Pages

Tuesday, November 5, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 16





13 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சச்சித்ஞானேந்த்ர ஸரஸ்வதி
அடைமொழிகள்: காஷ்டமௌணி சச்சித்கணா, அவதூத சச்சித்கணா
பிறப்பு இடம்: கருட நதி (தமிழ்நாட்டில் கெடிலம் ஆற்றின் கரையில்)
பூர்வாஶ்ரம பெயர்: சேஷா
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ஶ்ரீதர பண்டிதர்
பீடாதிபதியாக ஆண்டுகள்: 37
சித்தி: 3372 கர மார்கசிர கிருஷ்ண ப்ரதமை (பி.இ. 271-டிசம்பர் 04) 69 ஆவது வயதில்
சித்தி இடம்: காஞ்சி காயாரோஹனேஶ்வரர் கோயில்
பிற:
இந்த ஆச்சார்யரின் 32 வது வயதில் பீடாதிபத்யம் ஏற்றதாகத் தோன்றுகிறது. 37 வயது வரை அவர் மடத்தில் இருந்தார். பின்னர் அவர் தனது அவதூதராகும் நிலையை முன்கூட்டியே தெரிந்து கொண்டார். அத்தகைய நிலையில் பீடாதிபதியாக அவரது கடமைகளைத் தொடர முடியாது என்பதால், அவர் தனது இடத்தில் தனது சிஷ்யரை நியமித்து விட்டு மடத்தை விட்டு வெளியேறினார். காஞ்சி நகரத்தில் அவ்வப்போது ஒரு அவதூதராக, ஆழமான காஷ்ட மௌனத்தில் அவர் எப்போதாவது காணப்படுவார்.
அவர் 32 ஆண்டுகளை இந்த நிலையில் கழித்தார், அப்பாவியாக குழந்தைப்போல. இருப்பினும் சில குழந்தைத்தனம் கொண்ட முட்டாள்கள் அவர் ஒரு பைத்தியம் என்று நினைத்தார்கள், அவர் மீது புல் மற்றும் கற்களை வீசினர். அவர் அதை பொருட்படுத்தவே மாட்டார். 69 வயதில், ஈஶ்வர சங்கல்பத்தால், அவர் காஞ்சிபுரத்தில் உள்ள காயாரோஹனேஶ்வரர் கோவிலுக்குள் நுழைந்தார், சிவன் லிங்கத்தில் அவரது உடலை கரைத்தார். [சிலர் இதற்குப் பிறகே அந்த சிவன் காயாரோஹனேஶ்வரர் என அழைக்கப்படுகிறார் - கயா = உடல்; ஆரோஹணம் = ஏறுதல் என்றும் சொல்லுகிறார்கள்].


No comments: