித்தனியாக இல்லை. இவர்களது பந்தம் காலம் காலமாக தொடரும் ஒன்று. இருவரில் ஒருவராவது ஆன்மீகம் பக்கம் திரும்பினால் அது மற்றவரையும் பாதிக்கும். ஒருவரது முன்னேற்றம் மற்றவரையும் முன்னேற்றும்.

சக்யத்தில் கடைசியாக..... சக்யம் மனிதர்களுடன் இருப்பதை விட பகவானுடன் இருப்பது இன்னும் சிறந்தது. மனித சக்யமாவது பல சிக்கல்களுடன் துவங்கி தட்டுத்தடுமாறி முன்னேறலாம். ஆனால் பகவானுடனான சக்யம் சீக்கிரமே பலப்படும் வாய்ப்புகள் அதிகம். பகவானுடனான சக்யம் பக்தியில் ஒரு வகை.
நல்ல உதாரணம் அர்ஜுனன் க்ருஷணனுடன் கொண்டு இருந்த பக்திதான். க்ருஷ்ணனை அவன் நண்பன் போலத்தான் பார்த்தான்.... தன் தங்கை சுபத்ராவை அர்ஜுனன கல்யாணம் பண்ணிக்க ப்ளான் போட்டு கொடுத்ததே க்ருஷ்ணன்தான். இதே போலத்தான் சுந்தரர் சிவ பெருமானிடம் கொண்டு இருந்த பக்தி. கோபிச்சு கொண்டு இருந்த மனைவிகிட்ட தூதாகவே போய் "பிரச்சினையை தீர்த்து வை" ன்னு மிரட்டினார்! என்னவெல்லாம் வேலை வாங்கினார்! இதை எல்லாம் முன்னேயே எழுதி இருக்கிறேன். இங்கே படிக்கலாம்.

எனக்கு என்னவோ பகவானை ஒரு பயத்தோட, மரியாதையோட எல்லாம் பக்தி செய்யறதை விட இப்படி ஃப்ரெண்டா கருதறதுலே அர்த்தம் இருக்கறதா தோணுது! யாரை ஃப்ரெண்டா கருதலைன்னாலும் 'ஆனை உம்மாச்சி' யை ஃப்ரெண்டா கருதறதிலே பிரச்சினையே வராது! அப்படி ஒரு சௌஜன்யமான ரூபம் அவருக்கு!
அந்த ஃப்ரெண்ட் நம்மை எல்லாரையும் காப்பாத்தட்டும்ன்னு வேண்டிகிட்டு சக்யத்தை முடிவுக்கு கொண்டு வரேன்!

5 comments:

Geetha Sambasivam said...

//ஆனை உம்மாச்சி' யை ஃப்ரெண்டா கருதறதிலே பிரச்சினையே வராது! அப்படி ஒரு சௌஜன்யமான ரூபம் அவருக்கு!//

திட்டி, சண்டையெல்லாம்போடுவோமே, கேட்டுப்பார். வாயே திறக்க மாட்டார்.(கொழுக்கட்டைக்கு மட்டும் திறப்பார்)

Geetha Sambasivam said...

கமென்ட் போயிருக்கா? ம்ம்ம்ம்ம்ம்????

திவாண்ணா said...

ப்ளஸ்ல கமென்ட் போட்டுட்டு இங்க தேடினா கிடைக்காது!

Geetha Sambasivam said...

இங்கே தான் முதல்லே போட்டேன். அது எரர் வந்ததாலே +லே மறுபடிபோட்டேன். :))))

எல் கே said...

என்ன சொல்றதுன்னு தெரியலை அண்ணா. போன வாரம்தான் உறவில் ஒரு விவாகரத்து செய்தி கிடைச்சது. ரொம்ப அதிர்ச்சியா இருந்தது