Pages

Friday, November 2, 2018

பறவையின் கீதம் - 61




வேலைக்கு நேர்முகத்தேர்வு நடந்தது.
முதல் ஆசாமி.
நீ கேட்ட வேலைக்கு நாங்க வைக்கிற எளிமையான டெஸ்ட் இது, சரியா?
சரி!
ரெண்டும் ரெண்டும் எவ்வளோ?
நாலு!
சரி, நீங்க போலாம். அடுத்து..
டெஸ்டுக்கு ரெடியா?
ஆமா சார்.
ரெண்டும் ரெண்டும் எவ்வளோ?
முதலாளி என்ன சொல்லறாரோ அவ்வளவு!
இரண்டாவது ஆசாமிக்கு வேலை கிடைத்துவிட்டது! 

எது முதலில்? வழிவழியாக வரும் நம்பிக்கையா அல்லது உண்மையா?

Thursday, November 1, 2018

பறவையின் கீதம் - 60





கடவுள் உலகில் அவதாரம் எடுக்க முடிவு செய்தார். ஒரு தேவதையை சர்வே செய்து வர அனுப்பினார்.

தேவதை திரும்பி வந்து சொன்னது: முக்கால்வாசி பேர் பட்டினி இருக்காங்க. முக்கால்வாசி பேர் வேலை இல்லாமலும் இருக்காங்க.

கடவுள் முடிவு செய்தார்: சரி, அப்படியானால் பட்டினி இருப்போருக்கு உணவாகவும் வேலை இல்லாதவர்களுக்கு வேலையாகவும் அவதாரம் எடுக்கிறேன்.

Wednesday, October 31, 2018

பறவையின் கீதம் - 59





அரபி மிஸ்டிக் சதியின் இன்னொரு முத்து:

ஒருவர் காட்டின் வழியே போய்க்கொண்டு இருந்தார். வழியில் பின்னங்கால்கள் இரண்டையும் இழந்த நரி ஒன்றை பார்த்தார். இது எப்படி உயிர் வாழ்கிறது என்று ஆச்சரியப்பட்டார். அப்போது புலி ஒன்று தன் இரையை இழுத்து வந்து சாப்பிட ஆரம்பித்தது. வயிறார உண்டு விட்டு போய்விட்டது. நரி மெதுவாக ஊர்ந்து போய் மீதியை சாப்பிட்டு வயிறை நிரப்பிக்கொண்டது. "ஆகா, கடவுள் எப்படி எல்லாம் உணவளிக்கிறான்!” என்று நினைத்துக்கொண்டார். அன்று இரவு அங்கேயே தங்கியவர் அடுத்த நாளும் அதே புலி இரையை கொண்டுவந்து உண்டு மீதியை விட்டுச்சென்றதை பார்த்தார்.

"ஆஹா! இனி நாம் உணவையோ வேறு எதையுமோ தேடி அலைய வேண்டியதில்லை. எனக்கு வேண்டியது எல்லாம் அவன் கொடுப்பான்" என்று நினைத்து ஒரே இடத்தில் சும்மா இருக்கலானார். எதிலும் முனையவில்லை. நாட்கள் சென்றன. ஒன்றும் கிடைக்கவில்லை. கொலைப்பட்டினி. ஏறத்தாழ இறக்கும் தறுவாய்க்கு போய் விட்டார். "ஆண்டவா ஏன் இப்படி கைவிட்டாய்" என்று புலம்பினார். அப்போது அசரீரி கேட்டது. 

“முட்டாள்! உண்மையை சரியாக புரிந்துக்கொள். காலிழந்த நரிக்கு உணவு கொடுத்தேன். உனக்கு என்ன குறை? நீ ஏன் நரி போல இருக்க நினைக்கிறாய்? புலி போல இருப்பதுதானே?”

வீதியில் ஒரு நிர்வாணமான குழந்தை குளிரில் நடுங்கிக்கொண்டு பசியுடன் இருப்பதை பார்த்தேன். எனக்கு கோபம் வந்துவிட்டது. "ஆண்டவா! இதை ஏன் அனுமதிக்கிறாய்? நீ ஏன் எதையும் செய்யவில்லை?” என்று கேட்டேன். பதில் இல்லை. அன்றிரவு திடீரென்று பதில் சொன்னான்: “நான் உன்னை படைத்தேன்!”

Tuesday, October 30, 2018

பறவையின் கீதம் - 58





மனநிலை பாதிப்புக்கு உள்ளான சிலர் குணமாக விரும்புவதில்லை. ஏனெனில் அது வலிக்கிற வழி. அவர்களுக்குத்தேவை அவர்களுடைய குறைப்பாட்டுடனே சௌகரியமாக இருப்பது. பொதுவாக எதிர்பார்ப்பது ஒரு அற்புதம்- வலியில்லாத விடுதலை.

அந்த கிழவர் இரவு உணவுக்குப்பின் வீட்டுக்கு வெளியே அமர்ந்து தன் பைப்பில் புகை பிடிப்பதை மிகவும் விரும்பினார். ஒரு நாள் இரவு அவரது மனைவி வேறு நாற்றம் வருவதை உணர்ந்தார். போய்ப்பார்த்தால் கிழவரது தாடி தீப்பற்றி இருந்தது.

ஏய் கிழவா, உன் தாடி தீப்பற்றி இருக்கு!
அது தெரியாதா? மழை பெய்யட்டும்ன்னு பிரார்த்தனை செஞ்சு கொண்டு இருக்கேனே தெரியலை?

Monday, October 29, 2018

பறவையின் கீதம் - 57





ஜப்பானிய ஜெனரல் நபுநகா போரில் ஈடுபட்டு இருந்த போது எதிரிகளை தாக்க முடிவு செய்தார். ஆனால் எதிரிகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகம். ஜெனரல் ஜெயிப்பதைக் குறித்து நம்பிக்கையுடன் இருந்தாலும் வீரர்கள் பயந்து கொண்டு இருந்தனர்.

வழியில் ஒரு ஷிண்டோ கோவில் இருந்தது. அதன் உள்ளே போய் பிரார்த்தனை செய்து விட்டு வந்த ஜெனரல் "வீரர்களே, விதி என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம். இதோ ஒரு நாணயத்தை சுண்டிவிடுகிறேன். தலை விழுந்தால் நாம் ஜெயிப்போம். பூ என்றால் தோற்போம். விதி தன்னை வெளிப்படுத்திக்கொள்ளட்டும்.”

சுண்டிய நாணயம் தலையாக விழுந்தது. வீரர்களுக்கு உற்சாகம் பிறந்துவிட்டது. போரில் எதிரிகளை பந்தாடிவிட்டார்கள்.

அடுத்த நாள் நபுநகாவின் உதவியாளர் "யாருமே விதியை மாற்ற முடியாது" என்றார்.
“ஆமாம்" என்று சொன்ன நபுநகா அந்த நாணயத்தை உதவியாளரிடம் காட்டினார்.
இரு பக்கங்களும் தலைதான் இருந்தது!

விதியை யார் நிர்ணயிப்பது?