Pages

Friday, April 8, 2016

கிறுக்கல்கள்! -100


மாஸ்டர் எதுக்கெடுத்தாலும் கதைகள் சொல்லுவதைப்பற்றி ஒருவர் கேட்டார். இந்த கதையெல்லாம் எங்க பிடிக்கிறீங்க எங்கேந்து வருது?

மாஸ்டர் சொன்னார்: கடவுள்கிட்டேந்து! கடவுள் உன்னை ஒரு வைத்தியனா வேலை செய்ய வெச்சார்ன்னா உன்கிட்ட நோய் நொடி இருக்கறவங்களை அனுப்புவார். ஒரு ஆசிரியரா வேலை செய்ய வைக்க மாணவர்களை அனுப்புவார். ஒரு மாஸ்டரா இருக்க வைக்க கதைகளை அனுப்புவார்!

Thursday, April 7, 2016

கிறுக்கல்கள்! - 99


மாஸ்டர் சொன்னார்: நான் ஹிந்து, கிருஸ்துவன், முஸ்லிம்ன்னோ அல்லது இந்தியன், அமெரிக்கன், ஆப்ரிகன்னோ சொல்லிக்கறதுல ஒரு அர்த்தமும் இல்லை. அதெல்லாம் வெறும் லேபில்கள்.
அவருக்கு ஒரு யூத சீடர் இருந்தார். அவர் தன்னை ’முதலில், நடுவில், கடைசியில் யூதன்’ என்று சொல்லிக்கொள்வார். அவரிடம் மாஸ்டர் சொன்னார்: அப்படி உனக்கு சொல்லிக்கொடுத்து வளர்த்து இருக்கிறார்கள். யூதம் உன் வளர்ப்பு, அடையாளமில்லை.”
அப்போ என் அடையாளம்தான் என்ன?
ஒண்ணுமேயில்லை!
என்னது? அப்ப நான் வெறும் பூஜ்யமா? காலி, வெற்றிடமா?
அப்படி இல்லைப்பா. நீ அடையாளப்படுத்த முடியாத வஸ்து!

Wednesday, April 6, 2016

கிறுக்கல்கள்! - 98


ஒரு நபர் தன் மதத்தின் விதிகளை பல வருடங்கள் ஆழ்ந்து படித்தார். மாஸ்டர் அவரிடம் சொன்னார்: கடைசியில் அன்பு செலுத்துவது மட்டுமே நல்ல வாழ்க்கைக்கு அடித்தளம்; மதமோ சட்டதிட்டங்களோ இல்லை.
கதை சொன்னார்: ஞாயிற்றுக்கிழமை மத போதனை பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் பேசிக்கொண்டு இருந்தார்கள். இவர்களுக்கு மதக்கல்வி வெறுத்துப்போயிருந்தது.
நாம ஓடிப்போயிடலாமா?
ஓடறதா? நம்ம அப்பாக்கள் நம்பள பிடிச்சு அடிப்பாங்களே?
நாம திருப்பி அடிக்கலாம்!
ஐயையோ! திருப்பி அடிக்கறதா? உனக்கு பைத்தியம் பிடிச்சுடுத்தா? நம்ம அப்பா அம்மாவை மரியாதையா நடத்தணும்ன்னு கடவுள் சொல்லலை?

அது உண்மைதான்… அப்ப ஒண்ணு செய்யலாம். நான் உங்க அப்பாவ அடிக்கறேன்; நீ என் அப்பாவ அடி!

Tuesday, April 5, 2016

கிறுக்கல்கள்! - 97


நீங்க ஏன் மாஸ்டர்கிட்ட வந்தீங்க?
ஏன்னா என் வாழ்க்கை எங்கேயும் போகாம இருந்தது; எனக்கு எதுவும் கொடுக்கலை.
ஓஹோ! அப்படின்னா இப்ப வாழ்க்கை எங்கே போகுது?
எங்கேயுமில்ல.
என்ன கொடுக்குது?
எதுவுமில்ல.
பின்ன என்ன வித்தியாசம்?

இப்ப வாழ்க்கை எங்கேயும் போகாததுக்கு காரணம் போகிறதுக்கு எந்த இடமுமில்ல; எனக்கு ஒண்ணும் கிடைக்காததுக்கு காரணம் எனக்கு தேவை ஒண்ணுமில்ல!

Monday, April 4, 2016

கிறுக்கல்கள்! - 96


இரண்டாம் உலகப்போர் சமயம். விமானங்கள் குண்டு பொழியப்போகின்றன என்று எல்லாரையும் பதுங்குக்குழிக்கு அனுப்பிவிட்டார்கள். ஒரு இரவு முழுதும் மாஸ்டர் தன் சீடர்களுடன் போக்கர் (சீட்டாட்டம்) ஆடிய படி கழித்தார்.
நடுவில் கொஞ்சம் இடைவேளை தேவைப்பட்டது. அப்போது பேச்சு சாவைப்பற்றி திரும்பியது.
மாஸ்டர் கேட்டார்: ஒரு வேளை இப்ப நா இறந்து போயிட்டால் நீங்க எல்லாம் என்ன செய்வீங்க?
நாங்க என்ன செய்யணும்ன்னு விரும்பறீங்க?
முதல்ல சவத்தை அப்புறப்படுத்தனும். வேற இடத்தில கொண்டுப்போய் வைக்கணும். ரெண்டாவது..
ரெண்டாவது?

சீட்ட கலைச்சுப்போடணும்!