ஒரு
நபர் தன் மதத்தின் விதிகளை
பல வருடங்கள் ஆழ்ந்து படித்தார்.
மாஸ்டர்
அவரிடம் சொன்னார்:
கடைசியில்
அன்பு செலுத்துவது மட்டுமே
நல்ல வாழ்க்கைக்கு அடித்தளம்;
மதமோ
சட்டதிட்டங்களோ இல்லை.
கதை
சொன்னார்: ஞாயிற்றுக்கிழமை
மத போதனை பள்ளி மாணவர்கள்
இரண்டு பேர் பேசிக்கொண்டு
இருந்தார்கள். இவர்களுக்கு
மதக்கல்வி வெறுத்துப்போயிருந்தது.
நாம
ஓடிப்போயிடலாமா?
ஓடறதா?
நம்ம அப்பாக்கள்
நம்பள பிடிச்சு அடிப்பாங்களே?
நாம
திருப்பி அடிக்கலாம்!
ஐயையோ!
திருப்பி
அடிக்கறதா? உனக்கு
பைத்தியம் பிடிச்சுடுத்தா?
நம்ம அப்பா
அம்மாவை மரியாதையா நடத்தணும்ன்னு
கடவுள் சொல்லலை?
அது
உண்மைதான்… அப்ப ஒண்ணு
செய்யலாம். நான்
உங்க அப்பாவ அடிக்கறேன்;
நீ என் அப்பாவ
அடி!
No comments:
Post a Comment