Pages

Friday, May 6, 2022

ஶ்ராத்தம் - 49 தீர்த்த ஶ்ராத்தம் -1





புண்ணிய நதிகளின் இடங்களில்  இடங்களிலும் புண்ணிய தீர்த்த குளங்கள் போன்ற நீர் நிலைகளிலும் இந்த தீர்த்தம் செய்யப்படுகிறது. தீர்த்த யாத்திரை கிளம்பும் முன் புண்ணிய தீர்த்தத்தின் / நதியில் கரையில் வசிப்போர் அந்த தீர்த்தத்தை ஒட்டி ஶ்ராத்தம் முதலில் செய்வது நல்லது. இல்லையானால் அருகில் இருக்கும் கோவிலை எட்டிக்கூட பார்க்காமல் தொலை தூரத்தில் உள்ள கோவிலுக்கு போவது போலாகும்.

எல்லோருக்கும் தெரிந்து இருப்பது இராமேஸ்வரம் திரிவேணி என்கிற பிரயாகை காசி கயா ஆகியன. இவை முக்கியமானவை

ராமர் ராவணனை ஜயித்த பின் விபீஷணன் எங்களுக்கு பெரும் பாதுகாப்பு இந்த சமுத்திரம்தான். இப்போது நீங்கள் பாலம் கட்டியதால் எங்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகிவிட்டது என்று வருந்த, ராமர் தன் தனுஸின் நுனியால் சேதுவை உடைத்தார். ஆகவே தனுஷ் கோடி எனப்பெயர் .

இது ரத்நாகரம் மஹோததி என்ற இரு கடல்கள் சேருமிடம் . இது மஹா புண்ணியமான தீர்த்தம்.

தீர்த்த ஶ்ராத்தத்தில் ப்ராம்ஹணர்களை பரீக்‌ஷிக்கக்கூடாது

தீர்த்த ஶ்ராத்தத்தின் ரூபம் வேறு மாதிரி இருக்கிறது. தீர்த்த சிராத்தத்தில் விஸ்வேதேவர்கள் துரு, ருசி என இருவர். வர்க த்வய பித்ருக்களை ஆவாஹனம் செய்ய வேண்டும். இந்த இடத்தில் பார்வணத்தில் செய்ததுபோல் பித்ரு வர்க்கத்துக்கு. மாதா மஹ வர்க்கத்தில் ஸபத்னீக என்று சொல்லி பித்ருக்களை வரணம் செய்யவும். அடுத்ததாக காருணிக பித்ருக்கள் என்று தனியாக ஆவாஹனம் செய்ய வேண்டும்ஐந்தாவதாக க்ஷேத்திர பிண்டங்களுக்கு ஆவாஹனம் செய்ய வேண்டும். காருணிக பித்ருக்களில் ஒரு பிண்டம். க்ஷேத்திர பிண்டங்கள் நான்கு.

 எப்போதும் பார்வண விதானமாக செய்யும் ஶ்ராத்தம் சிறந்தது. ஆனால் தீர்த்த யாத்திரை செய்கிறார்கள் என்றால் ஹிரண்ய ஶ்ராத்தம் வசதியாக இருக்கலாம். இதற்கே மேற்கூறியபடி பிராமணர்களை வரணம் செய்து அவர்களுக்கு உபசாரங்களை செய்து உணவிட வேண்டும். பிறகு தக்ஷிணை தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

ஒரு வேளை உணவிடாவிட்டால் அதற்கான செலவு போல 4 மடங்கு த்ரவியத்தை தக்‌ஷிணையாக கொடுக்கச்சொல்கிறார்கள்

பார்வண விதானமாக செய்தால் கூட அதில் சில விஷயங்கள் இல்லைபாத ப்ரக்ஷாளனம் பாதங்களை அலம்பிவிட்டு உபசாரம் செய்வது இல்லை. அர்யத்துக்காக தனியாக யவை ஆகியவற்றை பயன்படுத்தி நீர் சேர்ப்பது இல்லை. விகிரான்னம் வைப்பது இல்லைமாதாமஹி வர்க்கத்துக்கும் காருணிக பித்ருக்களுக்கும் ஹோமம் உண்டு.

மற்றபடி பார்வண ஶ்ராத்தம் போலவே.





No comments: