शौचसंतोषतपःस्वाध्यायेश्वरप्रणिधानानि नियमाः ।।32।।
ஶௌசஸம்°தோஷதப:ஸ்வாத்⁴யாயேஶ்வரப்ரணிதா⁴நாநி நியமா: || 32||
ஶௌசம், ஸந்தோஷ, தப, ஸ்வாத்⁴யாய, ஈஶ்வர ப்ரணிதா⁴நாநி (ஆகியவை) நியமா: = நியமங்களாகும்.
ஶௌசம் என்பது மண், நீர், பசுக்களின் சாணம் இவற்றால் வெளியே சுத்தம் செய்வதும், மதம், அசூயை முதலிய மன அசுத்தங்களை நீக்குவதும் ஆகும்.
ஸந்தோஷம் என்பது தெய்வாதீனமாக கிடைத்ததை தவிர அதிகமானவற்றில் ஆசை கொள்ளாதிருத்தல்.
தபம் என்பது குளிர்-வெப்பம், பசி - தாகம், போக்கு-வரவு போன்ற இரட்டைகளை பொறுத்துக்கொள்வது.
ஸ்வாத்யாயம் என்பது ப்ரணவ ஜபம் செய்தல்; அல்லது மோக்ஷ சாதகமாக சாஸ்திரங்களை அத்தியயனம் செய்தல். ஈஶ்வர ப்ரணிதாநாநி என்பது தான் செய்யும் எந்த செயலையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பது.
முன்பு யமத்தில் செய்யக்கூடாதன (don'ts) சொல்லப்பட்டது. நியமத்தில் செய்ய வேண்டியன (do s) சொல்லப்பட்டது. இவற்றை செய்யும் காலத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகளை விலக்குவது எப்படி?
No comments:
Post a Comment