Pages

Friday, May 8, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 38






ௐ ஆம்நாயப²லதா³யகாய நம: ।
வேத/ தந்த்ர சாத்திரங்களில் கூறப்படுள்ள பலன்களை தருபவனே
ௐ த்⁴ருʼதாக்ஷஸூத்ரபாணயே நம: ।ருத்ராக்ஷ மாலையை கையில் ஏந்தியவனே
ௐ அக்ஷிரோக³விநாஶநாய நம: ।கண் நோய்களை நாசம் செய்பவனே
ௐ முகுந்த³பூஜ்யாய நம: ।முகுந்தனால் கௌரவிக்கப்பட்டவனே
ௐ மோஹாங்கா³ய நம: ।
மோகத்தை உண்டு செய்யும் அங்கங்களை உடையவனே
ௐ முநிமாநஸதோஷிதாய நம: ।முனிவர்களை மனதுக்கு திருப்தி அளிப்பவனே
ௐ தைலாபி⁴ஷிக்தஸுஶிரஸே நம: ।
தைலங்களால் அபிஷேகம் செய்யப்பட்ட தலையை உடையவனே
ௐ தர்ஜநீமுத்³ரிகாயுதாய நம: ।
ஆட்காட்டி விரல் (அதிகார) முத்திரையை காட்டுபவனே
ௐ தடாதகாமந:ப்ரீதாய நம: ।மீனாட்சியின் மனதுக்கு பிடித்தவனே
ௐ தமோகு³ணவிநாஶநாய நம: । 910தமோகுணத்தை நாசம் செய்பவனே
ௐ அநாமயாய நம: ।பிணியற்றவனே
ௐ அநாத³ர்ஶாய நம: ।தர்சிக்க இயலாதவனே
ௐ அர்ஜுநாபா⁴ய நம: ।தங்க நிறத்தோனே
ௐ ஹுதப்ரியாய நம: ।ஹோமங்களை விரும்புகிறவனே
ௐ ஷாட்³கு³ண்யபரிஸம்பூர்ணாய நம: ।அறுகுணத்தோனே
ௐ ஸப்தாஶ்வாதி³க்³ரஹைஸ்துதாய நம: ।
ஏழு குதிரையோன் (சூரியன்) முதலான கிரகங்களால் துதிக்கப்பட்டவனே
ௐ வீதஶோகாய நம: ।சோகமற்றவனே
ௐ ப்ரஸாத³ஜ்ஞாய நம: ।தியானத்தில் இருப்பவனே
ௐ ஸப்தப்ராணவரப்ரதா³ய நம: ।எழுவருக்கு ப்ராண வரம் அளித்தவனே
ௐ ஸப்தார்சிஷே நம: । 920அக்னி உருவினனே
ௐ த்ரிநயநாய நம: ।முக்கண்ணனே
ௐ த்ரிவேணீப²லதா³யகாய நம: ।திரிவேணி (ஸ்நான) பலனை அளிப்பவனே
ௐ க்ருʼஷ்ணவர்த்மநே நம: ।கருத்த இமைகளை கொண்டவனே
ௐ வேத³முகா²ய நம: ।வேதம் ஓதுபவனே
ௐ தா³ருமண்ட³லமத்⁴யகாய நம: ।அடர்ந்த மரங்கள் மத்தியில் இருப்பவனே

  சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
 
 
903. ஆம்நாய பலதாயக: வேதத்தில் கூறப்பட்டுள்ள பலங்களை அளிப்பவன்.
904. அக்ஷஸுத்ர த்ருதபாணி: ருத்ராக்ஷ மாலையைக் கையில் தரித்தவன்.
905. அக்ஷிரோக விநாசன: கண்களின் நோயைக் போக்கடிப்பவன் (த்ருஷ்டி தோஷத்தை அகற்றுபவன்)
906. முகுந்த புஜ்ய: முகுந்தனால் பூஜிக்கப்பட்டவன்.
907. மோஹாங்க: மோகத்தை உண்டு பண்ணும் அங்கங்களை அல்லது சேனைகளை உடையவன்.
908. முனிமானஸ தோஷித: முனிவர்களின் மனத்திற்கு சந்தோஷத்தை அளிப்பவன்.
909. தைலா பிஷிக்த ஸுசிரா : எண்ணையால் அபிஷேகம் செய்யப்பட்ட தலையை உடையவன்.
910. தர்ஜனி முத்ர தர்சன :அதிகார முத்திரையைக் காண்பிப்பவன்.
911. தடாத காமனப்ரீத : ஸ்ரீமீனாக்ஷி தேவியின் மனதுக்குப் பிரியமானவன்.
912. தமோகுண விநாசன: தமோ குணத்தைக் கண்டிப்பவன்.
913. அநாமய: பிணி இல்லாதவன்.
914. அநாதர்ச: பார்க்க முடியாதவன்.
915,916. அர்ஜுனாப ஹுதப்ரீய : வெண் சங்கத்தில் பிரியம் உள்ளவன்.
917. ஷாட்க்குண்ய பரிஸம்பூர்ண : ஸந்தி, விக்ரஹம், யானம், ஆவனம் த்வைதம், ஆச்ரயம் என்று மனுவினால் ராஜந்தியில் கூறப்பட்டுள்ள ஆறுவித குணங்களால் நிறைந்தவன்.
918. ஸப்தாச் வாதி கிரஹைஸ்துத : சூரியன் முதலிய கிரஹங்களால் போற்றப்பட்டவன்.
919. வீத சோக: சோகமற்றவன்.
920. பிரஸாதக்ஞ: அனுராகம் அறிந்தவன்
921. ஸப்தப்ராண வரப்ரத : ஸப்த ரிஷிகளுக்கும் ப்ராணதாரணா யோகவரம் அளித்தவன்.
922. ஸப்தார்ச்சி : அக்னி உருவமானவன்.
923. த்ரிநயன: மூன்று கண்களை உடையவன்.
924. த்ரிவேணி பலதாயக : கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளின் ஸங்கமத்தில் ஸ்நானம் செய்வதால் ஏற்படும் பலனை அளிப்பவன் (சபரிமலை யாத்ரா மார்க்கத்தில் கங்கையை ஒத்த பம்பா நதியும் யமுனையை ஒத்த கல்லாறும் கலக்கும் இடத்தில் அந்தர் வாகினியாக சரஸ்வதியும் சேர்ந்து ஒர் திரிவேணி ஸங்கமம் ஏற்படுகிறது. திரிவேணி ஸ்நான பலன் இங்கு ஸ்நானம் செய்தாலும் கிடைப்பதாக பெரியோர்கள் கூறுவர்.
925. க்ருஷ்ண வர்மா: கருத்த சட்டை அணிந்தவன்.
926. வேதமுக: வேதம் ஒதுபவன், நான்கு முகம் உள்ளவன்.
927. தாருமண்டல மத்யக: மரங்கள் அடர்ந்த இடத்தில் இருப்பவன்.

Thursday, May 7, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் -1




 

॥ श्रीमत्-शङ्कर-भगवत्पाद-सहस्रनाम-स्तोत्रम्
*
श्रीगुरुः शुद्धहृदयः श्रेयान् शान्तो दयानिधिः।
दान्तस्तितिक्षुश्चन्द्राभो न्यस्तकर्मा समाहितः॥१॥
चटुलो यतचित्तश्च श्रद्दधानश्चिरन्तनः।
चापलश्चतुरास्येड्यश्चरितव्रतकोविदः॥२॥


ஶ்ரீ
॥ ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃-
ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் ॥
*
ஶ்ரீகு₃ருஶுத்₃த₄ஹ்ருʼத₃யஶ்ரேயாந் ஶாந்தோ₁ த₃யாநிதி₄
தா₃ந்த₁ஸ்தி₁தி₁க்ஷுஶ்ச₁ந்த்₃ராபோ₄
ந்யஸ்த₁க₁ர்மா ஸமாஹித₁1
ச₁டு₁லோ யத₁சி₁த்₁த₁ஶ்ச₁ ஶ்ரத்₃த₃தா₄நஶ்சி₁ரந்த₁ந
சா₁ப₁லஶ்ச₁து₁ராஸ்யேட்₃யஶ்ச₁ரித₁வ்ரத₁கோ₁வித₃2


1. ஶ்ரீகு₃ரவே நம꞉ஶ்ரீ குருவே நமஸ்காரம்
2. ஶுத்₃த₄ஹ்ருʼத₃யாய நம꞉சுத்தமான ஹ்ருதயத்தை உடையவர்
3. ஶ்ரேயஸே நம꞉உயர்ந்தவர்
4. ஶாந்தா₁ய நம꞉சாந்தமானவர்
5. த₃யாநித₄யே நம꞉கருணையின் கருவூலமானவர்
6. தா₃ந்தா₁ய நம꞉புற புலன்களை அடக்கியவர்
7. தி₁தி₁க்ஷவே நம꞉பொறுமை உடையவர்
8. ச₁ந்த்₃ராபா₄ய நம꞉சந்திரன் போல் பிரகாசிப்பவர்
9. ந்யஸ்த₁க₁ர்மணே நம꞉ஸம்ஸாரிகளின் செயல்களை விடுத்தவர்
10. ஸமாஹிதா₁ய நம꞉மனதையும் புலன்களையும் ஸத்விஷயங்களில்
நிறுத்தியவர்
11. ச₁டு₁லாய நம꞉அழகுற எப்பொழுதும் காரியங்களில் முற்பட்டவர்
12. யத₁சி₁த்₁தா₁ய நம꞉மனதை அடக்கியவர்
13. ஶ்ரத்₃த₃தா₄நாய நம꞉ஶாஸ்த்ரம் மற்றும் குரு வாக்கியத்தில் நம்பிக்கை
உடையவர்
14. சி₁ரந்த₁நாய நம꞉(தக்ஷிணாமூர்த்தி வடிவில்) தொன்றுதொட்டு
இருப்பவர்
15. சா₁ப₁லாய நம꞉(மக்கள் நல்வழியில் வரமாட்டார்களா என்ற)
அவா கொண்டவர்
16. ச₁து₁ராஸ்யேட்₃யாய நம꞉ப்ரஹ்மாவால் போற்றப்பட்டவர்
17. ச₁ரித₁வ்ரத₁கோ₁விதா₃ய நம꞉விடாது நன்னடத்தையில் திறம்பட இருப்பவர்

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 37






ௐ மஹேஶாய நம: ।பெரிய ஈசனே
ௐ விக்ஞமாநஸாய நம: ।
ௐ கி³ரீஜாஸ்தந்யரஸிகாய நம: ।மலைமகளின் முலைப்பால் உண்டவனே
ௐ கி³ரிராஜவரஸ்துதாய நம: ।மலையரசனுக்கு வரமளித்தவனே
ௐ பீயூஷகும்ப⁴ஹஸ்தாப்³ஜாய நம: । 880சீம்பால் குடத்தை கையில் ஏந்தியவனே
ௐ பாஶத்யாகி³நே நம: ।தளைகளை அறுத்தவனே
ௐ சிரந்தநாய நம: ।ஆதிகாலம் முதல் உள்ளவனே
ௐ ஸுதா⁴லாலஸவக்த்ராப்³ஜாய நம: ।தேனை விரும்பும் முகத்தாமரை கொண்டவனே
ௐ ஸுரத்³ரமப²லேப்ஸிதாய நம: ।தேவ லோக மரங்களுக்கு நீர் வார்ப்பவனே
ௐ ரத்நஹாடகபூ⁴ஷாங்கா³ய நம: ।ரத்னங்கள் பதித்த தங்க ஆபரணங்கள் பூண்டவனே
ௐ ராவணாபி⁴ப்ரபூஜிதாய நம: ।ராவணனால் பூசிக்கப்பட்டவனே
ௐ கநத்காலேயஸுப்ரீதாய நம: ।கநத்காலனிடம் [பிரியம் கொண்டவனே
ௐ க்ரௌஞ்சக³ர்வவிநாஶநாய நம: ।க்ரௌஞ்ச மலையின் கர்வத்தை அடக்கியவனே
ௐ அஶேஷஜநஸம்மோஹநாய நம: ।எல்லா ஜனங்களையும் மோகிக்கச்செய்பவனே
ௐ ஆயுர்வித்³யாப²லப்ரதா³ய நம: । 890ஆயுளும் கல்வியும் பலனாக அருள்பவனே
ௐ அவப³த்³த⁴து³கூலாங்கா³ய நம: ।
துகூலமெனும் மரப்பட்டையாலான மெல்லிய ஆடை தொங்குமாறு அணிந்தவனே
ௐ ஹாராலங்க்ருʼதகந்த⁴ராய நம: ।மேகங்களை மாலையாக அணிந்தவனே
ௐ கேதகீகுஸுமப்ரீயாய நம: ।தாழை மலரை விரும்புபவனே
ௐ கலபை:⁴பரிவாரிதாய நம: ।இளம் யானைகளால் சூழப்பட்டவனே
ௐ கேகாப்ரியாய நம: ।மயிலின் அகவலை விரும்புபவனே
ௐ கார்திகேயாய நம: ।கார்த்திகேயனே
ௐ ஸாரங்க³நிநத³ப்ரியாய நம: ।யானையின் பிளிரலை விரும்புபவனே
ௐ சாதகாலாபஸந்துஷ்டாய நம: ।மயில் தோகையில் உவகை கொண்டவனே
ௐ சமரீம்ருʼக³ஸேவிதாய நம: ।சமர மிருகங்களால் தொழப்பட்டவனே
ௐ ஆம்ரகூடாத்³ரிஸஞ்சாரய நம: । 900மாமரங்கள் அடந்த மலைகளில் சுற்றுபவனே


  சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:

877. கானலோல: ஸங்கீதன் (நாகலோல - பாம்பாட்டி)
878. மஹேச: மகேசன்.
879. விக்ஞாமானஸ: பெரிய அறிவாளி.
880. கிரிஜாஸ்தன்ய ரஸிக : அம்பிகையின் ஸ்தன்யத்தில் விருப்பம் உள்ளவன்.
881. கிரிராஜ வரஸுத: கைலைமலை நாதனின் புத்திரன்.
882. பயூஷ கும்ப ஹஸ்தாப்ஜ : அமிர்த கலசத்தைக் கையில் கொண்டவன்.
883. பாசத்யாக : ஆசைகள் அற்றவன். போரில் சத்ருக்கள் மீது பாசாயுதம் தொடுத்தவன்.
884. சிரந்தன : எப்போதும் உள்ளவன்.
885. ஸுதாலாலஸ வக்த்ராப்ஜ: அமிர்தம் போல் இனிக்கும் குரலை உடைய முகம் கொண்டவன்.
886. ஸுரத்ரும பலேப்ஸித : ஸ்வர்க்கத்திலுள்ள மரங்களின் பழங்களில் ஆசை கொண்டவன்.
887. ரத்ன ஹாடக பூஷாங்க : ரத்னங்கள் பதித்த தங்க (காது) ஆபரணம் பூண்டவன்.
888. ராவணாதி ப்ரபூஜித: ராவணன் முதலிய அரக்கர்களால் பூஜிக்கப்பட்டவன்.
889. கனத் காலேஸ ஸுப்ரித : கனத்காலேசன் என்பவனிடம் பிரியம் கொண்டவன்.
890. க்ரௌஞ்ச கர்வ வினாசன: மலை உருவம் கொண்ட கிரௌஞ்சன் என்ற அரக்கனின் அகந்தையை அழித்தவன்.
891. அசேஷ ஜன ஸம்மோஹ: எல்லா ஜனங்களையும் தனது உருவத்தாலும் செய்கையாலும் மோகிக்கச் செய்கிறவன்.
892. ஆயுர்வித்யா பலப்ரத: ஆயுளையும், வித்யைதனையும் அளிப்பவன். வைத்யமுறையில் பலனளிப்பவன்.
893. அவபத்தது கூலாங்க:வெண்பட்டில் மேலாடை தரித்தவன்.
894. ஹாராலங்க்ருத கந்தர: ஹாரங்களை (மாலைகளை) தரித்தவன்.
895. கேதக குஸுமப்ரீத: தாழம்பூவில் ஆசை கொண்டவன்.
896. கலபை பரிவாரித: யானைகளால் சூழப்பட்டவன்.
897. கேகாப்ரிய: மயிலின் அகவலில் பிரியம் உள்ளவன்.
898. கார்த்திகேய : கிருத்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன். முருகன்.
899. ஸாரங்கி நிநதப்ரிய : ஸாரங்கி வாத்ய ஒலியில் பிரியம் கொண்டவன்.
900. சாதகாலப் ஸந்துஷ்ட: சாதக பக்ஷிகளின் கூச்சலில் பிரியம் கொண்டவன்.
901. சமரீம்ருக ஸேவித: சமர் என்ற மிருகங்களால் ஸேவிக்கப்பட்டவன்.
902. ஆம்ரகூடாத்ரி ஸஞ்சார : ஆம்ர கூடம் என்ற மலையில் ஸஞ்சரிப்பவன் மாமரங்கள் அடர்ந்த மலையில் ஸஞ்சரிப்பவன்.

Wednesday, May 6, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 36






ௐ ஸங்கீ³தலோலுபமநஸே நம: ।சங்கீதத்தில் இயைந்த மனதுடையவனே
ௐ ஸ்நிக்³த⁴க³ம்பீ⁴ரக³ர்ஜிதாய நம: ।பாசத்தோடும் கம்பீரத்தோடும் கர்ஜனை செய்பவனே
ௐ துங்க³வக்த்ராய நம: ।மஞ்சள் முகத்தோனே
ௐ ஸ்தவரஸாய நம: ।துதிகளில் ரச்னை உள்ளவனே
ௐ அப்⁴ராபா⁴ய நம: ।தங்கம் போல் ஒளிர்பவனே
ௐ ப்⁴ரமரேக்ஷணாய நம: ।வண்டு போன்ற கண்களை உடையவனே
ௐ லீலாகமலஹஸ்தாப்³ஜாய நம: ।
விளையாட தாமரைகளை ஏந்திய தாமரை போன்ற கையனே
ௐ பா³லகுந்த³விபூ⁴ஷிதாய நம: ।முல்லை மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டவனே
ௐ லோத்⁴ரப்ரஸவஶுத்³தா⁴பா⁴ய நம: ।
லோத்ர மரத்தின் (காய்/ மலர்) போன்ற தூய ஒளியை கொண்டவனே
ௐ ஶிரீஷகுஸுமப்ரியாய நம: । 860வாகை மொட்டை விரும்புபவனே
ௐ த்ரஸ்தத்ராணகராய நம: ।பயத்தில் இருந்து விடுதலை அளிப்பவனே
ௐ தத்வாய நம: ।தத்துவமாய் இருப்பவனே
ௐ தத்வவாக்யார்த⁴போ³த⁴காய நம: ।தத்துவ வாக்கியங்களின் பொருளாய் இருப்பவனே
ௐ வர்ஷீயஸே நம: ।வயோதிகனே
ௐ விதி⁴ஸ்துத்யாய நம: ।மெச்சக்கூடிய நடத்தை உடையவனே
ௐ வேதா³ந்தப்ரதிபாத³காய நம: ।வேதாந்த நூல்களில் விவரிக்கப்பட்டவனே
ௐ மூலபு⁴தாய நம: । ?மூல பூதாய அடிப்படையானவனே
ௐ மூலதத்வாய நம: ।அடிப்படை தத்துவமானவனே
ௐ மூலகாரணவிக்³ரஹாய நம: ।மூல காரண உருவமானவனே
ௐ ஆதி³நாதா²ய நம: । 870ஆதி தலைவனே
ௐ அக்ஷயப²லாய நம: ।குறைவற்ற பலனை கொடுப்பவனே
ௐ பாணிஜந்மநே நம: ।
ௐ அபராஜிதாய நம: ।வெல்ல முடியாதவனே
ௐ கா³நப்ரியாய நம: ।சங்கீதப்பிரியனே
ௐ கா³நலோலாய நம: ।சங்கீதப்பிரியனே


     சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
 
854. ஸங்கீத லோலுப மன: சங்கீதத்தில் இசைந்த மனம் உடையவன்.
855. ஸ்நிக்த கம்பர கர்ஜித: அழகாயும் பயங்கரமாயும் கர்ஜிப்பவன்.
856. துங்க வக்த்ர : உயர்ந்த முகம் உள்ளவன்.
857. ஸ்தவரஸ: துதிப்பதில் பிரியம் உள்ளவன்.
858. அப்ராப: ஆகாசம் போன்றவன்.
859. ப்ரமரேக்ஷண: வண்டு போன்ற கண்கள் உடையவன்.
860. லீலாகமல ஹஸ்தாப்ஜ: விளையாடுவதற்காக தாமரை புஷ்பங்களைக் கையில் தரித்தவன்.
861. பாலகுந்த விபூஷித : இளமையான முல்லை புஷ்பம் சூடியவன்.
862. லோத்ர ப்ரஸவ ஸுத்தாப: லொத்தி மரத்தின் பிசின் போன்றவன். (லொத்தி மரத்தின் பிஸின் அதிஸார ரோகத்தைப் போக்கும்)
863. கிரீஷ குஸும : வாகைப் புஷ்பத்தில் பிரியம் உள்ளவன்.
864. த்ராஸத்ராணகர: பயத்திலிருந்து விடுவிப்பவன்.
865. தத்வ: உண்மையானவன்.
866. தத்வவாக்யார்த்த போதக : உண்மையான சொற்களின் பொருளை விளக்குபவன்.
867. வர்ஷீயான் : வயோதிகன்.
868. விதாதவ்ய: கட்டளை இடக் கூடியவன்.
869. வேதாந்த ப்ரதிபாதக : வேதாந்த சாஸ்திரங்களில் கூறப்பட்டவன்.
870. மூலபூத: எல்லாவற்றுக்கும் மூலமானவன்.
871. மூலதத்வ : தத்துவங்களுக்குள் முதலானவன் அதாவது ப்ரக்ருதி ரூபன்.
872. மூலகாரண விக்ரஹ: ப்ரக்ருதிக்குக் காரணமான உருவன்.
873. ஆதிநாத: படைப்புக் காலத்தில் தோன்றிய முதல் கடவுள்.
874. அக்ஷய பலபாணி : நாசமற்ற பலனை அளிக்கும் கரங்களை உடையவன்.
875. ஜன்ம பராஜித : பிறவியை ஜயித்தவன்.
876. கானப்ரிய : ஸங்கீதத்தில் பிரியம் உள்ளவன். (நாகப்ரிய-ஸர்ப்பங்களிடம் பிரியம் கொண்டவன்)
877. கானலோல: ஸங்கீதன் (நாகலோல - பாம்பாட்டி)

Tuesday, May 5, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 35






ௐ நீராஜநப்ரீதமநஸே நம: ।கற்பூர ஹாரத்தியை விரும்புபவனே
ௐ நீலநேத்ராய நம: ।நீல கண்கள் உடையவனே
ௐ நயப்ரதா³ய நம: ।நல்ல மேலாண்மையை அளிப்பவனே
ௐ கேதா³ரேஶாய நம: ।கேதாரின் தலைவனே
ௐ கிராதாய நம: । 830வேடனே
ௐ காலாத்மநே நம: ।காலத்தின் உருவினனே
ௐ கல்பவிக்³ரஹாய நம: ।கல்ப காலத்துக்கும் தோற்றம் அளிப்பவனே
ௐ கல்பாந்தபை⁴ரவாராத்⁴யாய நம: ।கல்பாந்த பைரவரால் பூஜிக்கப்பட்டவனே
ௐ கங்க³பத்ரஶராயுதா⁴ய நம: ।கங்க இலையை அம்பாக கொண்டவனே
ௐ கலாகாஷ்டஸ்வரூபாய நம: ।
கலா காஷ்டம் எனும் அடிப்படை நேர கணக்கு உருவினனே
ௐ ருʼதுவர்ஷாதி³மாஸவாநே நம: ।ருது வர்ஷம் மாதம் ஆகியவையாக ஆனவனே
ௐ தி³நேஶமண்ட³லாவாஸாய நம: ।சூரிய மண்டலத்தில் வசிப்பவனே
ௐ வாஸவாபி⁴ப்ரபூஜிதாய நம: ।இந்திரனாலும் பூஜிக்கப்பட்டவனே
ௐ ப³ஹூலாஸ்தம்ப³கர்மஜ்ஞாய நம: ।
நிறைய கம்பங்கள் நட்டு செய்யப்படும் யாகங்களை அறிந்தவனே
ௐ பஞ்சாஶத்³வர்ணரூபகாய நம: । 840ஐம்பது எழுத்துக்களின் ரூபமானவனே
ௐ சிந்தாஹீநாய நம: ।நினைவுகள் அற்றவனே
ௐ சிதா³க்ராந்தாய நம: ।பேரறிவால் நிரம்பியவனே
ௐ சாருபாலாய நம: ।அழகிய காப்பாளனே
ௐ ஹலாயுதா⁴ய நம: ।கலப்பையை ஆயுதமாக கொண்டவனே
ௐ ப³ந்தூ⁴ககுஸுமப்ரக்²யாய நம: ।அர்ஜுன மரத்தின் மொட்டு போல் ஒளிர்பவனே
ௐ பரக³ர்வவிப⁴ஞ்ஜநாய நம: ।பிறர் கர்வத்தை உடைப்பவனே
ௐ வித்³வத்தமாய நம: ।பெரும் வித்தையுள்ளவனே
ௐ விராத⁴க்⁴நாய நம: ।தடுத்து அழிப்பவனே
ௐ ஸசித்ராய நம: ।பல்விதமாய் தோன்றுபவனே
ௐ சித்ரகர்மகாய நம: । 850சித்தரிப்பவனே


    சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
 
829. நீராஜ்னப்ரீதமனா : கற்பூர ஹாரதியில் பிரியம் கொண்ட மனதுள்ளவன்.
830. நீரநேத்ர : ஜலம் போன்ற கண்களை உடையவன்
831. நயப்ரத: நியாயப்படி அருளுகிறவன்.
832. கேதாரேச: கேதார ஷேத்திரபதி, பூபதி.
833. கிராத: வேடுவன், எருமேலி நிலையன்.
834. காலாத்மா: காலரூபன்.
835. கல்ப விக்ரஹ: இஷ்டப்படி உருவம் எடுத்துக் கொள்பவன். கல்பம் என்பது எத்தனையோ வருடங்கள் கொண்ட கால அளவு, அவ்வளவு காலம் போர் புரிபவன் ஸமர்த்தன், ஸரீரத்தில் களைப்பு இல்லாதவன் என்பதும் பொருள்.
836. கல்பாந்த பைரவா ராத்யா: பிரளய காலத்தில் பைரவனால் பூஜிக்கத் தகுந்தவன்.
837. காகபத்ர சராயுத காக்கை இறகை பாணமாகக் கொண்டவன்
838. கலா காஷ்ட ஸ்வரூப: கலை காஷ்டா என்கிற காலரூபன், எல்லாக் கலைகளின் முடிவான ரூபன்.
839. ருதுவர்ஷாதி மாஸவான் : வஸந்தம் முதலான ருதுக்கள், பிரபவ முதலான வருடங்கள், சித்திரை முதலான மாதங்கள் இவைகளுக்கு அதிஷ்டான தேவதைகளால் சூழப்பட்டவன்.
840. தினேச மண்டலவாஸா: சூர்ய மண்டலத்தில் வசிப்பவன்.
841. வாசவேன ப்ரபூஜித: இந்திரனால் பூஜிக்கப்பட்டவன்.
842. பஹுலாஸ்தம்ப கர்மக்ஞ: நெல் முதலிய தானியங்களை அதிகமாக விளைவிக்கும் தொழிலை அறிந்தவன்.
843. பஞ்சா ஸத்வர்ண ரூபக : வடமொழி எழுத்துக்கள் (50) தான் எல்லாவற்றிற்கும் மூலகாரணம் என்று நீரூபித்தவன்.
844. சிந்தாஹீன : வேறு நினைவுகள் அற்றவன்.
845. சிதாக்ராந்த : ஞானம் நிறைந்தவன்.
846. சாருபால: சரீர பலத்தை ஆயுதமாகக் கொண்டவன்.
848. பந்தூக குஸுமப்ரக்ய : செம்பருத்தி புஷ்பம் போன்றவன்.
849. பரகர்வ விபஞ்சன : சத்துருக்களின் கர்வத்தை அகற்றுபவன்.
850. வித்வத்தம் : பெரிய படிப்பாளி
851. விராதக்ன: விராதன் என்னும் அரக்கனை அழித்தவன் ஸ்ரீராம உருவன்.
852. ஸசித்ர : ஆச்சரியமான காரியங்களோடு கூடியவன். சித்ரகுப்தன் என்ற தேவனோடு இருப்பவன், கணக்கன்.
853. சித்ரகர்ம : சித்தரிப்பவன்.