Pages

Thursday, March 26, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி -2

 ஶ்ரீ த⁴ர்மஶாஸ்தா அத²வா ஶ்ரீஹரிஹரபுத்ர ஸஹஸ்ரநாமாவளீ
ௐ நமோ ப⁴க³வதே பூ⁴தநாதா²ய ।


ௐ ஶிவபுத்ராய நம: ।
சிவனின் புத்திரனே
ௐ மஹாதேஜஸே நம: ।பெரும் ஒளியே
ௐ ஶிவாகார்யது⁴ரந்த⁴ராய நம: ।சிவாவின் வேலைக்கு உறுதுணையாய் இருப்பவனே
ௐ ஶிவப்ரதா³ய நம: ।சிவனால் அளிக்கப்பட்டவனே
ௐ ஶிவஜ்ஞாநிநே நம: ।சிவனை முற்றும் அறிந்தவனே
ௐ ஶைவத⁴ர்மர்ஸுரக்ஷகாய நம: ।சைவ தர்மத்தை நன்கு காப்பவனே
ௐ ஶங்க²தா⁴ரிணே நம: ।சங்கை ஏந்தியவனே
ௐ ஸுராத்⁴யக்ஷாய நம: ।தேவர்களை மேலாளுபவனே
ௐ சந்த்³ரமௌலயே நம: ।சந்திரனை முடியில் சூடிக்கொண்டவனே
ௐ ஸுரோத்தமாய நம: । 10மிக நல்ல தேவனே
ௐ காமேஶாய நம: ।காமத்தை கட்டுப்படுத்தியவனே
மன்மதனுக்கு ஈசனே
ௐ காமதேஜஸ்விநே நம: ।காமத்தின் சக்தியால் உண்டானவனே
ௐ காமாதி³ ப²லஸம்யுதாயே நம: ।
காமம் முதலியவற்றின் பலனுடன் சம்பந்தப்பட்டவனே
ௐ கல்யாணாய நம: ।உவகை கொண்டவனே
ௐ கோமலாங்கா³ய நம: ।மென்மையான அங்கங்களை உடையவனே
ௐ கல்யாணப²லதா³யகாய நம: ।நல்ல பலன்களை கொடுப்பவனே
ௐ கருணாப்³த⁴யே நம: ।கருணை மேகமே
ௐ கர்மாத்³க்ஷாய நம: ।செயல்களை மேற்பார்வையிடுபவனே
ௐ கருணாரஸஸாக³ராய நம: ।கருணை ரச கடலே
ௐ ஜக³த்ப்ரியாய நம: । 20உலகுக்கு பிரியமானவனே
ௐ ஜக³த்³ரக்ஷாய நம: ।உலகை காப்பவனே
ௐ ஜக³தா³நந்த³தா³யகாய நம: ।உலகிற்கு ஆனந்தம் தருபவனே
ௐ ஜயாதி³ஶக்தி ஸம்ஸேவ்யாய நம: ।இந்திரன் முதலான சக்திகளால் துதிக்கப்படுபவனே
ௐ ஜநாஹ்லாதா³ய நம: ।ஜனங்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுபவனே
ௐ ஜிகீ³ஷுகாய நம: ।அனைவரும் அடைய விரும்புபவனே


ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளியின் பாஷ்யம் (சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே. யம். இராஜ கணபதி தீஷிதர் அவர்களால் எழுதப்பட்டது)
1. சிவபுத்ர :
சிவனுக்குப் புதல்வன். மங்கள கரமான, மிகவும் அழகான வடிவுள்ளவன். சிவம் என்னும் சொல்லுக்குப் பொருள் பல. அந்தப் பல பொருள்களும் நிறைந்த வடிவானவன் - விநாயகர் சுப்ரமண்யரைப் போல, சிவனுக்குப் பிரியம் வாய்ந்த குமாரன். ஆகையால் எங்கும் எப்போதும் எல்லோராலும் போற்றப்படுகின்றனன்.
2. மஹாதேஜா :
அதிக காந்தி (ஒளி) படைத்தவன். ஒப்பற்ற பலம் உள்ளவன்.
3.சிவகார்ய துரந்தர :
பரமசிவனின் கட்டளைப்படி சகல காரியங்களையும் நடத்துபவன்; அல்லது அந்தக் காரிய பாரங்களை வகித்தவன். மங்களகரமான கிரியைகளை கொண்டவன். ஆகவே அமங்கல கார்ய மற்றவன்.
4. சிவப்ரத :
சிவனுக்கு இஷ்டத்தை அளிப்பவன். எல்லோருக்கும் மங்களத்தை அளிப்பவன்.
5. சிவஜ்ஞானி : சிவனை அறிந்தவன், மங்களகரமான அறிவுள்ளவன்
6. சைவ தர்ம ஸுரக்ஷித :
சிவனது தர்மங்களைக் காப்பாற்றுபவன். அதாவது சிவனது காயில் குளம் பூஜை அவைகளுக்குரிய பொருள்கள் எல்லாம் இவனால் தான் ரக்ஷிக்கப்படுகின்றன. 7. சங்கதாரீ :
சங்குதரித்தவன், வனபதியான படியால் தனது வரவைத் தெரிவிப்பதற்கென சங்கை கைக்கொண்டவன்.
8. ஸுராத்யக்ஷ : தேவர்களுக்கு முன்னுள்ளவன். தேவர்களால் போற்றப்படுகிறவன்.
9. சந்த்ர மௌளி : தனது தந்தையைப் போல மதியைச் சூடியவன்.
10. ஸுரோத்தம : மேலான தேவர்களைக் கண்டவன். மேலான தேவன்.
11. காமேச: மன்மதனுக்கு ஈசன். மன்மதனால் போற்றப்படுபவன்.
12. காம தேஜஸ்வி : மன்மதனுக்கு ஒப்பானவன்.
13. காமாதி பல ஸம்யுத :
அடியவர்களுக்கு அனுக்ரஹிக்க வேண்டி காமம், அர்த்தம், தர்மம், மோக்ஷம் என்ற நான்கு புருஷார்த்தங்களைக் கைக் கொண்டவன். இச்சா ரூபிணிகளான ஸ்திரீகளால் அளிக்கப்படும் பலனோடு கூடியவன்.
14. கல்யாண : மங்கள ரூபன்.
15. கோமளாங்க : அழகான கை கால் முதலிய அவயங்கள் உடையவன்.
16. கல்யாண பலதாயக : மங்களத்தை அளிப்பவன். திருமணம் ஆகாத கன்னியர்க்கும் புருஷர்களுக்கும் விவாஹத்தை நடத்தி வைப்பவன். ஆகையால் விவாஹத்துக்கு முன் இவனை உலகம் போற்றுகிறது. (ஓர் வெள்ளித் தகட்டில், ஊஞ்சல் மீது ஓர் தம்பதியர் அமர்ந்துள்ளது போல் உருவாரம் செய்து, அதை முறைப்படி பூஜித்து சபரிமலைக்குக் காணிக்கையாக செலுத்தினால் நீண்ட காலமாகத் தடைப்படும் திருமணங்களும் கை கூடிவரும்)
17. கருணாப்தி : கடல் போன்ற தயை உள்ளவன்.
18. கர்மதக்ஷ : உலக காரியங்களை நடத்துவதில் வல்லவன்.
19. கருணாரஸ ஸாகர : சிருங்காரம் முதலான ஒன்பது ரஸங்களில் கருணாரஸத்தையே கடலாக, அதாவது அதிகமாகக் கொண்டவன்.
20. ஜகத்ப்ரிய : உலகிற்கு ப்ரியமானவன். உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு கொண்டவன்.
21. ஜகத்ரக்ஷக: உலகத்தைக் காப்பவன்.
22. ஜகதானந்த தாயக: உலகுக்கு ஆனந்தம் அளிப்பவன்.
23. ஜயாதி சக்தி ஸம்ஸேவ்ய : ஜயை, விஜயை முதலான சக்திகளால், அல்லது ஜயாதி என்னும் சக்தி மந்திரங்களால் நன்றாக ஸேவிக்கப்பட்டவன். யுத்தத்தில் வெற்றி பெற முதலிலும் முடிவிலும் தனது பரிவாரங்களால் போற்றப்படுபவன்.
24. ஜனாஹ்லாத : ஜனங்களுக்கு சந்தோஷத்தை அளிப்பவன்.
25. ஜிஷுக : வெற்றியை விரும்புகிறவன்.

No comments: