Pages

Friday, November 8, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 19





16 ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ ஶங்கரேந்திர ஸரஸ்வதி (2)
அடைமொழி : உஜ்ஜ்வல ஶங்கரா
பிறந்த இடம்: தபதி நதியின் கரையோரம்
பூர்வாஶ்ரம பெயர்: அச்யுத கேசவன்
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: கேசவ ஶங்கரர்
சன்னியாசம்: வஞ்சிஷ்வரா (அனேகமாக மஹேந்திரகிரி, ஒரிசா, நிச்சயமாக தெரியவில்லை)
பீடாதிபதியாக ஆண்டுகள்: 38
சித்தி: 3467 அக்ஷய விருஷபா சுக்ல அஷ்டமி (பொது ஆண்டு 0366-மே 05)
சித்தியடைந்த இடம்: காஷ்மீரில் உள்ள காலபுரம், உஜ்ஜ்வல மஹாயதி புரா என்றும் அழைக்கப்படுகிறது.
வேறு:
இந்த ஆச்சார்யர் அவரது குழந்தை பருவத்திலேயே நான்கு வேதங்களையும் அவற்றின் அங்கங்களுடன் (துணைப் பாடங்கள்) பயின்றார். சமாவர்த்தனம் ஆன பிறகு (பிரம்மச்சரிய ஆஶ்ரமம் முடிந்த பிறகு) நைஷ்டிக பிரம்மச்சாரியாக (வாழ்நாள் பிரம்மச்சரியத்தின்) விரதம் ஏற்றார். ராம சேதுவிற்காக ஒரு க்ஷேத்ர யாத்திரை செய்த போது, அப்போதைய திருவனந்தபுரம் (ஸ்யானந்துரம்) மன்னர் குலசேகர வர்மா தமக்கு சாஹித்ய (இலக்கியம்) ஆசிரியராக இருக்க வேண்டினார்.
அரசரின் வேண்டுகோளை கௌரவித்தபின், அவர் தனது க்ஷேத்திர யாத்திரையை முடித்து திரும்பினார். மஹேந்திரகிரியில் (இன்றைய ஒரிசாவில்) இவர் தபஸ் செய்து கொண்டிருந்த போது ஶ்ரீ கிஷ்பதி கங்காதரர் அவரை சந்தித்தார். அடுத்த பீடாதிபதிக்குக்கு இவரே தகுதி பெற்றவர் என்று தீர்மானித்தார். அதன்பிறகு வாஞ்சிஷ்வராவில் அவருக்கு சன்னியாசத்தை வழங்கினார். பாரதம் முழுதும் பயணிக்கவும், சனாதன தர்மம் மற்றும் அத்வைதத்தை அதன் மகிமைக்கு மீட்கவும் அவருக்குக் கட்டளையிட்டார்.
அந்த நாளில் இரண்டு விதமான புத்திஜீவிகள் நாட்டில் நிரம்பியிருந்தனர்: வேதத்தின் உண்மையான புரிதல் கொண்டவர்கள்; வைத்திய தர்மத்திற்கு எதிரானவர்கள். அவைதிக நடைமுறைகளைப் பின்பற்றிய பிற நாட்டுக் குழுக்களும் வைதீக தர்மத்தில் உள்ளவர்களுடன் சமாதானமாக வாழ இசையாததன் மூலம் கடுமையான தடைகளை ஏற்படுத்திக்கொண்டு இருந்தார்கள்.
ஶ்ரீ உஜ்ஜ்வல ஶங்கரர் ஒட்டுமொத்த சூழ்நிலையின் தீவிரத்தை கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.
அவரது புலமை மூலம், அவர் அந்த அபத்தமான புரிதலைக் கொண்ட அறிவுஜீவிகளின் மரபு முழுவதையுமே வென்றார். நம் தர்மம் சனாதனம் (எல்லா காலத்திற்கும்). நம் முன்னோர்களான ரிஷிகள் காட்டிய பழைய பழக்கவழக்கங்களுடன் நம் தனிப்பட்ட விளக்கங்களும் கருத்துகளும் முரண்படக்கூடாது என்று அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த வேளையில், பல்வேறு அரசர்கள் ஶ்ரீ உஜ்ஜ்வல ஶங்கராச்சாரியாரின் உன்னத வேலையை அங்கீகரித்தனர். தர்மத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்பு முன்னணிக்கு வந்துவிட்டது, அவர்கள் வைதிக தர்மத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்; அல்லது குறைந்தபட்சம் தடையாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவித்தனர்.
இந்த வழியில், வைதிக தர்மத்திற்கு எதிராக இருந்த சுய-பாணியிலான அறிஞர்களும், வைதிக சமுதாயத்தை சீர் குலைத்துக்கொண்டிருந்த வெளிப்புற வம்சாவழியினரின் அனைத்து மக்களும், அமைதியான வாதங்களையும், உஜ்ஜ்வல ஶங்கரரின் வழிகாட்டல்களையும் கேட்க மறுத்த அனைவரும் தர்மத்தில் இருந்தவர்களின் நிலத்திலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
இப்படியாக, ஆச்சார்யர் வர்ணாஶ்ரம தர்மங்கள் மீண்டும் உறுதியாக நிறுவப்பட்டதை உறுதி செய்தார்.
ஆச்சார்யர், எடுக்க வேண்டி இருந்த கடுமையான நடவடிக்கைகளால் "உஜ்ஜ்வல" (தீவிர) என்ற அடைமொழியை பெற்றார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர் ஒரு பெரிய ஆத்மாவாக உலகளாவிய ரீதியாக அங்கீகரிக்கப்பட்டவர் என்பதால், எல்லோர் நலனையும் இதயத்தில் கொண்டவராக இருந்ததால், அவர் மஹாயதி என்று அழைக்கப்பட்டார் (இது போலவே சமீப காலங்களில் 68 வது ஆச்சார்யர் மஹாஸ்வாமி என்று அழைக்கப்பட்டார், மற்ற மதங்களிடமிருந்து கூட மரியாதை பெற்றார்).
இதன் காரணமாக, காலபுரா இடத்தில் காஷ்மீர் பகுதியில் ஆச்சார்யர் சித்தி அடைந்த பின் அது உஜ்ஜ்வல மஹாயதி புரா என்று அறியப்பட்டது.

Thursday, November 7, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 17





14 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ வித்யாகணேந்த்ர ஸரஸ்வதி (1)
அடைமொழிகள்: பைரவ ஜித் வித்யாகணா. மந்த்ரவித் வித்யாகணா; சால வித்யாகணா
பிறந்த இடம்: ஆந்திரா
பூர்வாஶ்ரம பெயர்: நாயனா
பூர்வாஶ்ரம தந்தையர் பெயர்: பாபண்ணா சோமயாஜி

பீடாதிபதியாக ஆண்டுகள்: 45
சித்தி: 3417 தாது மார்க்கசிர அமாவாஸை (பொது ஆண்டு 0316-டிசம்பர் 02)
சித்தியான இடம்: அகஸ்த்யாசலம் (இன்றைய தென் கர்நாடகா / தமிழ்நாட்டில் உள்ள குடகு மலை)

வேறு:
இந்த ஆச்சார்யர் பெரிய மந்திர சித்தி அடைந்தவர். அடைக்கலம் தேடிவந்தவர்களின் விருப்பங்களை பூர்த்திசெய்ய முடிந்தது. அவரை. லய யோகம் மூலம் அவர் சூரியனிடமிருந்து நேரடியாக ஊட்டச்சத்தை பெற முடிந்தது.

அவரது சக்திகளைக் கேள்விப்பட்டு, அகஸ்த்யாசல மக்கள் அவரது பாதுகாப்பை நாடினார்கள். அந்த இடத்தில் ஒரு உக்ர பைரவ தெய்வம் இருந்தது. அதனால் அங்கு வாழ்ந்தவர்களுக்கு மிகவும் தொந்தரவு ஏற்பட்டது. பைரவரைக் கட்டுப்படுத்தவும், துன்பத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் ஆச்சார்யருக்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த சமயத்தில் ஆச்சார்யரின் தனது இளம் சீடரான ஶ்ரீ ஜிஷ்பதி கங்காதரருக்கு சன்னியாசம் கொடுத்திருந்தார். எனவே, பீடத்தை கவனிப்பதற்காக அவரது சீடரை விட்டுவிட்டு அகஸ்த்யாசலத்துக்கு சென்றார். அங்கே அவர் உக்ர பைரவரை தனது தவத்தின் மூலம் கட்டுப்படுத்தினார், இப்படியாக அந்த இடங்களுக்கு பாதுகாப்பு வழங்கினார்.
சிறிது காலம் கழித்து, அந்த மலைப்பகுதியிலேயே அவர் சித்தியை அடைந்தார்.

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 18





15 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ கங்காதரேந்த்ர ஸரஸ்வதி.
அடை மொழி: கிஷ்பதி கங்காதரர்
பூர்வாஶ்ரம பெயர்: சுபத்ரா
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: பத்ரகிரி
சன்னியாசம் கொண்டது: 12 வயதில்
பீடாதிபதியாக வருடங்கள்: 12
சித்தி: 3429 சர்வாத்ரி சைத்ர சுக்ல ப்ரதமை (பொது ஆண்டு 0329- பிப்ரவரி- 29) 24 ஆவது வயதில்

அவரது உயர்ந்த புலமை, அறிவு மற்றும் உரையாற்றும் திறமை காரணமாக, இந்த ஆச்சார்யரின் கிஷ்பதி என அறியப்பட்டார். (கிர் = பேச்சு, பதி = தலைவன்).
இந்த ஆச்சார்யரின் சன்னியாசம் எடுத்துக் கொண்டவுடன், அவரது குரு ஒரு உக்கிர பைரவரின் உக்கிரத்தை தணிக்க அகஸ்த்யாசலத்துக்கு (கொடகு) புறப்பட்டுச் சென்றுவிட்டார். அங்கேயே சித்தியை அடைந்தார். இதை அறியாத (அவரது குரு சித்தி அடைந்தார் என்று) ஶ்ரீ கங்காதரர் அவரது குருவை தேடி அகஸ்த்யாசலம் சென்றார். அவரது குரு-பக்தியினால் மகிழ்ச்சி அடைந்த (இன்னும் அந்த பகுதிகளில் சிரஞ்சீவியாக வசிக்கும்) அகத்திய முனிவர் ஒரு வயோதிக பிராமணரின் வடிவத்தில் அவரிடம் வந்து, குரு சித்தி அடைந்ததை அவருக்கு தெரிவித்து, அவருக்கு ஶ்ரீ வித்யா உபதேசத்தையும் அளித்தார். (அவரது குருவிடமிருந்து கிடைத்திருக்க வேண்டும், ஆனால் அப்படி நடக்கவில்லை).
காஞ்சியில் உள்ள ஶ்ரீமடத்துக்கு திரும்பிய இந்த ஆச்சார்யரின் ஶ்ரீவித்யா மற்றும் சந்திரமௌலீஸ்வரரின் யோக லிங்க பூஜைகளுக்கு முற்றிலும் தன்னை அர்ப்பணித்தார். இதன் மூலம் அவர் அனைத்து அறியாமையையும் அழித்து, பிரம்ம ஞானத்தை அடைந்தார்.


Tuesday, November 5, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 16





13 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சச்சித்ஞானேந்த்ர ஸரஸ்வதி
அடைமொழிகள்: காஷ்டமௌணி சச்சித்கணா, அவதூத சச்சித்கணா
பிறப்பு இடம்: கருட நதி (தமிழ்நாட்டில் கெடிலம் ஆற்றின் கரையில்)
பூர்வாஶ்ரம பெயர்: சேஷா
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ஶ்ரீதர பண்டிதர்
பீடாதிபதியாக ஆண்டுகள்: 37
சித்தி: 3372 கர மார்கசிர கிருஷ்ண ப்ரதமை (பி.இ. 271-டிசம்பர் 04) 69 ஆவது வயதில்
சித்தி இடம்: காஞ்சி காயாரோஹனேஶ்வரர் கோயில்
பிற:
இந்த ஆச்சார்யரின் 32 வது வயதில் பீடாதிபத்யம் ஏற்றதாகத் தோன்றுகிறது. 37 வயது வரை அவர் மடத்தில் இருந்தார். பின்னர் அவர் தனது அவதூதராகும் நிலையை முன்கூட்டியே தெரிந்து கொண்டார். அத்தகைய நிலையில் பீடாதிபதியாக அவரது கடமைகளைத் தொடர முடியாது என்பதால், அவர் தனது இடத்தில் தனது சிஷ்யரை நியமித்து விட்டு மடத்தை விட்டு வெளியேறினார். காஞ்சி நகரத்தில் அவ்வப்போது ஒரு அவதூதராக, ஆழமான காஷ்ட மௌனத்தில் அவர் எப்போதாவது காணப்படுவார்.
அவர் 32 ஆண்டுகளை இந்த நிலையில் கழித்தார், அப்பாவியாக குழந்தைப்போல. இருப்பினும் சில குழந்தைத்தனம் கொண்ட முட்டாள்கள் அவர் ஒரு பைத்தியம் என்று நினைத்தார்கள், அவர் மீது புல் மற்றும் கற்களை வீசினர். அவர் அதை பொருட்படுத்தவே மாட்டார். 69 வயதில், ஈஶ்வர சங்கல்பத்தால், அவர் காஞ்சிபுரத்தில் உள்ள காயாரோஹனேஶ்வரர் கோவிலுக்குள் நுழைந்தார், சிவன் லிங்கத்தில் அவரது உடலை கரைத்தார். [சிலர் இதற்குப் பிறகே அந்த சிவன் காயாரோஹனேஶ்வரர் என அழைக்கப்படுகிறார் - கயா = உடல்; ஆரோஹணம் = ஏறுதல் என்றும் சொல்லுகிறார்கள்].


Monday, November 4, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 15





12 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி (1)
அடை மொழி: சர்வபௌம சந்திரசேகரா
பிறந்த இடம்: பாலார் ஆற்றங்கரையில்
பூர்வாஶ்ரம பெயர்: ஹரி
பூர்வாஶ்ரம கோத்ரம்: (ஶ்ரீவத்ச ?)
பீடாதிபதியாக ஆண்டுகள்: 63
சித்தி: 3335 ஆனந்த அஷ்ட சுக்ல நவமி (பொது ஆண்டு 0234-ஜூன்-23)
மற்றவை:
இந்த ஆச்சார்யர், பீடத்தில் அவரது வாரிசை நியமனம் செய்து அதன் நிர்வாகத்திற்காக ஏற்பாடு செய்த பின்னர், ஏகாந்தமான இடத்திற்குச் சென்றார். சர்வபௌமசர்யம் என்ற அரிய, பெரிய விரதத்தை மேற்கொண்டார். இதன் மூலம் அவர் சோர்வு, தூக்கம் மற்றும் பசி ஆகியவற்றை வென்றார்.