நான் சப்ஸ்க்ரைப் செய்யற ஒரு தளத்துலேந்து நேத்து ஒரு சுவாரசியமான துண்டு செய்தி. இந்த சுட்டியில படிக்கலாம்.
நம் மனக்குதிரை அடிக்கடி புல் மேயப்போயிடுதுன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். இந்த புல் மேயற சமாசாரம்தான் ‘டிபால்ட்’ வேலை என்கிறார் ஆராய்ச்சியாளர்.
ஆராய்சிக்காக பெட் ஸ்கேன் செய்யறாங்க. அது மூளையின் எந்த பகுதி செயலில இருக்குன்னு காட்டும். கணக்கு போடறாங்கன்னா அதுக்கான ஒரு பகுதி. ஓவியம் வரையறாங்கன்னா அதுக்கான ஒரு பகுதி. இந்த மாதிரி ஒவ்வொரு விதமான வேலை செய்யறப்பவும் எந்த பகுதி மூளை பயனாகுதுன்னு ’மேப்’ போட்டு வெச்சிருக்காங்க. இரண்டு வேலைக்கு நடுவில என்ன நடக்குதுன்னு ஆராய்சி செய்தப்ப ஒரே மாதிரி புல் மேயுதுன்னு தெரிஞ்சதாம். இந்த புல் மேயப்போறது ரெண்டு வேலைகளுக்கு இடையில் கொஞ்ச நேரமே இருந்தாக்கூட நடக்குதாம். வரிசையா கணக்கு போட வேலை வெச்சுட்டு இரண்டு கணக்குகளுக்கு நடுவில வித்தியாசமா இடைவெளி விட்டு ஆராய்ஞ்சு கண்டு பிடிச்சு இருக்காங்க. அந்த சமயத்துல “நீ என்ன நினைச்சுகிட்டு இருந்தே?”ன்னு கேட்டு பதிவு செய்து கடைசில தன்னைப்பத்தியோ, இன்னொருவரைப்பத்தியோ அல்லது தனக்கும் அந்த இன்னொருவருக்கும் உள்ள உறவைப்பத்தியோ சிந்தனை செய்கிறோம்ன்னு கண்டு பிடிச்சு இருக்காங்க.
அட, இப்படி சில சமூக உறவுகள் உருவாயிடுத்து, அதனால இப்படி நினைக்கிறோம்ன்னா அப்படி இல்லையாம். பிறந்து ரெண்டு நாள் ஆன குழந்தை மூளை கூட இதே மாதிரி செயல்களை காட்டுது. ரெண்டு வாரமான குழந்தைகளோட மூளை செயல்பாட்டும் வயசானவங்க செயல்பாடும் இந்த வித செயல்களில் ஒரே மாதிரி இருக்காம். அதுகளுக்கு கண்களை போகஸ் பண்ணக்கூட முடியாது. என்ன சமூக நினைப்பு இருக்க முடியும்? அதனால சமூக உறவுகள் இதன் காரணம் இல்லை. புல் மேயறது மூலமான செயல். அப்புறமா அதுல இந்த விஷயங்கள் வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கு என்கிறாங்க.
அது சரி, இந்த விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்பந்தம்?
முன்னே மாத்தி யோசி ந்னு ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதுல
நாம பெரும்பாலான நேரம் இறைவனுடன் இருந்து கொண்டு அவசியமான நேரம் உலக
வாழ்க்கையில இருந்து பார்த்தால் என்ன? ந்னு கேட்டு இருந்தேன். அது இந்த புல் மேயற நேரம்தானா? இல்லைன்னா அப்படி மாத்திக்க முடியுமா? எப்படி?
அப்படி இருந்தா எவ்வளோ நல்லா இருக்கும்!
அப்படி இருந்தா எவ்வளோ நல்லா இருக்கும்!
No comments:
Post a Comment