Pages

Thursday, May 26, 2022

காஶி_யாத்திரை - 3




  ஸ்நான சங்கல்பம் செய்து வபனத்துக்கு கிளம்பினேன். 
 

 

 

ராமேஸ்வரத்தில் எல்லாமே விலைவாசி அதிகம் போலிருக்கிறது. லக்‌ஷ்மண தீர்த்தத்தின் பக்கத்திலேயே முடி நீக்க இடம் இருக்கிறது. ஆனால் நாவிதரை காணவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பெரியவரை கூப்பிடு என்று ஆளுக்காள் ஏவி கொஞ்ச நேரத்தில் வந்து சேர்ந்துவிட்டார். எவ்வளவு வேண்டும் என்று கேட்டால் கூசாமல் 500 ரூபாய் என்று சொன்னார். எனக்கு சரியான அதிர்ச்சி. பிறகு வாத்தியார் பையனிடம் எவ்வளவு வாங்கி கொடுத்தார் என்று எனக்கு தெரியவில்லை. கேட்டுக் கொள்ளவும் இல்லை. அங்கேயே குளித்துவிட்டு சங்கல்பம் செய்து ஸ்நானம் செய்து எடுத்து ராமர் தீர்த்தத்துக்கு போனோம். அங்கேயும் சங்கல்ப ஸ்நானம். முடித்து எதிரே ராமர் கோவிலுக்குப்போய் தர்சனம் செய்தோம். பின் தனுஷ்கோடிக்கு கிளம்பினோம். போன முறை என் தாய் தந்தையருடன் போனபோது தனுஷ்கோடிக்கு ஜீப்பில் தான் போக வேண்டி இருந்தது. ஆனால் இந்த முறை அருமையான சாலை போட்டுவிட்டார்கள். இருந்தாலும் இந்த சாலை மிகவும் கஷ்டத்தில் பிழைத்து இருக்கிறது என்று தோன்றியது.

 

 அதை போட்ட போது பார்த்த வீடியோ வீடியோவில் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் வித்தியாசம் நன்றாக தெரிந்தது. சுருக்கமாக பக்கவாட்டில் இருக்கும் சாலையின் பக்கவாட்டில் இருக்கும் கருங்கற்கள் நழுவி என்று பல பிரச்சனைகள். இருந்தாலும் சாலை கெட்டுப்போகாமல் பராமரித்துக் கொண்டு இருக்கிறார் இருக்கிறார்கள். தனுஷ்கோடி டூரிஸ்ட் ஸ்பாட் ஆகிவிட்டது. ஆகவே ஸ்நானம் மண் கிரகிப்பது போன்றவை சுமார் ஒரு கிலோமீட்டருக்கு முன்னாலேயே செய்யப்படுகிறது.

 மற்ற இடங்களைப்போல் தனுஷ்கோடியில் நேரடியாக நீரில் இறங்கி ஸ்நானம் செய்ய கூடாது. அங்கே முதலில் மணலில் வில் வரைந்து ராமருக்கு பூஜை செய்து அதன் பின்னரே தண்ணீரில் இறங்க வேண்டும். தம்பதிகளாக இறங்கி 36 முக்கு போட்டோம்! கேசவாதி நாமங்கள் 12 ஐயும் மூன்று முறை சொன்னது நினைவிருக்கிறது என்கிறார் பையர்.  இதற்குப் பின்னால் அங்கிருந்து மண் சேகரித்து ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டு திரும்பினோம். இங்கேயும் நீங்கள் முன்னால் போங்கள் நான் 2 வீலரில் வருகிறேன் என்று சொன்ன வாத்தியார் வந்து சேர தாமதமானதால் அரை மணி வீணாயிற்று.

 தனுஷ்கோடி போகும் வழியில் பாதிக்கு மேல் மொபைல் சிக்னல் இல்லை. அப்படி வேண்டும் என்றுதான் விட்டு வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. டிரைவரிடம் கேட்டபோது தன்னுடைய செல்போனை சிரித்துக்கொண்டே காட்டினார். ஜியோ ஸ்ரீலங்கா என்று காட்டியது!

 

 



 

Wednesday, May 25, 2022

காஶி யாத்திரை -2




2.

 மகனும் மருமகளும் கும்பகோணத்தில் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். ஆஏசி கன்ஃபார்ம் ஆனதால் இருக்கைகள் ஒவ்வொரு இடத்தில் இருந்தன. 3 மூன்று சீட்டுகள் ஏறத்தாழ ஒரே இடத்தில். அதை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு தனியிடத்தில் நான் போய் படுத்துக்கொண்டேன். ராத்திரி ரயில் ஆட்டம் அதிகமாக இருந்தது. அதல் குலுங்கம் திசை என்னுடைய முதுகுக்கு கொஞ்சம் கூட சரியாக வரவில்லை. அதனால் சரியாக தூங்க முடியவில்லை.

ராமேஸ்வரம் போய் சேர்ந்த நேரம் இரவு இரண்டரை மணி. ஏன்தான் இப்படி அட்டவணையை தயாரிக்கிறார்களோ தெரியவில்லை. எல்லோரும் ராமேஸ்வரத்துக்கு போகிறார்கள். அதற்கு மேலே போக முடியாது. அப்படி 5:00 காலை போய் சேருமாறு அட்டவணை இருந்திருக்கலாம்.

மகனின் நண்பர் ஒரு சில ஆட்களை கூட்டிக்கொண்டு வந்து சேர்ந்தார். ஆட்டோ அமர்த்திக்கொண்டு தங்கும் இடத்திற்கு போய் சேர்ந்தோம். 100 மீட்டருக்கு ஒரு வேகத்தடை இருக்கிறது. போகும் இடம் புதிதாக உருவான ‘நகர்’. ஒரு ஆட்டோ தாராளமாக போக பாதையின் அகல அனுமதிக்கிறது.

தங்குவதற்கு கொடுத்த இடம் வேறு ஒருவருடைய வீட்டின் மாடி. உள்ளே போனால் அங்கே வேறு யாரோ அங்கு தங்கி இருந்திருக்கவேண்டும். பின் அதை பெருக்கக்கூட இல்லை. அதனால் போன இடத்தில் கொஞ்சம் கண் அசந்து விட்டேன். பெருக்கக் கூட தயாராக இல்லை அப்படியே படுத்துவிட்டேன்.

அசதியில் கொஞ்சம் கண்களை மூடிவிட்டேன். ஏதோ பூச்சிக்கடி நன்றாக தூங்கவிடவில்லை. ஜன்னலை திறக்காமல் அறை ரொம்ப சூடு. திறந்தாலோ பூச்சிகள் படையெடுப்பு. விடிந்தபின் ஜன்னலுக்கு வெளியே பார்த்தால் காட்டுச்செடிகள், புதர்கள்…

நாங்கள் தங்கின வீட்டுக்கு பக்கத்து இடம். அந்த கோசாலையில்தான் ஶ்ராத்தம் செய்தோம்.

 

 

முன்னேயே அந்த நாளில் என்ன செய்யப்போகிறோம் என்று கேட்டு வைத்திருந்தேன். அவர் சொன்னபடி நான் ஏழரை மணிக்கு ரெடியாகி விட்டேன். ஆனால் அவர் ஏற்பாடு செய்திருந்த வண்டி வரவில்லை. ஏன் என்று பார்த்தால் கொஞ்சம் பிரச்சனை. வாத்தியாருக்கு உறவினர் வீட்டில் உபநயனம் இருந்ததால் வேறு ஒருவரை இங்கே செய்து வைக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார். அவர் சரியாக பதில் சொல்லவில்லை. அதனால் இவர் உபநயனத்தை விட்டுவிட்டு எங்களுக்காக இங்கேயே இருந்துவிட்டார். இந்த நிலையில் அன்று காலை அந்த நபர் கூப்பிட்டு வந்து விடுவதாக கூறி இருக்கிறார். இது தர்மசங்கடம். பேசாமல் ‘அண்ணா நீங்கள் சரியாக பதில் சொல்லாததால் நானே இங்கே இருப்பதாக முடிவு செய்து விட்டேன்’ என்று சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லாததால் அவர் வரவேண்டும் என்று காத்திருக்க வேண்டியதாயிற்று. இதனால் முக்கால் மணி நேரம் போல் வீணானது. முதலில் லட்சுமண தீர்த்தம் போனோம். அங்கே யாத்திரை சங்கல்பம் செய்து வபனம் செய்ய வேண்டும். அதாவது முடி நீக்குதல். பிராமணன் என்று சிகையை வைத்த பிறகு எந்த காரணம் கொண்டும் எடுக்கவே கூடாது. அப்படி எடுப்பது தற்கொலைக்கு சமம் என்று சொல்லப்படுகிறது. அஸ்வத்தாமன் தன் முடியில் இருந்த மணியுடன் அதை அறுத்து கொடுத்துவிட்டு போய்விட்டான் என்ற பாரத கதை நினைவுக்கு வரலாம். இது தெரியாமல் சில பேர் மொட்டை அடித்துக் கொண்டு விடுகிறார்கள். அது தவறு.

Tuesday, May 24, 2022

காஶி_யாத்திரை. -1




காசி யாத்திரை என்று சொன்னால் அது ஒரு நீண்ட பயணம். வீட்டில் சங்கல்பம் செய்து கிளம்பி முதலில் ராமேஸ்வரம் சென்று அங்கே தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து மணல் சேகரிக்க வேண்டும். அதில் வேணி மாதவன் பிந்து மாதவர் சேது மாதவர் என்று மூன்றாக பிரித்து பூஜை செய்து சேதுமாதவரை வாத்தியாரிடம் கொடுத்து விட்டு, மீண்டும் அவரை அவரை உலர்த்தி மூட்டையாக கட்டிக்கொண்டு எடுத்து அடுத்து த்ரிவேணிக்கு செல்ல வேண்டும். அங்கே திரிவேணியில் முண்டனம் செய்துகொண்டு சங்கல்ப ஸ்நாநம் செய்து வேணி மாதவரை அங்கே கங்கையில் சேர்க்க வேண்டும். அந்த இடத்திலிருந் கங்கை நீரை சேகரித்துக்கொண்டு அடுத்து காசிக்கு செல்லவேண்டும். அங்கே கர்மாக்களை முடித்து கயை செல்ல வேண்டும். பிண்டதானங்களை முடித்து மீண்டும் ராமேஸ்வரத்திற்கு செல்ல வேண்டும். நாம் த்ருவேணியில் சேகரித்த அந்த கங்கை நீரை அங்கே ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக கொடுக்க வேண்டும். சுருங்கச்சொல்ல இப்படியாக காசி யாத்திரை பூர்த்தி ஆகும்.
இரண்டு வருடங்களுக்கு முன் என் தாயார் தவறிவிட்டார். 2021 மார்ச் மாதம் என் தந்தையும் தவறிவிட்டார் இருவருடைய அந்திம காரியங்களை முடித்து தந்தையின் வருட பூர்த்தி சிராத்தத்தை முடித்து பின்னர் காசி யாத்திரை கிளம்பினோம். வடக்கே வெய்யில் அதிகமாகிவிடும் என்பதால் முடிந்தவரை சீக்கிரம் போக வேண்டும் என்று என்று நினைத்தோம் புது வருடம் துவங்கும் வரை கிளம்புவதற்கு முடியவில்லை. என் மகனே ராமேஸ்வரத்தில் காசியிலும் தெரிந்தவர்கள் இருப்பதால் ஏற்பாடுகளை கவனித்தான். அவனே பயணத்திற்கான பயணச்சீட்டு களையும் முன்பதிவு செய்தான்.
கிளம்பும் முன் வீட்டில் எங்கள் வாத்தியார் இஷ்டி முடித்து க்ருத (Grutha) ஶ்ராத்தம் செய்து வைத்தார்.
பிறகு நாங்கள் ராமேஸ்வரத்திற்கு கிளம்பினோம். கடலூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு அரை மணி நேரம் முன்பாகவே போய் சேர்ந்து விட்டோம். பயணத்தின் டிக்கட்டுகள் முக்கால்வாசி ஆர் ஏ சி என்றே இருந்தன. இந்த டிக்கெட்டுகளும் அவ்வாறே. முந்தின நாள் இவை முன் பதிவாக மாற்றப்பட்டன. இந்த டீ கோச் எங்கே வருகிறது என்று சரியாக தெரியவில்லை. எங்கள் மருத்துவமனை உதவியாளர் அங்கே கடைகளில் விசாரித்ததில் அது எங்கே வேண்டுமானாலும் வரும் என்று தெளிவாக உதவிகரமாக சொன்னார்கள். பின்னர் அனேகமாக இந்த இடத்தில் என்று சொன்ன பிறகு அங்கே போய் நின்றோம். கூரை கிடையாது. ஆனால் ரயில்வே டிஜிட்டல் இன்டிகேட்டர் அந்த இடம் வேறு பெட்டி என்று சொன்னது. அது எந்த இடம் என்று காட்டுகிறதோ அங்கே போகலாம் என்று நான் சொன்னது நிராகரிக்கப்பட்டது. நான் சின்னப்பையனாக இருந்தபோது 5 பெட்டிகள் இருந்தால் அதிகம். இப்போது சர்வ சாதாரணமாக 20 பெட்டிகள் இருக்கின்றன. எங்கே வரும் என்று தெரியாவிட்டால் எங்கே போய் நிற்பது? நடுவில் நிற்க வேண்டும் போல் இருக்கிறது எந்த பக்கம் வந்தாலும் அந்த பக்கம் போய்க் கொள்ளலாம், ஆனால் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடுவதாக இருக்கிறது. ரயில் கொஞ்சம் லேட்டாக வந்தது. நினைத்தது போல நாங்கள் நின்ற இடமில்லை. அது இன்னம் பின்னால் போய்விட்டது. உதவியாளர்கள் இருந்ததால் லக்கேஜை ஏற்ற முடிந்தது. இரண்டு நாட்களுக்கு அப்படி என்ன பெரிய லக்கேஜ் என்று கேட்கிறீர்களா? கேட்கக் கூடாது. என்னதான் சொன்னாலும் வீட்டுப் பெண்கள் அப்படித்தான் எக்கச்சக்கமாக எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்கள். பல விஷயங்களை இங்கிருந்து கொண்டு போக வேண்டியிருந்ததால் இது குறித்து ஒன்னும் சொல்ல முடியவில்லை.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் சிரத்தையுடன் சிரார்த்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பல விஷயங்கள் தங்கும் இடத்தில் கிடைக்காது என்று புரிந்து கொள்ள வேண்டும் நாம். கிடைப்பது நாம் பழகிய படி இருக்காது. வாத்தியார் என்ன சொல்கிறாரோ செய்கிறாரோ அவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டு கிளம்புபவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் நாங்கள் பார்வணவிதான சிராத்தம் செய்யவேண்டும் என்று நினைத்ததால் அதற்குத் தேவையான விஷயங்களை இங்கிருந்தே கொண்டு போக வேண்டி இருந்தது. அப்படியும் அங்கே சில விஷயங்கள் சரியாக கிடைக்காமல் தடுமாற வேண்டி இருந்தது.
-தொடரும்


 

Monday, May 9, 2022

ஶ்ராத்தம் - 50 தீர்த்த ஶ்ராத்தம் - 2




கங்கையில் பித்ருக்கள் நித்யவாசம் செய்வதால் வர்க த்வய பித்ரூன் இதம் ஆசனம் என்று ஆரம்பிக்கவும். த்யாயாமி ஆவாஹயாமி என்று ஆவாஹனம் இல்லை.

வர்கத்வய பித்ருக்களுக்கு முடிந்த பின் நான்காவது செட் தர்ப்பைகளில் காருண்ய பித்ருக்கள் ஆவாஹனம். ஐந்தாவதில் க்ஷேத்ர பிண்டங்களுக்கு. 

அஸ்மத் குலே ம்ருதா யே ச கதிர் யேஷாம் ந வித்யதே ஆவாஹயிஷ்யே தான் ஸர்வான் இதமஸ்து திலோதகம். 

என்று எள்ளும் நீரும் நெடுக்க இறைக்க வேண்டும்.  பொருள்: என் குடும்பத்தில் யார் மறைந்து விட்டார்களோ எந்த பித்ருக்களுக்கு கதி இல்லையோ அவர்களை இங்கு ஆவாஹனம் செய்து  இங்கே எள்ளும் நீரும் அளிக்கிறேன்.

ஆ ப்ரம்ஹணோ யே பித்ரு வம்ஸ ஜாதா:  மாதுஸ்ததா வம்ஸ பவா: நதீயா: வம்ஸ த்வயே அஸ்மின் மம தாஸ பூதா: ப்ருத்யா: ததைவ ஆஸ்ரித சேவகாஶ்ஶ மித்ராணி ஸக்ய: பஶவஶ்ஶ வ்ருக்‌ஷா: ஸ்ப்ருஷ்டாஶ்ஶ த்ருஷ்டாஶ்ஶ க்ருதோபகாரா: ஜன்மாந்தரே யே மம ஸங்கதாஶ்ஶ தேப்யஸ்ஸ்வதா பிண்டமஹம் ததாமி|


- ‘என் தந்தை வழி வந்தவரோ என் தாய் வழி வந்தவரோ  எனக்கு தாஸர்களாக இருப்பவரோ வேலைக்காரர்களோ நண்பர்களோ சக்யர்களோ பசுக்களோ விருக்ஷ வர்கமோ (மரங்களோ)  தொட்டவர்களோ பார்த்தவர்களோ ஹிதம், உபகாரம் செய்தவர்களோ இன்னொரு ஜன்மாவில் எனக்கும் யாருக்கும் தொடர்பு இருந்ததோ அவர்களுக்கும்’ என்று இவ்வளவு பேருக்கு இங்கே பிண்டம் இருக்கிறது.

 
 

பித்ரு வம்ஸே ம்ருதாயேச மாத்ரு வம்ஸே ததைவச குரு ஸ்வஶுர பந்தூனாம் யே சான்யே பாந்தவா: ம்ருதா: யே மே குலே லுப்த பிண்டா: புத்ர தார விவர்ஜிதா: க்ரியாலோப ததாஸ்சைவ ஜாத்யந்தா: பங்கவஸ்ததா விரூபா: ஆமகர்பாஶ்ஶ க்ஞாதாக்ஞாதா: குலே மம தேஷாம் பிண்ட: மயா தத்த:  அக்‌ஷய்யம் உபதிஷ்டது.

அடுத்து என் தந்தை வழி வந்தவரோ என் தாய் வழி வந்தவரோ குருவோ மாமனாரோ பந்துக்களோ என் குடும்பத்தில் எந்த பித்ருக்களுக்கு கர்மா இல்லாமல் இருக்கிறதோ புத்திரன் பத்னி இல்லாமல் இறந்தார்களோ யாருக்கு செய்ய வேண்டிய கர்மா செய்யப்படவில்லையோ பிறவியிலிருந்தே கண் தெரியாதவர்களோ கால் ஊனமானவர்களோ ரூபமே அடையாமல் தெரிந்தோ தெரியாமலோ இயற்கையாகவோ செயற்கையாகவோ நடந்த கர்ப ஸ்ராவம் என்னும் கலைந்த கர்ப்பத்தில் நழுவியர்களோ  அவர்களுக்கு தர்ம பிண்டம் தருகிறேன்; அழிவில்லாத த்ருப்தி உண்டாகட்டும். 

 

அஸி பத்ர வனே கோரே கும்பீ பாகேச யே (ஸ்திதா:) கதா: தேஷாம் உத்தரண அர்த்தாய இமம் பிண்டம் ததாம்யஹம். 

- அஸி பத்திரம் என்னும் நரகம் (இலைகள் கத்தி போல் இருக்கும்; அதன் வழியாக போகும் போது கோரமாக கிழிக்கும். சந்தியாவந்தனம் செய்யாதவர்கள் இதில் மாட்டிக்கொள்வர் என்கிறார்கள்)  

கும்பி பாகம் என்னும் நரகம் (அதிதிகளுக்கோ மற்றவருக்கோ அன்னமிடாமல் தான் மட்டும் சாப்பிடுபவர்கள் போகுமிடம்) தந்தை தாய் வேதாத்யயனம் செய்வோர்களை / குருவை நிந்திப்பவர்கள், 1000 மைல் விஸ்தீரண தாமிர தட்டு மேல் போக வேண்டும்; மேலே சூரியன் தஹிப்பார். பசு மாட்டின் மீதுள்ள ரோமங்களின் எண்ணிக்கை அளவு வருடங்களில் இதில் உழல வேண்டும். 

இந்த கும்பி பாகத்தில் உழல்வோருக்கு காப்பாற்ற இந்த பிண்டம்.


யே கே ச ப்ரேத ரூபேன வர்த்தந்தே பிதரோ மம தே ஸர்வே த்ருப்தி மாயாந்து குச ப்ருஷ்டை: திலோதகை:. 

ப்ரேத ரூபமாக இருக்கும் பித்ருக்களுக்கு த்ருப்தி  என தர்ப்பத்தின் அடிபாகத்தை கீழே பிடித்துக் கொண்டு தர்ப்பணம்.

 ஆ ப்ரம்ஹ ஸ்தம்ப பர்யந்தம் யத்கிஞ்சித் சராசரம் மயா தத்தேன தோயேன த்ருப்திமேவ அபி கச்சது. 

ப்ரம்மம் முதல் புழு வரை எல்லாருக்கும் அசையும் அசையா எல்லாவற்றுக்கும் நான் கொடுக்கும் நீரால் த்ருப்தி உண்டாகட்டும்.. 

உத்ஸ்ஸன்ன குல கோடீனாம் யேஷாம் தாதா குலே மயி?? தர்ம பிண்ட: மயா தத்த: அக்‌ஷய்யம் உபதிஷ்டது. 

நான்காவது பிண்டம் தர்ம பிண்டம் – பிண்டம் கிடைக்காது தவிக்கும் மற்ற அனைத்து ஆத்மாக்களுக்கும் இடப்படுகிறது.

Friday, May 6, 2022

ஶ்ராத்தம் - 49 தீர்த்த ஶ்ராத்தம் -1





புண்ணிய நதிகளின் இடங்களில்  இடங்களிலும் புண்ணிய தீர்த்த குளங்கள் போன்ற நீர் நிலைகளிலும் இந்த தீர்த்தம் செய்யப்படுகிறது. தீர்த்த யாத்திரை கிளம்பும் முன் புண்ணிய தீர்த்தத்தின் / நதியில் கரையில் வசிப்போர் அந்த தீர்த்தத்தை ஒட்டி ஶ்ராத்தம் முதலில் செய்வது நல்லது. இல்லையானால் அருகில் இருக்கும் கோவிலை எட்டிக்கூட பார்க்காமல் தொலை தூரத்தில் உள்ள கோவிலுக்கு போவது போலாகும்.

எல்லோருக்கும் தெரிந்து இருப்பது இராமேஸ்வரம் திரிவேணி என்கிற பிரயாகை காசி கயா ஆகியன. இவை முக்கியமானவை. 

ராமர் ராவணனை ஜயித்த பின் விபீஷணன் எங்களுக்கு பெரும் பாதுகாப்பு இந்த சமுத்திரம்தான். இப்போது நீங்கள் பாலம் கட்டியதால் எங்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகிவிட்டது என்று வருந்த, ராமர் தன் தனுஸின் நுனியால் சேதுவை உடைத்தார். ஆகவே தனுஷ் கோடி எனப்பெயர் .

இது ரத்நாகரம் மஹோததி என்ற இரு கடல்கள் சேருமிடம் . இது மஹா புண்ணியமான தீர்த்தம்.

தீர்த்த ஶ்ராத்தத்தில் ப்ராம்ஹணர்களை பரீக்‌ஷிக்கக்கூடாது. 

தீர்த்த ஶ்ராத்தத்தின் ரூபம் வேறு மாதிரி இருக்கிறது. தீர்த்த சிராத்தத்தில் விஸ்வேதேவர்கள் துரு, ருசி என இருவர். வர்க த்வய பித்ருக்களை ஆவாஹனம் செய்ய வேண்டும். இந்த இடத்தில் பார்வணத்தில் செய்ததுபோல் பித்ரு வர்க்கத்துக்கு. மாதா மஹ வர்க்கத்தில் ஸபத்னீக என்று சொல்லி பித்ருக்களை வரணம் செய்யவும். அடுத்ததாக காருணிக பித்ருக்கள் என்று தனியாக ஆவாஹனம் செய்ய வேண்டும்.  ஐந்தாவதாக க்ஷேத்திர பிண்டங்களுக்கு ஆவாஹனம் செய்ய வேண்டும். காருணிக பித்ருக்களில் ஒரு பிண்டம். க்ஷேத்திர பிண்டங்கள் நான்கு.

 எப்போதும் பார்வண விதானமாக செய்யும் ஶ்ராத்தம் சிறந்தது. ஆனால் தீர்த்த யாத்திரை செய்கிறார்கள் என்றால் ஹிரண்ய ஶ்ராத்தம் வசதியாக இருக்கலாம். இதற்கே மேற்கூறியபடி பிராமணர்களை வரணம் செய்து அவர்களுக்கு உபசாரங்களை செய்து உணவிட வேண்டும். பிறகு தக்ஷிணை தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

ஒரு வேளை உணவிடாவிட்டால் அதற்கான செலவு போல 4 மடங்கு த்ரவியத்தை தக்‌ஷிணையாக கொடுக்கச்சொல்கிறார்கள். 

பார்வண விதானமாக செய்தால் கூட அதில் சில விஷயங்கள் இல்லை.  பாத ப்ரக்ஷாளனம் -  பாதங்களை அலம்பிவிட்டு உபசாரம் செய்வது இல்லை. அர்யத்துக்காக தனியாக யவை ஆகியவற்றை பயன்படுத்தி நீர் சேர்ப்பது இல்லை. விகிரான்னம் வைப்பது இல்லை.  மாதாமஹி வர்க்கத்துக்கும் காருணிக பித்ருக்களுக்கும் ஹோமம் உண்டு.

மற்றபடி பார்வண ஶ்ராத்தம் போலவே.