Pages

Friday, November 26, 2010

ஈச்வர பிரணிதானம்:




  समाधिसिद्धिरीश्वरप्रणिधानात् ।।45।।

ஸமாதி⁴ஸித்³தி⁴ரீஶ்வரப்ரணிதா⁴நாத் || 45||

ஈஶ்வர ப்ரணிதா⁴நாத் = எல்லாவற்றையும் ஈச்வரனிடம் அர்ப்பணிப்பதால்; ஸமாதி⁴ ஸித்³தி⁴ =ஸமாதியானது சித்திக்கிறது.
இறைவனிடம் எல்லா கர்மங்களையும் அர்ப்பணித்து அவரிடம் பக்தி செலுத்தி விட்டால் அது ஈஶ்வர ப்ரணிதா⁴நம். இதனால் வேறு தேசத்தில் உள்ளதையும், வேறு எந்த காலத்தில் உள்ளதையும் தடையில்லாமல் அறிந்து கொள்கிற திறமை உண்டாகும்.

இது வரை யமம் நியமம் ஆகியவற்றால் உண்டாகும் பலன்களைப் பார்த்தோம். இனி ஆசனம் முதலிய யோகாங்களின் பலன்களைப் பார்க்கலாம்.

2 comments:

Jayashree said...

ஆமாம் ! நாம செய்யறது என்ன செஞ்சாலும் ஈஸ்வர கடாக்ஷம் தான் அதை சித்திக்க வைக்கிறது இல்லையா? நிஷ் காம ஃபல கர்மா, ஈஸ்வரனிடத்தில் அர்பணித்து விட்டு செய்யும் செயகல்களை செய்துகொண்டிருக்கணும் ...
இப்போ ரெகுலரா வரமுடியறதில்லை Mr திவா. நிதானமா வந்து முந்தைய CHAPTERS ஐ படிக்கிறேன் . கடலூர்னல ரொம்ப மழை .FLOODS நு போட்டு இருக்கே?? எல்லாரும் சௌக்கியம் தானே. இந்த வருஷம் மழை லேட்டா?? முந்தையெல்லம் தீபவளி சமயத்துல தான் டிப்ரஷன்னு வந்து ரயில் போகாம ஆயிடும்.!!

திவாண்ணா said...

ஆமாம் ! நாம செய்யறது என்ன செஞ்சாலும் ஈஸ்வர கடாக்ஷம் தான் அதை சித்திக்க வைக்கிறது இல்லையா/
அப்படித்தான் நினைக்கணும். இல்லை என்கிற மீமாம்சவாதம். கர்மாவே பலனை தரும் என்கிறாங்க அவங்க!

// நிஷ் காம ஃபல கர்மா, ஈஸ்வரனிடத்தில் அர்பணித்து விட்டு செய்யும் செயகல்களை செய்துகொண்டிருக்கணும் ...//
செய்ய வேண்டியன்னும் சேத்துக்கலாம். அப்ப அது கர்ம யோகம் ஆயிடும்!

இப்போ ரெகுலரா வரமுடியறதில்லை Mr திவா. நிதானமா வந்து முந்தைய CHAPTERS ஐ படிக்கிறேன் .//
ரெகுலர் இல்லைன்னாலும் தொடர்ந்து படிக்கிறீங்களே! நம்ஸ்காரம்! :-))

கடலூர்னல ரொம்ப மழை .FLOODS நு போட்டு இருக்கே?? எல்லாரும் சௌக்கியம் தானே. இந்த வருஷம் மழை லேட்டா?? //
கோடையிலேந்தே நாலு நாளுக்கு ஒரு மழை இந்த வருஷம்! விக்ருதி வருஷம் இல்லையா? அத்னால ஒரு பெரிய மழைக்கே எல்லாம் ரொம்பி போச்சு! மேலும் மணல் கொள்ளை அடிச்சதுலே தண்ணியை தேக்கி வெச்சு மெதுவா விட ஒண்ணுமில்லை. அதான் ப்ளட்ஸ் வந்த உண்மையான காரணம். :-(