கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது! மனித மனதுதான் எவ்வளவு விசித்திரமானது? ஒரு பதிவில் தான் நினைப்பதை படிக்கிறதே தவிர என்ன எழுதப்பட்டு இருக்கிறது என்று படிப்பதில்லை.
நான் குறிப்பாக "இதற்காக பால்ய விவாஹத்தை நான் ரெகமண்ட் செய்கிறேன் என்றில்லை" என்று எழுதினேன்.
சின்ன வயதில் சக்யம் சுலபமாக ஏற்படும்; வயதான பிறகு ஈகோ தலை தூக்கி பிரச்சினைகள் ஏற்படுவதாக எழுதினேன்.
எழுதாத விஷயங்கள் எழுதப்பட்டதாக நினைப்பது... என்ன சொல்ல?
"சின்ன வயசுல கல்யாணம் ஆனவங்க எல்லாம் மனம் ஒத்துதான் வாழ்ந்தார்கள்"
"பால்யத்தில் மணம் புரிந்தவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டார்கள் "
இப்படி எல்லாம் எங்காவது எழுதி இருகிறேனா என்று தயை செய்து சொல்லவும்.
(அப்பாடா! இன்னைய பதிவு எழுதியாச்சு!)
6 comments:
:))))))))))
jooperu!:)))))
//முன் காலத்தில் இப்படி இல்லை. அதாவது சார்தா சட்டம் வருமுன். குழந்தையிலேயே இவன் இவளுக்கு; இவள் இவனுக்கு என்று நிர்ணயித்து திருமணம் நடத்தி விடுவார்கள். காமம் உட்புகாத காலத்திலேயே ஏற்படும் இந்த உறவு நட்பாகத்தான் மலரும். //
//அந்த ஆசை போன பின் மீண்டும் நட்பு தொடரும். வாழ்கை சுகமாகவே செல்லும். எண்பது வயது பாட்டிக்கு காப்பி கொண்டு கொடுத்தால் அந்த கிழத்துக்கு கொடுத்தியா என்று கேட்பார். ஏன்டா இந்த கிழவி லொக்லொக் ன்னு இரும்பிகிட்டு கிடக்கே சுக்கு கஷாயம் போட்டு கொடுக்கச் சொல்லறதுதானே ன்னு கிழவர் கேட்பார்//
முந்தைய பதிவில் இதுவே பொதுவானத் தன்மை என தொனிப்பது போல் எழுதியதால், மறு பக்கத்தையும் எழுதினேன். மற்றபடி எல்லாக் காலத்திலும் எல்லா குணத்தாரும் உண்டு. இப்பொழுது விவாஹரத்து அதிகமாகி இருப்பதும் உண்மை. அக்காலத்தில் மணம் புரிந்த வயதான தம்பதியினர், அறுபது வயது கடந்த பின் விவாஹரத்து செய்த இரு குடும்பம் எனக்குத் தெரிந்து உள்ளது. மற்றபடி தாங்கள் எழுதி உள்ளது எனக்கு ஒப்புதலே. என்னைப் போன்ற சிறியவனுக்காக ஒரு பதிவு தேவையா? :D :D :D
// அப்பாடா! இன்னைய பதிவு எழுதியாச்சு! //
அப்பாடா...! படிச்சாச்சு..!
சின்ன வயசில் சக்யம் சுலபமாக ஏற்படும் என்றால் அப்படி சின்ன வயசில் கல்யாணம் ஆனவர்களில் பெரும்பாலானவர்களுக்கேனும் சக்யம் ஏற்ப்ட்டு அன்னியோன்னியமாக கிழத்தை பற்றி கிழவியும், கிழவியைப் பற்றி கிழமும் விசாரித்துக் கொண்டு கடைசி வரை ஒன்றாக வாழ்வார்கள் என்று பொருளில்லையா? அப்படி இருந்திருந்தால் இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் வீதிக்கு 4 பேர் வாழாவெட்டியாக வாழ்ந்த நிலைக்கு காரணம் என்னவாக இருக்கும் என்றுதானே கேட்டிருந்தேன்? இதில் பால்ய விவாகத்தை நான் ரெக்கமண்ட் செய்கிறேன் என்றில்லை என்ற ஒரு சின்ன டிஸ்க்ளெய்மர் போட்டுவிட்டு அந்த பால்ய விவாகத்தின் சாதகமான அம்சம் என்று ஒரு விஷயத்தை மட்டும் பேசினால் அதற்கு பெயர் என்னவென்று நீங்க தயை கூர்ந்து தெரிவிக்கவும்.
பி.கு: விவாதத்தை ஆரம்பித்த இடத்திலேயே தொடர்ந்தால் விட்டுப் போகாமல் பதில் சொல்ல முடியும். இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் புது பதிவு போட்டால் சில சமயம் கண்ணில் படாது போய் விடும். :))))) ஒரு வேளை அதுதான் நல்லதோ என்னவோ? :))))
இப்பதான் ப்ளஸ் ல ஒரு பதில் போட்டேன். அது இங்கேயும் பொருந்துவதால் காபி பேஸ்ட்.....
//அட, நாலு வரியிலே ஒரு பதிவு தேத்தினா பொறுக்கலையே!
பதிவோட தலைப்பே சக்யம்தான். போகஸ் அதுலதான். அதுல பால்ய விவாஹத்தை பத்தி எழுதினேன். காமம் இல்லாத வயசிலே சக்யம் ஏற்பட்டா பின்னால அது எப்படி உதவுதுன்னு எழுதினேன். இந்த பதிவின் போகஸ் சக்யம்தான். யாரும் இப்படி பால்ய விவாஹத்தை பத்தி எழுதறதாநினைக்கப் போறாங்கலேன்னுதான் டிச்க்லேய்மர் போட்டேன்.
மனித மனசு கொஞ்சம் மலினமானது. கூட்டுக்குடும்பத்துல பல அநியாயங்கள் அந்த காலத்துல நடந்தன. அதுல ஓன்று ஏதேனும் காரணம் சொல்லி பெண்ணை தள்ளி வைத்துவிட்டு இன்னொரு கல்யாணம் செய்து வரதக்ஷிணை தேத்தறது. இதுல முக்கிய பங்கு மாமியாருது. பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது அதற்கு சாதகமாக இருந்தது. ஏன் மிகவும் வயதானவர்களுக்குக் கூட வேறு வழியில்லாமல் கல்யாணம் செய்து கொடுத்து இருக்கிறார்கள்.
நடந்த சமூக அநியாயங்கள் சக்யத்தை பத்திய கருத்தை மாற்ற லாஜிக் இல்லை.//
Post a Comment