Pages

Friday, December 6, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 43





40 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ மஹாதேவேந்திர ஸரஸ்வதி (2)
அடைமொழி: ஷோபன மஹாதேவா
பிறப்பு இடம்: கர்நாடகம்
பூர்வாஶ்ரம பெயர்: சிவராம பட்டர்.
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: கன்னய்யா
பீடாதிபதியாக ஆண்டுகள்: 42
சித்தி: 4015 பவ வைசாக சுக்ல ஷஷ்டி (பொது ஆண்டு 0914-ஏப் -09) பிரதோஷத்தின் முடிவில்
வேறு:
இந்த ஆச்சார்யரின் உடல் வடிவம் கூட தெய்வீக அழகுடன் பிரகாசிக்கக் கூடியதாக இருந்தது. அதனால் இவரை ஷோபன மஹாதேவா என்று அழைத்தனர்,

Thursday, December 5, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 42





39 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சத்சித்விலசேந்த்ர ஸரஸ்வதி
பிறப்பு இடம்: கன்னியகுப்ஜம்
பூர்வாஶ்ரம பெயர்: ஶ்ரீபதி
பூர்வாஶ்ரம தந்தையர் பெயர்: கமலேஶ்வரா
பீடாதிபதியாக ஆண்டுகள்: 33
சித்தி: 3973 நந்தன வைசாக சுக்ல சதுர்தசி (கிபி 0872-ஏப்-29) இரவில்
மற்றவை:
இந்த ஆச்சார்யரின் குருவான ஶ்ரீ அபிநவ ஶங்கரர் இமயமலையில் தத்தாத்ரேய குகையில் பிரவேசம் செய்த போது அவர் மீது கொண்டிருந்த அதீத பக்தியினால் இவரும் அவரை பின்பற்றினார். தன் உயிரையும் விட எண்ணினார். ஆனால் உலகிற்கு இவர் ஆற்ற வேண்டிய கடமை பெரிது என்பதால் ஶ்ரீ அபிநவ ஶங்கரர் அவரை திருப்பி அனுப்பினார்.
பிரபலமான ஆனந்த வர்தனா என்னும் ஆலங்கரிகர் (கவிதை மற்றும் இலக்கிய அறிஞர்) (பொது ஆண்டு 820-890), புகழ்பெற்ற த்வன்யலோகாவை இயற்றியவர்; இந்த ஆச்சார்யரின் சமகாலத்தியவர் ஆவார். அவரும் இந்த காலத்திய பல பெரிய அறிஞர்களும் இந்த ஆச்சார்யரை உயர் மதிப்பீட்டில் வைத்திருந்தனர். மேலும் அவரது தரிசனத்தையும் வழிகாட்டுதலையும் நாடினர். அத்தகைய அறிஞர்களால் சூழப்பட்ட ஆச்சார்யர் பத்மபுராவில் (சரியான இடம் தெரியவில்லை) அதிக நேரம் செலவிட்டார்.
இறுதியாக ஆச்சார்யர் காஞ்சிபுர ஶ்ரீமடத்திற்கு திரும்பினார்.

Wednesday, December 4, 2019

#காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 41





38ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:

ஆஶ்ரமப் பெயர்: ஶ்ரீ தீர ஶங்கரேச ஸரஸ்வதி

அடைமொழி: அபிநவ ஶங்கரர்

பிறந்த இடம்: சிதம்பரம் அருகே வனப்பகுதி (அநேகமாக திருப்பாதிரிப்புலியூர் / கடலூர் பகுதி: அது பின் வரும் வாழ்க்கை வரலாற்றுடன் பொருந்துகிறது)

பூர்வாஶ்ரம பெற்றோர் பெயர்கள்: விசிஷ்டா, விஷ்வஜித் சோமயாஜி

பீடாதிபதியாக ஆண்டுகள்: 52

சித்தி: 3940 சித்தார்த்தி ஆஷாட அமாவாசை (பொ.ஆ 0839-ஜூலை-18)

சித்தியடைந்த இடம்: தத்தத்ரேயா குஹை - ஹிமாலயத்தில்

வேறு:

இந்த ஆச்சார்யரின் தாயார் கணவரின் இறப்பின் போது தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தார். குழந்தையின் நிமித்தமாக அவர் தன் வாழ்க்கையை தக்கவைத்துக் கொண்டாள். கர்ப்பம் என்பது இயற்கைக்கு மாறானதாக இருந்தது. வெகு காலமாயிற்று. ஆரம்பத்தில் ஆதரவாக இருந்த உறவினர்கள் அவர் கர்ப்பமாக இருக்கவில்லை; ஆனால் சில நோய்களால் பாதிக்கப்பட்டாரோ என்று சந்தேகித்தனர். எல்லாவற்றையும் தாங்கிய தாயார் தொடர்ந்து நடராஜருக்கு பிரார்த்தனை செய்தார். குழந்தை இறுதியாக பிறந்தபோது, சமுதாயத்தின் நிராகரிப்புக்குப் பயந்து அதை தனியாக காட்டில் பிரசவித்துவிட்டு, தன் குழந்தையை காப்பாற்ற வன தெய்வங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அந்த காட்டில், நன்கு அறியப்பட்ட சுக்ல யஜூர் வேத ஶாகாவை சேர்ந்த மாத்தியன்தின முனிவரின் மகன் வியாக்ரபாதர் குழந்தையை கண்டெடுத்து தன் மனைவியுடன் சேர்ந்து குழந்தையை வளர்த்தார். சரியான நேரத்தில், அவரே குழந்தையின் உபநயனத்தை செய்தார், மேலும் அவருக்கு எல்லா வித்யைகளையும் கற்றுக் கொடுத்தார்.

நடராஜரின் ஆணைப்படி ஶ்ரீ வித்யாகணேந்த்ர ஸரஸ்வதி(3) அவர்களுக்குப் பின், காஞ்சி காமகோடி சர்வக்ஞ பீடத்தில் ஏறினார். ஶ்ரீ ஆதி ஶங்கரரை விடவும் பிரகாசித்தார் என்கிறது குரு ரத்னா மாலா.

இந்த ஆச்சார்யர் பல்வேறு துர்மதங்கள் நாட்டை ஆக்கிரமித்து இருந்ததால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றி சுற்றி பயணம் செய்து அவற்றை அகற்றினார். சனாதன தர்மமும் அத்வைத மேலாதிக்கமும் மீண்டும் நிறுவப்பட்டது. அவர் காஷ்மீரில் உள்ள ஶாரதா கோவிலில் வடக்கு சர்வக்ஞ பீடத்தில் ஏறினார்.

காந்தார் (ஆப்கானிஸ்தான்), சீனா மற்றும் துருஷ்காஸ் (பெர்சியா) போன்ற இடங்களின் எல்லைகளுக்கு அப்பால் பயணம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது, எனவே அந்தப் பகுதியினர் கூட இவரை குருவாக ஏற்றுக்கொண்டார். இறுதியில், அவர் இமயமலைக்குச் சென்றார், கேதார் அருகே தத்தாத்ரேய குகை எனப்படும் ஒரு தெய்வீக குகையில் நுழைந்தார், அவரது உடல் வடிவம் அதன் பின காணப்படவில்லை. இருப்பினும், அவரைப் பின்பற்றியவர்கள் அவர் ஒரு தெய்வீக வடிவம் எடுத்து சிவனின் இருப்பிடமாக கைலாசத்துக்கு சென்றதாக கண்டனர்.

அவரது வாழ்க்கையின் பல சம்பவங்கள், குறிப்பாக கஷ்மிரில் சர்வக்ஞ பீடம் ஏறியது, கேதரா அருகே சித்தியை அடைந்தது ஆகியன ஶ்ரீ ஆதி ஶங்கரருடன் பொதுவாக இருப்பதால் பலரும் அவரை ஶ்ரீ ஆதி ஶங்கரருடன் குழப்பிக்கொள்ளுகின்றனர்.

 

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 40





 37 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரமப்பெயர்: ஶ்ரீ வித்யாகணேந்திர ஸரஸ்வதி (3)
பிறப்பு இடம்: கருடா நதி (தமிழ்நாட்டில் கெடிலம் நதி )
பூர்வாஶ்ரம பெயர்: சூர்யநாராயணா
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: பாலசந்திரன்
பீடாதிபதியாக ஆண்டுகள்: 30
சித்தி: 3888 பிரபவ பௌஷ கிருஷ்ண த்விதீயை (3888) பொது ஆண்டு 0788-ஜனவரி-03)
மற்றவை:
இந்த ஆச்சார்யரின் காலத்தில், பாரதத்தை முழுவதுமாக துருக்கர்கள் (அநேகமாக முஸ்லிம்கள்) மற்றும் பல்வேறு மிலேச்சர்கள் (பரதத்தின் வடமேற்கு திசையில் இருந்து வந்த நாகரிகமற்ற பழங்குடியினர்) பெருமளவில் ஆக்ரமித்து வந்தனர். அவர்களுடைய மொழிகள் எல்லா இடங்களிலும் கேட்கும் அளவிற்கு இருந்தது.
அத்தகைய சூழ்நிலையில், ஆச்சார்யர் தன் ஶ்ரீவித்யா தவத்தால், சனாதன தர்மத்தை தொடர்ந்துகடைபிடித்தவர்களின் பாரம்பரிய அனுஷ்டானங்களை பாதுகாப்பதில் வெற்றிபெற்றார்.

Monday, December 2, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 39





36 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சித்சுகானந்தேந்திர ஸரஸ்வதி
பிறப்பு இடம்: பாலார் ஆற்றங்கரையில்
பூர்வாஶ்ரம பெயர்: சுரேஷா
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: சோமகிரி
பீடாதிபதியாக ஆண்டுகள்: 21
சித்தி: 3858 ஹேமலம்பி ஆஷ்வயுஜ பூர்ணிமா (கி.மு. 0757 - அக்டோபர் 06)
பிற:
இந்த ஆச்சார்யரின் குரு, இவர் மடத்தில்தான் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். (ஏதோ உள்ளூர் நிலைமையால் ஆச்சார்யர் இருக்க வேண்டி இருக்கலாம்).
எனவே, ஆச்சார்யர் ஒருவேளை காஞ்சிபுரத்தில் மடத்திலேயே சித்தியை அடைந்திருப்பார் என்று ஊகிக்கப்படுகிறது.