Pages

Tuesday, May 5, 2020

ஹரிஹர புத்ர ஸஹஸ்ர நாமாவளி - 35






ௐ நீராஜநப்ரீதமநஸே நம: ।கற்பூர ஹாரத்தியை விரும்புபவனே
ௐ நீலநேத்ராய நம: ।நீல கண்கள் உடையவனே
ௐ நயப்ரதா³ய நம: ।நல்ல மேலாண்மையை அளிப்பவனே
ௐ கேதா³ரேஶாய நம: ।கேதாரின் தலைவனே
ௐ கிராதாய நம: । 830வேடனே
ௐ காலாத்மநே நம: ।காலத்தின் உருவினனே
ௐ கல்பவிக்³ரஹாய நம: ।கல்ப காலத்துக்கும் தோற்றம் அளிப்பவனே
ௐ கல்பாந்தபை⁴ரவாராத்⁴யாய நம: ।கல்பாந்த பைரவரால் பூஜிக்கப்பட்டவனே
ௐ கங்க³பத்ரஶராயுதா⁴ய நம: ।கங்க இலையை அம்பாக கொண்டவனே
ௐ கலாகாஷ்டஸ்வரூபாய நம: ।
கலா காஷ்டம் எனும் அடிப்படை நேர கணக்கு உருவினனே
ௐ ருʼதுவர்ஷாதி³மாஸவாநே நம: ।ருது வர்ஷம் மாதம் ஆகியவையாக ஆனவனே
ௐ தி³நேஶமண்ட³லாவாஸாய நம: ।சூரிய மண்டலத்தில் வசிப்பவனே
ௐ வாஸவாபி⁴ப்ரபூஜிதாய நம: ।இந்திரனாலும் பூஜிக்கப்பட்டவனே
ௐ ப³ஹூலாஸ்தம்ப³கர்மஜ்ஞாய நம: ।
நிறைய கம்பங்கள் நட்டு செய்யப்படும் யாகங்களை அறிந்தவனே
ௐ பஞ்சாஶத்³வர்ணரூபகாய நம: । 840ஐம்பது எழுத்துக்களின் ரூபமானவனே
ௐ சிந்தாஹீநாய நம: ।நினைவுகள் அற்றவனே
ௐ சிதா³க்ராந்தாய நம: ।பேரறிவால் நிரம்பியவனே
ௐ சாருபாலாய நம: ।அழகிய காப்பாளனே
ௐ ஹலாயுதா⁴ய நம: ।கலப்பையை ஆயுதமாக கொண்டவனே
ௐ ப³ந்தூ⁴ககுஸுமப்ரக்²யாய நம: ।அர்ஜுன மரத்தின் மொட்டு போல் ஒளிர்பவனே
ௐ பரக³ர்வவிப⁴ஞ்ஜநாய நம: ।பிறர் கர்வத்தை உடைப்பவனே
ௐ வித்³வத்தமாய நம: ।பெரும் வித்தையுள்ளவனே
ௐ விராத⁴க்⁴நாய நம: ।தடுத்து அழிப்பவனே
ௐ ஸசித்ராய நம: ।பல்விதமாய் தோன்றுபவனே
ௐ சித்ரகர்மகாய நம: । 850சித்தரிப்பவனே


    சிதம்பரம் ப்ரம்ம ஸ்ரீ கே.யம். இராஜ கணபதி தீஷிதர் பாஷ்யம்:
 
829. நீராஜ்னப்ரீதமனா : கற்பூர ஹாரதியில் பிரியம் கொண்ட மனதுள்ளவன்.
830. நீரநேத்ர : ஜலம் போன்ற கண்களை உடையவன்
831. நயப்ரத: நியாயப்படி அருளுகிறவன்.
832. கேதாரேச: கேதார ஷேத்திரபதி, பூபதி.
833. கிராத: வேடுவன், எருமேலி நிலையன்.
834. காலாத்மா: காலரூபன்.
835. கல்ப விக்ரஹ: இஷ்டப்படி உருவம் எடுத்துக் கொள்பவன். கல்பம் என்பது எத்தனையோ வருடங்கள் கொண்ட கால அளவு, அவ்வளவு காலம் போர் புரிபவன் ஸமர்த்தன், ஸரீரத்தில் களைப்பு இல்லாதவன் என்பதும் பொருள்.
836. கல்பாந்த பைரவா ராத்யா: பிரளய காலத்தில் பைரவனால் பூஜிக்கத் தகுந்தவன்.
837. காகபத்ர சராயுத காக்கை இறகை பாணமாகக் கொண்டவன்
838. கலா காஷ்ட ஸ்வரூப: கலை காஷ்டா என்கிற காலரூபன், எல்லாக் கலைகளின் முடிவான ரூபன்.
839. ருதுவர்ஷாதி மாஸவான் : வஸந்தம் முதலான ருதுக்கள், பிரபவ முதலான வருடங்கள், சித்திரை முதலான மாதங்கள் இவைகளுக்கு அதிஷ்டான தேவதைகளால் சூழப்பட்டவன்.
840. தினேச மண்டலவாஸா: சூர்ய மண்டலத்தில் வசிப்பவன்.
841. வாசவேன ப்ரபூஜித: இந்திரனால் பூஜிக்கப்பட்டவன்.
842. பஹுலாஸ்தம்ப கர்மக்ஞ: நெல் முதலிய தானியங்களை அதிகமாக விளைவிக்கும் தொழிலை அறிந்தவன்.
843. பஞ்சா ஸத்வர்ண ரூபக : வடமொழி எழுத்துக்கள் (50) தான் எல்லாவற்றிற்கும் மூலகாரணம் என்று நீரூபித்தவன்.
844. சிந்தாஹீன : வேறு நினைவுகள் அற்றவன்.
845. சிதாக்ராந்த : ஞானம் நிறைந்தவன்.
846. சாருபால: சரீர பலத்தை ஆயுதமாகக் கொண்டவன்.
848. பந்தூக குஸுமப்ரக்ய : செம்பருத்தி புஷ்பம் போன்றவன்.
849. பரகர்வ விபஞ்சன : சத்துருக்களின் கர்வத்தை அகற்றுபவன்.
850. வித்வத்தம் : பெரிய படிப்பாளி
851. விராதக்ன: விராதன் என்னும் அரக்கனை அழித்தவன் ஸ்ரீராம உருவன்.
852. ஸசித்ர : ஆச்சரியமான காரியங்களோடு கூடியவன். சித்ரகுப்தன் என்ற தேவனோடு இருப்பவன், கணக்கன்.
853. சித்ரகர்ம : சித்தரிப்பவன்.


No comments: