Pages

Tuesday, September 11, 2012

தினசரி பூஜை 17

 

ரைட் , அர்ச்சனை முடிந்தது. அடுத்து தூபம். தசாங்கத்தை தணலில் தூவி புகை போடுவது நல்லது. தணலுக்கு இந்த காலத்தில் எங்கே போவது? விசேஷ பூஜைக்கே ஒரு துண்டு கரியை காஸ் அடுப்பில் வத்து தணலாக்கித்தான் கொண்டு வருகிறார்கள்! அதனால ஊதுவத்திதான் புழக்கத்தில் இருக்கிறது.
மந்திரம்:
வனஸ்பதி ரஸோத்3பூ4: 3ந்தா4ட்யஸ் ஸுமனோஹர:
ஆக்3ரேய ஸர்வ தேவானாம் தூ4போயம் ப்ரதிக்ருஹ்யதாம்.

தீபம் என்னது? எப்பவுமே அது ஏத்திதானே இருக்கும்ன்னா, ஆமாம், தீபம் ஒன்று எரியாமல் ஸ்வாமியை வெளியே எடுப்பதில்லை. ஆனாலும் இங்கே சொல்வது நெய் தீபம். சிலர் ஒரு டப்பாவில் நெய் ஊற்றி அதில் சின்ன திரிகளை போட்டு ஊற வைப்பார்கள். தேவையான போது அதில் ஒன்றை எடுத்து ஏற்றிவிட்டால் சிறிது நேரம் எரிந்து அணைந்துவிடும்.
மந்திரம்:
ஸாஜ்யம் திரிவர்த்தி ஸம்யுக்தம் வன்ஹினா யோஜிதம் மயா
தீ3பம் க்ருஹாண தே3வேஶ த்ரைலோக்ய திமிராபஹம்

மங்கள் தீபம் தர்சயாமி

அடுத்து நிவேதனம். பகவானுக்கு நிவேதனம் செய்யாமல் சாப்பிடாதே என்பது சாஸ்திரம். நாம் உண்ணப்போவதையே நிவேதனம் செய்யலாம். ஆனால் உப்பு போட்டதை பொதுவாக நிவேதனம் செய்வதில்லை. அன்னத்துடன் பருப்பு போட்டாலும் அதை உப்பு போடாமலே வைத்து பின்னால் சாப்பாட்டுக்கு முன் உப்பு போட்டுக்கொள்வார்கள்.
விஷயம் தெரியாதவர்கள் "இவ்வளோ நாளா பூஜை செய்யறியே, ஒரு நாளாவது ஒரு பருக்கையாவது உங்க சாமி சாப்டாரா" என்று கிண்டல் செய்கிறார்கள். நிவேதனம் என்பது அறிவிப்பது, காட்டுவது. தேவதைகளுக்கு நம் போல் உண்ணத்தேவையில்லை. பார்த்த மாத்திரத்திலேயே திருப்தி அடைகிறார்கள். மேலும் அந்த உணவில் இருக்கக்கூடிய தோஷங்களை அகற்றுகிறார்கள். இதற்காகவே நிவேதனம்.

மந்திரம்:
நைவேத்3யம் க்ருஹ்யதாம் தே3வ ப4க்திம் மய்யசலாம் குரு
மயேப்ஸிதம் வரம் தே3ஹி பரத்ர ச பராம் க3திம்

வேத மந்திரம்: மதுவாதா ருதாயதே....

..... சால்யன்னம் நிவேதயாமி.

அடுத்து தாம்பூலம் சமர்பிப்பது. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு. சும்மா அக்கறையில்லாமல் வைக்கக்கூடாது. நாம் போட்டுக்கொள்வதானால் எப்படி அது இருக்குமோ அப்படி இருக்க வேண்டும்.

மந்திரம்:

பூகீ3 2ல சமாயுக்தம் நாக3வல்லி தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூ3லம் ப்ரதிக்3ருஹ்யதாம்
கர்ப்பூர தாம்பூ3லம் சமர்ப்பயாமி

அடுத்து கர்ப்பூர ஹாரத்தி - மும்முறை சுற்றி, கண்களில் ஒத்திக்கொண்டு, மற்றவர்களுக்கும் காட்ட வேண்டும்.
மந்திரம்:

 ஸக்ஷுத்ரம் ஸர்வலோகானாம் திமிரஸ்ய நிவாரணம்
ஆர்திக்யம் கல்பிதம் ப4க்த்யா க்ருஹாணத்வம் ஸுரேஶ்வர

வேத மந்திரம்:
ஸோமோ வா ஏதஸ்ய....

அடுத்து ஸ்தோத்திரங்கள்:

நம ஶிவாப்4யாம் நமயௌவனாப்4யாம்
பரஸ்பராஶ்லிஷ்ட வபுர்த4ராப்4யாம்
நாகேந்த3ர கன்யா வ்ருஷகேதனாப்4யாம்
நமோ நமஶ் ஶங்கர பார்வதீப்4யாம்

ஶாந்தாஹாரம் பு4ஜக ஶயனம் பத்மநாப4ம் ஸுரேம்
விஶ்வாஹாரம் க33ன சது3ர்ஷம் மேக4 வர்ணம் சுபா4ங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமல நயனம் யோகி3 ஹ்ருத்த்4யான கம்யம்
வந்தே3 விஷ்ணும் ப4வப4யஹரம் ஸர்வ லோகைக நாத2ம்

ஸர்வமங்க³ல மாங்க³ல்யே ஶிவே ஸர்வார்த²ஸாதி⁴கே
ஶரண்யே த்ரயம்ப³கே கௌ³ரீ நாராயணீ நமோஸ்துதே

அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம
தஸ்மாத் காருண்ய பா4வேன ரக்ஷ ரக்ஷ மஹேஶ்வ
அனாயாஸேன மரணம்ʼ வினாதை³ன்யேன ஜீவனம்ʼ
தே³ஹி மே க்ரிபயா ஶம்போ⁴ த்வயி ப⁴க்திம்ʼ அசஞ்சலாம்

{ஹே ஶம்போ! இறக்கும் போது கஷ்டமில்லாத இறப்பும், வாழும் போது வறுமை இல்லாத வாழ்வும் உன்னிடம் எப்போதும் சஞ்சலமில்லாத பக்தியும் அருள்வாய்.}

இப்படி ஸ்லோகங்களை சொல்லி , ஸ்வர்ண புஷ்பம் சாற்றி, மந்த்ர புஷ்பம் தெரிந்தால் சொல்லி பிரதக்ஷிண நமஸ்காரம் செய்ய வேண்டும்.

பூஜை அறை அனுமதிக்குமானால் வலமாக சுற்றி வந்து (ப்ரதக்ஷிணம்) நமஸ்கரிக்க வேண்டும். மும்முறையோ மேலோ.

ஸ்லோகம்:
யானி கானி ச பாபானி ஜன்மாந்தர க்ருʼதானி ச|
தானி தானி விநஶ்யந்தி ப்ரத³க்ஷிண பதே³ பதே³

{பிறப்பு முதல் எந்தெந்த பாபங்களை செய்தோமோ அவை அடி அடியாக வலம் வரும்போது விலகுகின்றன.}

Post a Comment