ஏற்பது
இகழ்சி
ஔவையோட
ஆத்திச்சூடி.
பல பேருக்கும்
தெரியலை.
அதான் பல வருஷங்களுக்கு
முந்தியே நல்ல விஷயங்களை
எல்லாம் பாடத்திலேந்து
பகுத்தறிவோட எடுத்தாச்சே!
எப்படித் தெரியும்?
ப்ரீயா
என்ன கிடக்குதுன்னு தினசரி
காலையில எழுந்ததும் யோசிக்கிற
சமுதாயமா ஆகிட்டோம்.
என்ன கொடுக்கலாம்ன்னு
யோசனை எங்கே வரப்போகுது?
ஒத்தர்கிட்டிருந்து
ஒரு பொருளை வாங்கறோம்ன்னா
ரொம்ப யோசிச்சே வாங்கணும்.
இதை முன்னேயே
உணவு பத்தின பதிவில எழுதி
இருக்கேன்.
ப்ரீயான்னா
ரொம்ப ரொம்ப யோசிக்கணும்.
எது ப்ரீயா வருதோ
அது கொடுக்கறவரோட பாபங்களையும்
சுமந்துகிட்டேதான் வருது.
சகட்டுமேனிக்கு
வாங்கினவங்க நிலையை பாத்து
இருக்கேன்.
இறுதி சடங்கு
செய்கிற இடங்களில பாத்தா
தெரியும்.
தானம் வாங்குவதுக்குன்னே
சிலர் அங்கே இருப்பாங்க.
அவங்க காலை பாத்தா
தெரியும்...
கருப்பா,
சிரங்கும் சீழுமா
இருக்கும்.
இந்த மாதிரி
ஆசாமிகளுக்கு கொடுத்து
பிரயோசனமில்லே.
எல்லா சுப/
அசுப நிகழ்ச்சிகளுக்கும்
முன்னே தானம் தருவது உண்டு.
ஒரு நல்ல காரியம்
செய்ய முனையும் போது தன்னிடம்
இருக்கிற பாபங்களை கொஞ்சம்
நீக்கிக்கொண்டு செய்ய பலன்
இன்னும் அதிகமாக கிடைக்கும்
என்பது தியரி.
ஆமாம்,
இப்படி கொஞ்சம்தான்
நீக்க முடியும்.
முழுக்க நீக்க
முடியவே முடியாது.
தானே ப்ராயச்சித்தங்கள்
செய்தோ,
அனுபவிச்சோதான்
தீர்க்கணும்.
கொடுக்கிறவங்க
வாங்கறவங்களோட தார தம்மியம்
தெரிஞ்சு கொடுக்கணும்.
வாங்குகிறவர்கள்
கூடிய வரை பாபம் செய்யாதவரா
இருக்கணும்;
சேருகிற பாபத்தை
அப்பப்ப தகுந்த முறையில
நீக்கிக்கொள்ளுகிறவரா
இருக்கணும்.
அப்படி இல்லைன்னா
கொடுக்கிற நபருக்கு பாபம்
போகாததோடு வாங்கின நபரை
இன்னும் கஷ்டத்தில ஆழ்த்தின
பாபமும் சேரும் போல தோணுது.
கொடுக்கிற
த்ரவ்யத்தின் மூலமா கொஞ்சம்
பாபம் இடம் மாறும்.
வாங்குகிற நபர்
இதை தெரிஞ்சு இருந்தால்
அதுக்கு தகுந்தபடி காயத்ரி,
ப்ராணாயாமம்,
புண்ணிய தீர்த்த
ஸ்நாநம் ன்னு எதையாவது செய்து
தீர்த்துப்பார்.
ம்ம்ம்ம் ஆனா
99.99%
பேருக்கு தெரியலை.
அப்படி தியரியா
தெரிஞ்சவங்களிலேயும் சரி
செய்துக்க தோணுவது கொஞ்சம்
பேருக்குத்தான்.
இப்படி
வாங்குகிறதுல இருக்கற பிரச்சினை
உடனடியா தெரிஞ்சு தொலைச்சாலாவது
பரவாயில்லை என்கிறார் ஒரு
தம்பி.
என்ன செய்யறது?
அது மெதுவாத்தான்
தெரியறது.
பல சமயம் வெளியே
தெரியறதும் இல்லை.
இப்படி
இருக்கறதாலேயே பலரும் லஞ்சம்
வாங்க தயங்கறதில்லை.
இப்படித்தானே
இருக்கும் ன்னு சகஜமா எடுத்துக்கற
லெவலுக்கு போயாச்சு!
அடுத்த தலை
முறைகளுக்கு இது தப்புன்னு
தெரியாமலே போயிடும்ன்னு
நினைக்கிறேன்.
ஹும்!
இப்ப என்
முன்னே நிக்கிற கேள்வி,
வலையில நிறையவே
இலவச சமாசாரங்கள் கிடைக்குது.
இதை எல்லாம்
ஏத்துக்கலாமா கூடாதா???
No comments:
Post a Comment