மாஸ்டர்
ஆசிரியர்களுடன் பேசும் போது நீண்ட நேரம் உற்சாகமாக பேசுவார். ஏனெனில் அவரே ஒரு
ஆசிரியராக பணியாற்றியவர்தான். அவர் அந்த சமயங்களில் சொல்லுவார்: கல்வி என்பது
படிப்பு இல்லை; வாழ்கையை புரிந்து கொள்வது என்பதை
ஆசிரியர்கள் அடிக்கடி மறந்து விடுகிறார்கள்!
வழக்கம்போல்
ஒரு கதை சொன்னார். ஒரு நாள் வேலையாக போய்க்கொண்டு இருந்தபோது ஒரு சிறுவன் மீன்
பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்தார்.
“ஹாய்! மீன் பிடிக்க இது ரொம்ப நல்ல
நாள்!”
“ஆமாம்!”
கொஞ்ச
நேரம் கழித்து கேட்டார்: “ ஏன் நீ பள்ளிக்கு போகலை?”
“ஏன்னா, நீங்க சொன்ன மாதிரி மீன் பிடிக்க இது ரொம்ப நல்ல நாள்!
அப்புறம்
அவரோட பெண்ணுக்கு வந்த ரிபோர்ட் கார்ட்: மீனா நல்லாத்தான் படிக்கறா. ஆனா வாழ்கையை
சந்தோஷமா வாழ்வதில நேரத்தை வீணாக்காட்டா இன்னும் நிறைய மார்க் வாங்குவா!
No comments:
Post a Comment