Pages

Friday, October 16, 2015

கிறுக்கல்கள்! - 47


கவர்னராக வேலை பாத்தவர் வேலையை ராஜினாமா செய்து விட்டு மாஸ்டரிடம் வந்தார்

எனக்கு கற்றுக்கொடுங்கள்!”

எதை?”

ஞானத்தை ”

ஆஹா! எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கீறது. ஆனால் அதில் ஒரே ஒரு சிக்கல்...”

என்ன அது”

ஞானத்தை யாராலும் கற்றுக்கொடுக்க முடியாதே!”

அப்ப இங்கே கத்துக்க எனக்கு ஒண்ணுமில்லை!”

ஞானத்தை கத்துக்கலாம். ஆனா கத்துக்கொடுக்க முடியாது!”

Thursday, October 15, 2015

கிறுக்கல்கள்! - 46



மாஸ்டர் ஆசிரியர்களுடன் பேசும் போது நீண்ட நேரம் உற்சாகமாக பேசுவார். ஏனெனில் அவரே ஒரு ஆசிரியராக பணியாற்றியவர்தான். அவர் அந்த சமயங்களில் சொல்லுவார்: கல்வி என்பது படிப்பு இல்லை; வாழ்கையை புரிந்து கொள்வது என்பதை ஆசிரியர்கள் அடிக்கடி மறந்து விடுகிறார்கள்!

வழக்கம்போல் ஒரு கதை சொன்னார். ஒரு நாள் வேலையாக போய்க்கொண்டு இருந்தபோது ஒரு சிறுவன் மீன் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்தார்.
ஹாய்! மீன் பிடிக்க இது ரொம்ப நல்ல நாள்!”
ஆமாம்!”
கொஞ்ச நேரம் கழித்து கேட்டார்: “ ஏன் நீ பள்ளிக்கு போகலை?”
ஏன்னா, நீங்க சொன்ன மாதிரி மீன் பிடிக்க இது ரொம்ப நல்ல நாள்!


அப்புறம் அவரோட பெண்ணுக்கு வந்த ரிபோர்ட் கார்ட்: மீனா நல்லாத்தான் படிக்கறா. ஆனா வாழ்கையை சந்தோஷமா வாழ்வதில நேரத்தை வீணாக்காட்டா இன்னும் நிறைய மார்க் வாங்குவா!

Wednesday, October 14, 2015

கிறுக்கல்கள்! - 45


இங்கிதமாக நடந்து கொள்வதைப்பற்றியோ நல்ல பழக்க வழக்கங்களை கொண்டு இருப்பது குறித்தோ மாஸ்டர் மிகவும் குறிப்பாக இருப்பதில்லை. ஆனால் அவர் மற்றவர்களுடன் நடந்து கொள்வதைப்பார்த்தால் அதில் ஒரு மரியாதையும் அழகும் இருக்கும்.

ஒரு இளம் சீடன் மாஸ்டரை இரவு அவரது வீட்டுக்கு காரில் அழைத்துச்சென்றார். வழியில் ஏற்பட்ட பிரச்சினைக்காக போக்குவரத்து காவலரை மோசமாக திட்டினார். பின் மாஸ்டரிடம் சொன்னார், “நான் எப்படி உணர்கிறேன் என்பதை ஒளித்து வைப்பதில்லை; வெளிப்படையாக சொல்லிவிடுவேன். போலியாக பணிவுடன் நடப்பது வெறும் சூடான காத்துதான்!”


மாஸ்டர் சொன்னார்: ”உண்மைதான். அந்த சூடான காத்துதான் இந்த வண்டியின் டயரில் இருக்கிறது; அது கரடு முரடான சாலையில் பயணத்தை எவ்வளவு சுலபமாக்குகிறது பார்!”

Friday, October 9, 2015

கிறுக்கல்கள்! - 44


வெளிநாட்டுப் பயணி கேட்டார்: நான் என் நாட்டுக்குத் திரும்பிவிட்டால் தகுந்த மாஸ்டர் எங்கே கிடைப்பார்?

மாஸ்டர் சொன்னார்: நல்ல மாஸ்டர் இல்லாமல் நீ எப்போதுமே இல்லை!

சீடர் குழம்பினார்.

எல்லாவற்றுக்கும் உன் எதிர்வினையை கவனி! ஒரு பறவை, இலை, கண்ணீர்த்துளி, ஒரு புன்னகை. இப்படி கவனிக்க ஆரம்பித்தால் அவையே உனக்கு மாஸ்டராக மாறும்.

Thursday, October 8, 2015

கிறுக்கல்கள்! -43


பரம சத்தியம் நம் கண் முன்னாலேயே இருக்கிறது; ஆனால் நமக்குத்தான் பார்க்கத்தெரியவில்லை என்பார் மாஸ்டர்.

ஒரு முறை ஒரு மலை மீது ஏறும்போது கூட ஒரு சீடனை அழைத்துச்சென்றார்.

பாதி தூரம் போன பின் சுற்றும் முற்றும் இருந்த புதர்களை பார்த்துவிட்டு சீடன் கேட்டான்: நீங்கள் காட்டுவதாச்சொன்ன அழகான காட்சி எங்கே?

அப்பனே! நீ அதன் மேல்தான் நின்று கொண்டு இருக்கிறாய். மலை உச்சிக்கு போன பிறகு அது உனக்குத்தெரிய வரும்!