Pages

Friday, March 27, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 3




#ஐய்யப்பன்1008 - 3

ௐ ஜிதேந்த்³ரியாய நம: ।இந்திரியங்களை ஜெயித்தவனே
ௐ ஜிதக்ரோதா⁴ய நம: ।சினத்தை வென்றவனே
ௐ ஜிதஸேவாரி ஸங்க²காய நம: ।தேவர்களின் பகைவர்களை வென்றவனே
ௐ ஜைமிந்யாத்³ ரூʼஷி ஸம்ஸேவ்யாய நம: ।ஜைமினி முதலான ரிஷிகளால் வணங்கப்படுபவன்.
ௐ ஜராமரணநாஶகாய நம: । 30கிழட்டுத்தனத்தையும் மரணத்தையும் நாசம் செய்பவனே.
ௐ ஜநார்த³நஸுதாய நம: ।ஜனார்த்தனின் மகனே
ௐ ஜ்யேஷ்டா²ய நம: ।மூத்தவனே
ௐ ஜ்யேஷ்டா²தி³க³ண ஸேவிதாய நம: ।மூத்தவன் (விநாயகன்) முதலான கணங்கள் வணங்குபவனே
ௐ ஜந்மஹீநாய நம: ।பிறப்பை வலுவிழக்கச்செய்பவனே
ௐ ஜிதாமித்ராய நம: ।வயதானவர்களுக்கு நண்பனாக இருப்பவனே
ௐ ஜநகேநாঽபி⁴பூஜிதாய நம: ।ஜனகனால் பூஜிக்கப்பட்டவனே
ௐ பரமேஷ்டி²நே நம: ।மிக உயர்ந்தவனே
ௐ பஶுபதயே நம: ।பசுக்களின் (ஜீவன்களின்) தலைவனே
ௐ பங்கஜாஸநபூஜிதாய நம: ।பிரம்மன் பூஜை செய்பவனே
ௐ புரஹந்தாய நம: । 40புரனை வதம் செய்தவனே
ௐ புரத்ராதயே நம: ।புரனை காத்தவனே
ௐ பரமைஶ்வர்யதா³யகாய நம: ।உயர்ந்த ஐஸ்வர்யத்தை அருள்பவனே
ௐ பவநாதி³ஸுரை: ஸேவ்யாய நம: ।வாயு முதலான தேவர்களால் சேவிக்கப்படுபவனே
ௐ பஞ்சப்³ரஹ்ம பராயணாய நம: ।ஐந்து ப்ரம்ம மந்திரங்களையும் ஓதுபவன்.
ௐ பார்வதீதநயாய நம: ।பார்வதியின் மகனே
ௐ ப்³ரஹ்மணே நம: ।ப்ரம்மமே
ௐ பராநந்தா³ய நம: ।ஒப்பற்ற மகனே
ௐ பராத்பராய நம: ।உயர்விலும் உயர்நதவனே
ௐ ப்³ரஹ்மிஷ்டா²ய நம: ।பிரம்மத்தில் நிலை பெற்றவனே
ௐ ஜ்ஞாநநிரதாய நம: 50ஞானத்தில் திருப்தி பெற்று இருப்பவனே

சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:

26.ஜிதேந்த்ரிய : அடக்கப்பட்ட இந்திரிய வியாபாரங்களை உடையவன். (கர்மேந்திரியம் 5- ஞானேந்திரியம் 5)
27.ஜிதக் ரோத : குரோதத்தை - கோபத்தை - அகற்றியவன்.
28.ஜிததேவாரி ஸங்கக : தேவர்களுக்குப் பகைவர்களான அரக்கர்களை வென்றவன்.
29. ஜைமின் யாதி முனிஸேவ்ய:
ஜைமினி முதலான முனிவர்களால் பூஜிக்கப்பட்டவன். ஜைமினி என்பவர் வேதவ்யாஸரின் சிஷ்யர்களில் ஒருவர். ஸாம வேதத்தை வெளியிட்டவர், கர்ம காண்ட நூலை (மீமாம்ஸ ஸுத்ரங்கள்) இயற்றியவர். வியாஸரின் அருளால் ஞானம் பெற்று சிதம்பர க்ஷேத்திரம் வந்து வேத பாதஸ்தவம் என்னும் ஸ்தோத்ரத்தால் ஸ்ரீ நடராஜரைத் துதித்துப் பரமனின் அருளைப் பெற்றவர். அந்த முனிவராலும் சிதம்பரத்தில் ஹரிஹரபுத்திரன் பூஜிக்கப்பட்டவன் ஆவான் என்பது கருத்து.
30. ஜராமரண நாசக : மூப்பு, நரை, மரணம் இவைகளை அகற்றுபவன்.
31. ஜனார்த்தன ஸுத: திருமாலின் புதல்வன். விஷ்ணு மோகினியின் குமாரன்.
32. ஜ்யேஷ்ட : முதன்மையானவன்
33. ஜ்யேஷ்டாதி கணா ஸேவிதா: பெரியண்ணன் முதலான கணங்களால் ஸேவிக்கப்பட்டவன்
34. ஜன்மஹீன : பிறவியற்றவன்
35. ஜிதாமோஹ : மோஹத்தை வென்றவன். ஆமோஹன் என்ற அசுரனை அல்லது காமனை வென்றவன்.
36. ஜனகேனாபி பூஜித: ஜனகராஜனால் பூஜிக்கப்பட்டவன். ஜனகன் தனது மிதிலா நகரத்தின் எட்டுத்திக்குகளிலும் சாஸ்தாவை ப்ரதிஷ்டை செய்து சத்ருக்கள் அணுகாமல் இருப்பதற்காக பூஜித்தான் என்பது புராணம். (ஜனகன் என்றால் தந்தை என்று பொருள். எனவே தந்தையாலும் பூஜிக்கப்பட்டவன் என்பது பொருள். சபரிமலையில் ஸ்ரீ தர்மசாஸ்தாவாக மணிகண்டனை ஆவாஹனம் செய்து ஐயப்பனின் தந்தை பந்தள ராஜபாண்டியன் பூஜித்து முக்தியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)
37. பரமேஷ்டி: உன்னதமான நிலையில் இருப்பவன்.
38. பசுபதி: கால் நடை பிராணிகளுக்கு இறைவன்.
39. பங்கஜாஸன பூஜித: பிரம்ம தேவனால் பூஜிக்கப்பட்டவன்
40. புரஹம்தா : முப்புரங்களையும் வென்றவன். சிவரூபி.
41. புரத்ராதா: அடியவர்கள் வேண்டும் போது முன் நின்று காப்பவன்.
42. பரமைஸ்வர்ய தாயக: மிகுந்த ஐஸ்வர்யங்களை அளிப்பவன்.
43. பவனாதி ஸுரைஸ்ஸேவ்ய: வாயு முதலான தேவர்களால் துதிக்கப்பட்டவன்.
44. பஞ்சப்ரஹ்ம பராயண: ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோ ஜாதம் என்று ஐந்து பிரம்ம மந்திரங்களை ஓதுபவன்.
45. பார்வத தனய : பார்வதியின் புதல்வன். திருமால் பார்வதியின் உருவமானதால் பார்வதி தனயன் என்று கூறப்படுகிறான்.
46. ப்ரஹ்மா : ப்ரும்மரூபன்.
47. பரானந்த: உத்க்ருஷ்டமான ஆனந்தம் உள்ளவன்.
48. ப்ருமிஷ்ட: எல்லாவற்றுக்கும் மேம்பட்டவன்.
49.பராத்பர : பிரமத்தோடு இரண்டறக் கலந்து இருப்பவன்.
50. ஞான நிரத: சிவஞானப்பேறு பெற்றவன்.

No comments: