अपरिग्रहस्थैर्ये जन्मकथान्तासंबोधः ।।39।।
அபரிக்³ரஹஸ்தை²ர்யே ஜந்மக தா²ந்தாஸம்°போ³த⁴: || 39||
அபரிக்³ரஹஸ்தை²ர்யே = பரிக்ருஹம் செய்யாதவனுக்கு; ஜந்ம கதா²ந்தா = முன் பிறவிகளின்; ஸம்°போ³த⁴: = தன்மையும் தெளிவும் உண்டாகிறது.
சாதாரணமாக யாரும் ஏதும் இலவசம் என்று கொடுத்தால் 'அப்பாடா' என்று வாங்கி வைத்துக் கொள்கிறோம். அது தவறு. ஒரு பொருளை ஒருவரிடம் வாங்கும் போது கண்ணுக்குத் தெரியாமல் (அத்ருஷ்டமாக) சிலதையும் வாங்கிக்கொள்கிறோம். இதனால் விஷயம் அறிந்த பெரியோர்கள் யாரிடமும் எதுவும் கேட்டோ, தானாக வந்தாலுமோ கூட அப்படியே பெற்றுகொள்ள மாட்டார்கள். இப்படி வாங்கிக்கொள்வது பரிகிரஹம் ஆகும். அபரிக்ரஹம் அப்படி வாங்காமல் இருப்பது.
1 comment:
இப்படி வாங்கிக்கொள்வது பரிகிரஹம் ஆகும். அபரிக்ரஹம் அப்படி வாங்காமல் இருப்பது.//
நல்லவேளையா யாரானும் கொடுத்தாலும் எங்க கிட்டே தங்காது. நாங்களே தானம் பண்ணிடுவோம். :)))
Post a Comment