16
உபசாரங்கள்
ஏற்கெனெவே முடிந்துவிட்டன.
விசேஷ
பூஜைகளை பொருத்து இவ்விடத்தில்
சத்ரம் (குடை)
சாமரம்
(விசிறி),
கீத
(சங்கீதம்),
ந்ருத்ய
(நாட்டியம்),
ஆந்தோளிகாண்
(ஊஞ்சலில்
ஏற்றி ஆட்டுவது),
கஜ,
ரதாரோஹணம்
(யானை,
ரதம்
இவற்றில் ஏற்றி வலம் வரச்செய்வது)
என்று
பலதும் உண்டு.
வீட்டு
பூஜையில் இதுக்கெல்லாம்
எங்கே போக? !
ஆகவே
ஸமஸ்த ராஜோபசாரான் சமர்ப்பயாமி
என்று சொல்லி பூக்கள் மங்களாக்ஷதை
சமர்பித்து விடலாம்.
பூஜையின்
பலனை உத்தேசத் த்யாகம்
செய்துவிட்டு பூஜையை
முடித்துக்கொள்ளலாம்.
யத் ஸ்ம்ருத்யா நாம ஜப பூஜா கிரியாதிஷுஸர்வம் ஸம்பூர்ணதாம் யாதி சத்யம் வந்தேதமச்யுதம்
{யாரை
நினைப்பதால் செய்த ஜபம்,
பூஜை ஆகியன
நிச்சயமாக பூரணமாகுமோ அந்த
அச்சுதனை நினைவு கூறுவோம்}
என
சொல்லி மங்களாக்ஷதை சிறிதை
நீர் ஊற்றி கீழே விடவேண்டும்.
இதனால்
பூஜையின் போது விட்டுப்போன
செயல்கள்,
கவனமின்மை,
பூஜை
திரவியங்களின் குறைபாடு
ஆகியன நீங்கி பூரணமாகும்.
சங்கை
வைத்திருந்தால் அதில் நீர்
நிரப்பி பூஜா பலனை க்ரஹிக்க
எல்லா ஸ்வாமியையும் மும்முறை
சுற்றி தலையில் நீரை
தெளித்துக்கொள்ள வேண்டும்.
ஶங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் ஶங்க்ரயோபரிஅங்கலக்னம் மனுஷ்யானாம் ப்ரம்ஹ ஹத்யாயுதம் தஹேத்
வைணவர்கள் சாளக்ராம தீர்த்தத்தை இதே போல மேலே தெளித்துக்கொள்வதுண்டு.
ஸாளக்ராம சிலாவாரிபாபஹாரி சரீரிணாம்ஆஜன்ம க்ருத பாபானாம்ப்ராயச்சித்தம் தினே தினே
பஞ்சாயதன
பூஜையில் ஆவாஹனம் ஆரம்பிக்கும்
முன்
ஹ்ருத் பத்ம கர்ணிகா மத்யே உமயா ஸஹ சங்கரஆகச்சத்வம் மஹாதேவ ஸர்வாவரணை ஸஹ
என
வரவேற்பதுண்டு,
பூஜை
முடிந்த இந்த தருணத்தில்
ஹ்ருத் பத்ம கர்ணிகா மத்யே உமயா ஸஹ சங்கரபிரவிஶத்வம் மஹாதேவ ஸர்வைராவணை: ஸஹ
{ஹ்ருத
தாமரையின் மத்தியில் உமையுடன்
வீற்றிருக்கும் சங்கரா,
நீ
எல்லா ஆவரணங்களுடன் மீண்டு
செல்வாயாக.}
என
சொல்லி நிர்யாண முத்திரையால்
பூக்களை எடுத்து நுகர்ந்து,
ஹ்ருதயத்தில்
வைத்துக்கொண்டு கீழே போடவும்.
{முத்திரை
தெரியாவிட்டால் விட்டுவிடலாம்}
சிவ
பஞ்சாயதனம் ஆனால் அபிஷேக
தீர்த்தத்தை கொஞ்சம் உத்தரணியில்
எடுத்து நந்திக்கும் அபிஷேகம்
செய்து, ஶிவனுக்கு
இட்ட சந்தனத்திலேயே கொஞ்சம்
எடுத்து இவருக்கும் இட்டு,
ஶிவனுக்கு
சாற்றிய மலர்களில் ஒன்றையாவது
இவருக்கு எடுத்து சாற்றுவார்கள்.
அவருக்கு
நிவேதனம் செய்ததில் கொஞ்சத்தை
இவருக்கும் நிவேதனம் செய்வர்.
ஸ்லோகம்:
பாண ராவண சண்டேஶ நந்தி ப்ருங்கி ரிடாதயமஹாதேவ ப்ரஸாதோயம் ஸர்வே க்ருண்ஹந்து ஶாம்பவா:என்று சைவர்களும்,பலிர் விபீஷண: ஶம்பு: கபலோ நாரதேர்ஜுன:மஹாவிஷ்ணு ப்ரஸாதோயம் ஸர்வே க்ருஹ்ணந்து வைஷ்ணவா:என்று வைணவர்களும் சொல்வர்.
வேத
மந்திரம் :
ஈசான
ஸர்வ....
என்று
சொல்லி நந்தியின் பின் பாகத்தை
தொட வேண்டும்.
நந்திக்கு
நிவேதனம் செய்ததை அப்புறம்
காகத்துக்கு போட்டு அந்த
கிண்ணத்தை கழுவி ஈசான திசையில்
ஊற்றுவர்.
அபிஷேக
நீரை மந்திரம் சொல்லி பிறருக்கும்
கொடுத்து தானும் அருந்தலாம்.
அகால ம்ருத்யு ஹரணம்ஸர்வ வ்யாதி நிவாரணம்ஸமஸ்த பாப க்ஷயகரம்ஶிவ / விஷ்ணு பாதோதகம் சுபம்
அனயா
பூஜயா ஸபரிவார ஶாம்பபரமேஶ்வர
/ நாராயண
ப்ரீயதாம் என்று சிறிது நீரை
கீழே விடலாம்.
இத்துடன்
பூஜை முடிகிறது.
ஶுபம்!
No comments:
Post a Comment