38ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரமப் பெயர்: ஶ்ரீ தீர ஶங்கரேச ஸரஸ்வதி
அடைமொழி: அபிநவ ஶங்கரர்
பிறந்த இடம்: சிதம்பரம் அருகே வனப்பகுதி (அநேகமாக திருப்பாதிரிப்புலியூர் / கடலூர் பகுதி: அது பின் வரும் வாழ்க்கை வரலாற்றுடன் பொருந்துகிறது)
பூர்வாஶ்ரம பெற்றோர் பெயர்கள்: விசிஷ்டா, விஷ்வஜித் சோமயாஜி
பீடாதிபதியாக ஆண்டுகள்: 52
சித்தி: 3940 சித்தார்த்தி ஆஷாட அமாவாசை (பொ.ஆ 0839-ஜூலை-18)
சித்தியடைந்த இடம்: தத்தத்ரேயா குஹை - ஹிமாலயத்தில்
வேறு:
இந்த ஆச்சார்யரின் தாயார் கணவரின் இறப்பின் போது தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தார். குழந்தையின் நிமித்தமாக அவர் தன் வாழ்க்கையை தக்கவைத்துக் கொண்டாள். கர்ப்பம் என்பது இயற்கைக்கு மாறானதாக இருந்தது. வெகு காலமாயிற்று. ஆரம்பத்தில் ஆதரவாக இருந்த உறவினர்கள் அவர் கர்ப்பமாக இருக்கவில்லை; ஆனால் சில நோய்களால் பாதிக்கப்பட்டாரோ என்று சந்தேகித்தனர். எல்லாவற்றையும் தாங்கிய தாயார் தொடர்ந்து நடராஜருக்கு பிரார்த்தனை செய்தார். குழந்தை இறுதியாக பிறந்தபோது, சமுதாயத்தின் நிராகரிப்புக்குப் பயந்து அதை தனியாக காட்டில் பிரசவித்துவிட்டு, தன் குழந்தையை காப்பாற்ற வன தெய்வங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அந்த காட்டில், நன்கு அறியப்பட்ட சுக்ல யஜூர் வேத ஶாகாவை சேர்ந்த மாத்தியன்தின முனிவரின் மகன் வியாக்ரபாதர் குழந்தையை கண்டெடுத்து தன் மனைவியுடன் சேர்ந்து குழந்தையை வளர்த்தார். சரியான நேரத்தில், அவரே குழந்தையின் உபநயனத்தை செய்தார், மேலும் அவருக்கு எல்லா வித்யைகளையும் கற்றுக் கொடுத்தார்.
நடராஜரின் ஆணைப்படி ஶ்ரீ வித்யாகணேந்த்ர ஸரஸ்வதி(3) அவர்களுக்குப் பின், காஞ்சி காமகோடி சர்வக்ஞ பீடத்தில் ஏறினார். ஶ்ரீ ஆதி ஶங்கரரை விடவும் பிரகாசித்தார் என்கிறது குரு ரத்னா மாலா.
இந்த ஆச்சார்யர் பல்வேறு துர்மதங்கள் நாட்டை ஆக்கிரமித்து இருந்ததால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றி சுற்றி பயணம் செய்து அவற்றை அகற்றினார். சனாதன தர்மமும் அத்வைத மேலாதிக்கமும் மீண்டும் நிறுவப்பட்டது. அவர் காஷ்மீரில் உள்ள ஶாரதா கோவிலில் வடக்கு சர்வக்ஞ பீடத்தில் ஏறினார்.
காந்தார் (ஆப்கானிஸ்தான்), சீனா மற்றும் துருஷ்காஸ் (பெர்சியா) போன்ற இடங்களின் எல்லைகளுக்கு அப்பால் பயணம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது, எனவே அந்தப் பகுதியினர் கூட இவரை குருவாக ஏற்றுக்கொண்டார். இறுதியில், அவர் இமயமலைக்குச் சென்றார், கேதார் அருகே தத்தாத்ரேய குகை எனப்படும் ஒரு தெய்வீக குகையில் நுழைந்தார், அவரது உடல் வடிவம் அதன் பின காணப்படவில்லை. இருப்பினும், அவரைப் பின்பற்றியவர்கள் அவர் ஒரு தெய்வீக வடிவம் எடுத்து சிவனின் இருப்பிடமாக கைலாசத்துக்கு சென்றதாக கண்டனர்.
No comments:
Post a Comment