Pages

Friday, November 8, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 19





16 ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ ஶங்கரேந்திர ஸரஸ்வதி (2)
அடைமொழி : உஜ்ஜ்வல ஶங்கரா
பிறந்த இடம்: தபதி நதியின் கரையோரம்
பூர்வாஶ்ரம பெயர்: அச்யுத கேசவன்
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: கேசவ ஶங்கரர்
சன்னியாசம்: வஞ்சிஷ்வரா (அனேகமாக மஹேந்திரகிரி, ஒரிசா, நிச்சயமாக தெரியவில்லை)
பீடாதிபதியாக ஆண்டுகள்: 38
சித்தி: 3467 அக்ஷய விருஷபா சுக்ல அஷ்டமி (பொது ஆண்டு 0366-மே 05)
சித்தியடைந்த இடம்: காஷ்மீரில் உள்ள காலபுரம், உஜ்ஜ்வல மஹாயதி புரா என்றும் அழைக்கப்படுகிறது.
வேறு:
இந்த ஆச்சார்யர் அவரது குழந்தை பருவத்திலேயே நான்கு வேதங்களையும் அவற்றின் அங்கங்களுடன் (துணைப் பாடங்கள்) பயின்றார். சமாவர்த்தனம் ஆன பிறகு (பிரம்மச்சரிய ஆஶ்ரமம் முடிந்த பிறகு) நைஷ்டிக பிரம்மச்சாரியாக (வாழ்நாள் பிரம்மச்சரியத்தின்) விரதம் ஏற்றார். ராம சேதுவிற்காக ஒரு க்ஷேத்ர யாத்திரை செய்த போது, அப்போதைய திருவனந்தபுரம் (ஸ்யானந்துரம்) மன்னர் குலசேகர வர்மா தமக்கு சாஹித்ய (இலக்கியம்) ஆசிரியராக இருக்க வேண்டினார்.
அரசரின் வேண்டுகோளை கௌரவித்தபின், அவர் தனது க்ஷேத்திர யாத்திரையை முடித்து திரும்பினார். மஹேந்திரகிரியில் (இன்றைய ஒரிசாவில்) இவர் தபஸ் செய்து கொண்டிருந்த போது ஶ்ரீ கிஷ்பதி கங்காதரர் அவரை சந்தித்தார். அடுத்த பீடாதிபதிக்குக்கு இவரே தகுதி பெற்றவர் என்று தீர்மானித்தார். அதன்பிறகு வாஞ்சிஷ்வராவில் அவருக்கு சன்னியாசத்தை வழங்கினார். பாரதம் முழுதும் பயணிக்கவும், சனாதன தர்மம் மற்றும் அத்வைதத்தை அதன் மகிமைக்கு மீட்கவும் அவருக்குக் கட்டளையிட்டார்.
அந்த நாளில் இரண்டு விதமான புத்திஜீவிகள் நாட்டில் நிரம்பியிருந்தனர்: வேதத்தின் உண்மையான புரிதல் கொண்டவர்கள்; வைத்திய தர்மத்திற்கு எதிரானவர்கள். அவைதிக நடைமுறைகளைப் பின்பற்றிய பிற நாட்டுக் குழுக்களும் வைதீக தர்மத்தில் உள்ளவர்களுடன் சமாதானமாக வாழ இசையாததன் மூலம் கடுமையான தடைகளை ஏற்படுத்திக்கொண்டு இருந்தார்கள்.
ஶ்ரீ உஜ்ஜ்வல ஶங்கரர் ஒட்டுமொத்த சூழ்நிலையின் தீவிரத்தை கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.
அவரது புலமை மூலம், அவர் அந்த அபத்தமான புரிதலைக் கொண்ட அறிவுஜீவிகளின் மரபு முழுவதையுமே வென்றார். நம் தர்மம் சனாதனம் (எல்லா காலத்திற்கும்). நம் முன்னோர்களான ரிஷிகள் காட்டிய பழைய பழக்கவழக்கங்களுடன் நம் தனிப்பட்ட விளக்கங்களும் கருத்துகளும் முரண்படக்கூடாது என்று அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த வேளையில், பல்வேறு அரசர்கள் ஶ்ரீ உஜ்ஜ்வல ஶங்கராச்சாரியாரின் உன்னத வேலையை அங்கீகரித்தனர். தர்மத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்பு முன்னணிக்கு வந்துவிட்டது, அவர்கள் வைதிக தர்மத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்; அல்லது குறைந்தபட்சம் தடையாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவித்தனர்.
இந்த வழியில், வைதிக தர்மத்திற்கு எதிராக இருந்த சுய-பாணியிலான அறிஞர்களும், வைதிக சமுதாயத்தை சீர் குலைத்துக்கொண்டிருந்த வெளிப்புற வம்சாவழியினரின் அனைத்து மக்களும், அமைதியான வாதங்களையும், உஜ்ஜ்வல ஶங்கரரின் வழிகாட்டல்களையும் கேட்க மறுத்த அனைவரும் தர்மத்தில் இருந்தவர்களின் நிலத்திலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
இப்படியாக, ஆச்சார்யர் வர்ணாஶ்ரம தர்மங்கள் மீண்டும் உறுதியாக நிறுவப்பட்டதை உறுதி செய்தார்.
ஆச்சார்யர், எடுக்க வேண்டி இருந்த கடுமையான நடவடிக்கைகளால் "உஜ்ஜ்வல" (தீவிர) என்ற அடைமொழியை பெற்றார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர் ஒரு பெரிய ஆத்மாவாக உலகளாவிய ரீதியாக அங்கீகரிக்கப்பட்டவர் என்பதால், எல்லோர் நலனையும் இதயத்தில் கொண்டவராக இருந்ததால், அவர் மஹாயதி என்று அழைக்கப்பட்டார் (இது போலவே சமீப காலங்களில் 68 வது ஆச்சார்யர் மஹாஸ்வாமி என்று அழைக்கப்பட்டார், மற்ற மதங்களிடமிருந்து கூட மரியாதை பெற்றார்).
இதன் காரணமாக, காலபுரா இடத்தில் காஷ்மீர் பகுதியில் ஆச்சார்யர் சித்தி அடைந்த பின் அது உஜ்ஜ்வல மஹாயதி புரா என்று அறியப்பட்டது.

No comments: