சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
903. ஆம்நாய பலதாயக: வேதத்தில் கூறப்பட்டுள்ள பலங்களை அளிப்பவன்.
904. அக்ஷஸுத்ர த்ருதபாணி: ருத்ராக்ஷ மாலையைக் கையில் தரித்தவன்.
905. அக்ஷிரோக விநாசன: கண்களின் நோயைக் போக்கடிப்பவன் (த்ருஷ்டி தோஷத்தை அகற்றுபவன்)
906. முகுந்த புஜ்ய: முகுந்தனால் பூஜிக்கப்பட்டவன்.
907. மோஹாங்க: மோகத்தை உண்டு பண்ணும் அங்கங்களை அல்லது சேனைகளை உடையவன்.
908. முனிமானஸ தோஷித: முனிவர்களின் மனத்திற்கு சந்தோஷத்தை அளிப்பவன்.
909. தைலா பிஷிக்த ஸுசிரா : எண்ணையால் அபிஷேகம் செய்யப்பட்ட தலையை உடையவன்.
910. தர்ஜனி முத்ர தர்சன :அதிகார முத்திரையைக் காண்பிப்பவன்.
911. தடாத காமனப்ரீத : ஸ்ரீமீனாக்ஷி தேவியின் மனதுக்குப் பிரியமானவன்.
912. தமோகுண விநாசன: தமோ குணத்தைக் கண்டிப்பவன்.
913. அநாமய: பிணி இல்லாதவன்.
914. அநாதர்ச: பார்க்க முடியாதவன்.
915,916. அர்ஜுனாப ஹுதப்ரீய : வெண் சங்கத்தில் பிரியம் உள்ளவன்.
917. ஷாட்க்குண்ய பரிஸம்பூர்ண : ஸந்தி, விக்ரஹம், யானம், ஆவனம் த்வைதம், ஆச்ரயம் என்று மனுவினால் ராஜந்தியில் கூறப்பட்டுள்ள ஆறுவித குணங்களால் நிறைந்தவன்.
918. ஸப்தாச் வாதி கிரஹைஸ்துத : சூரியன் முதலிய கிரஹங்களால் போற்றப்பட்டவன்.
919. வீத சோக: சோகமற்றவன்.
920. பிரஸாதக்ஞ: அனுராகம் அறிந்தவன்
921. ஸப்தப்ராண வரப்ரத : ஸப்த ரிஷிகளுக்கும் ப்ராணதாரணா யோகவரம் அளித்தவன்.
922. ஸப்தார்ச்சி : அக்னி உருவமானவன்.
923. த்ரிநயன: மூன்று கண்களை உடையவன்.
924. த்ரிவேணி பலதாயக : கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளின் ஸங்கமத்தில் ஸ்நானம் செய்வதால் ஏற்படும் பலனை அளிப்பவன் (சபரிமலை யாத்ரா மார்க்கத்தில் கங்கையை ஒத்த பம்பா நதியும் யமுனையை ஒத்த கல்லாறும் கலக்கும் இடத்தில் அந்தர் வாகினியாக சரஸ்வதியும் சேர்ந்து ஒர் திரிவேணி ஸங்கமம் ஏற்படுகிறது. திரிவேணி ஸ்நான பலன் இங்கு ஸ்நானம் செய்தாலும் கிடைப்பதாக பெரியோர்கள் கூறுவர்.
925. க்ருஷ்ண வர்மா: கருத்த சட்டை அணிந்தவன்.
926. வேதமுக: வேதம் ஒதுபவன், நான்கு முகம் உள்ளவன்.
927. தாருமண்டல மத்யக: மரங்கள் அடர்ந்த இடத்தில் இருப்பவன்.
No comments:
Post a Comment