Pages

Wednesday, May 6, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 36






ௐ ஸங்கீ³தலோலுபமநஸே நம: ।சங்கீதத்தில் இயைந்த மனதுடையவனே
ௐ ஸ்நிக்³த⁴க³ம்பீ⁴ரக³ர்ஜிதாய நம: ।பாசத்தோடும் கம்பீரத்தோடும் கர்ஜனை செய்பவனே
ௐ துங்க³வக்த்ராய நம: ।மஞ்சள் முகத்தோனே
ௐ ஸ்தவரஸாய நம: ।துதிகளில் ரச்னை உள்ளவனே
ௐ அப்⁴ராபா⁴ய நம: ।தங்கம் போல் ஒளிர்பவனே
ௐ ப்⁴ரமரேக்ஷணாய நம: ।வண்டு போன்ற கண்களை உடையவனே
ௐ லீலாகமலஹஸ்தாப்³ஜாய நம: ।
விளையாட தாமரைகளை ஏந்திய தாமரை போன்ற கையனே
ௐ பா³லகுந்த³விபூ⁴ஷிதாய நம: ।முல்லை மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டவனே
ௐ லோத்⁴ரப்ரஸவஶுத்³தா⁴பா⁴ய நம: ।
லோத்ர மரத்தின் (காய்/ மலர்) போன்ற தூய ஒளியை கொண்டவனே
ௐ ஶிரீஷகுஸுமப்ரியாய நம: । 860வாகை மொட்டை விரும்புபவனே
ௐ த்ரஸ்தத்ராணகராய நம: ।பயத்தில் இருந்து விடுதலை அளிப்பவனே
ௐ தத்வாய நம: ।தத்துவமாய் இருப்பவனே
ௐ தத்வவாக்யார்த⁴போ³த⁴காய நம: ।தத்துவ வாக்கியங்களின் பொருளாய் இருப்பவனே
ௐ வர்ஷீயஸே நம: ।வயோதிகனே
ௐ விதி⁴ஸ்துத்யாய நம: ।மெச்சக்கூடிய நடத்தை உடையவனே
ௐ வேதா³ந்தப்ரதிபாத³காய நம: ।வேதாந்த நூல்களில் விவரிக்கப்பட்டவனே
ௐ மூலபு⁴தாய நம: । ?மூல பூதாய அடிப்படையானவனே
ௐ மூலதத்வாய நம: ।அடிப்படை தத்துவமானவனே
ௐ மூலகாரணவிக்³ரஹாய நம: ।மூல காரண உருவமானவனே
ௐ ஆதி³நாதா²ய நம: । 870ஆதி தலைவனே
ௐ அக்ஷயப²லாய நம: ।குறைவற்ற பலனை கொடுப்பவனே
ௐ பாணிஜந்மநே நம: ।
ௐ அபராஜிதாய நம: ।வெல்ல முடியாதவனே
ௐ கா³நப்ரியாய நம: ।சங்கீதப்பிரியனே
ௐ கா³நலோலாய நம: ।சங்கீதப்பிரியனே


     சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
 
854. ஸங்கீத லோலுப மன: சங்கீதத்தில் இசைந்த மனம் உடையவன்.
855. ஸ்நிக்த கம்பர கர்ஜித: அழகாயும் பயங்கரமாயும் கர்ஜிப்பவன்.
856. துங்க வக்த்ர : உயர்ந்த முகம் உள்ளவன்.
857. ஸ்தவரஸ: துதிப்பதில் பிரியம் உள்ளவன்.
858. அப்ராப: ஆகாசம் போன்றவன்.
859. ப்ரமரேக்ஷண: வண்டு போன்ற கண்கள் உடையவன்.
860. லீலாகமல ஹஸ்தாப்ஜ: விளையாடுவதற்காக தாமரை புஷ்பங்களைக் கையில் தரித்தவன்.
861. பாலகுந்த விபூஷித : இளமையான முல்லை புஷ்பம் சூடியவன்.
862. லோத்ர ப்ரஸவ ஸுத்தாப: லொத்தி மரத்தின் பிசின் போன்றவன். (லொத்தி மரத்தின் பிஸின் அதிஸார ரோகத்தைப் போக்கும்)
863. கிரீஷ குஸும : வாகைப் புஷ்பத்தில் பிரியம் உள்ளவன்.
864. த்ராஸத்ராணகர: பயத்திலிருந்து விடுவிப்பவன்.
865. தத்வ: உண்மையானவன்.
866. தத்வவாக்யார்த்த போதக : உண்மையான சொற்களின் பொருளை விளக்குபவன்.
867. வர்ஷீயான் : வயோதிகன்.
868. விதாதவ்ய: கட்டளை இடக் கூடியவன்.
869. வேதாந்த ப்ரதிபாதக : வேதாந்த சாஸ்திரங்களில் கூறப்பட்டவன்.
870. மூலபூத: எல்லாவற்றுக்கும் மூலமானவன்.
871. மூலதத்வ : தத்துவங்களுக்குள் முதலானவன் அதாவது ப்ரக்ருதி ரூபன்.
872. மூலகாரண விக்ரஹ: ப்ரக்ருதிக்குக் காரணமான உருவன்.
873. ஆதிநாத: படைப்புக் காலத்தில் தோன்றிய முதல் கடவுள்.
874. அக்ஷய பலபாணி : நாசமற்ற பலனை அளிக்கும் கரங்களை உடையவன்.
875. ஜன்ம பராஜித : பிறவியை ஜயித்தவன்.
876. கானப்ரிய : ஸங்கீதத்தில் பிரியம் உள்ளவன். (நாகப்ரிய-ஸர்ப்பங்களிடம் பிரியம் கொண்டவன்)
877. கானலோல: ஸங்கீதன் (நாகலோல - பாம்பாட்டி)

No comments: