चितेरप्रतिसक्रमायास्तदाकारापत्तौ स्वबुद्धिसंवेदनम् ।।22।।
சிதேரப்ரதிஸங்க்ரமாயாஸ்ததா³காராபத்தௌ ஸ்வபு³த்³தி⁴ஸம்°வேத³நம் || 22||
சிதே: = புருஷனுடைய; (சன்னிதான பலத்தால்) அப்ரதி ஸங்க்ரமாயா: = விஷயத்துடன், க்ரியையை முன்னிட்டு ஏற்படும் சம்பந்தம் இல்லாத; ததா³காராபத்தௌ = புருஷனுடைய பிரதிபிம்பமாக புத்தி ஆகும்போது; ஸ்வ பு³த்³தி⁴ ஸம்°வேத³நம் = புருஷனுக்கு அவனால் போக்யமான சித்த விருத்தியின் அனுபவம் உண்டாகிறது.
கிரியை செய்பவன் கர்த்தா ஆவான். (செயலை செய்பவன்). அதன் பலனை அவனே அனுபவிப்பவனாகவும் (போக்தா) ஆகிறான். புருஷனுக்கு செயல் என்பதில்லை எனில் எப்படி போக்தாவாக ஆவான்?
புத்திக்கு க்ரியையை முன்னிட்டு வெளி வஸ்துக்களுடன் சம்பந்தம் ஏற்படுகிறது. ஆனால் இது போல புருஷனுக்கு குடம் போன்ற வெளி வஸ்துக்களுடன் சம்பந்தம் இல்லை. புருஷனுக்கு பரிணாமமே இல்லை. க்ரியையும் இல்லை.
ஸந்நிதி பலத்தால் புத்தியில் புருஷனின் ப்ரதி பிம்பம் ஏற்படுகிறது. இந்த புத்தியிலேயே சித்த விருத்தியின் சம்பந்தம் ஏற்படுகிறது. இந்த ப்ரதி பிம்பம் ஏற்படுவதையே புருஷனின் போகம் என்கின்றனர். சூரியன் அசையாதிருக்கும்போது ஜலத்தில் தெரியும் அதன் பிம்பம் ஜலம் அசைவதால் அசைவுறுவது போல புருஷனுக்கு எந்த விகாரமுமில்லை; இருந்தாலும் அப்படி விகாரம் உள்ளது போல தோன்றுகிறது.
7 comments:
சுவாமி பழைய பதிப்புகள் மிகவும் உதவியவை.
இப்போது ADVANCE COURSE என்று நினைக்கிறேன். இவை எல்லாம் எனக்கு புரியும் படி ஆண்டவன்தான் அருள் புரிய வேண்டும்.
(மீண்டும் நங்கள் பின்னுட்டம் இடும் படியான TOPICS எப்போ வரும் :-)
சாமி வணக்கம். ஆமாம் இப்பொது இட்டு வருவது யோகம் பற்றியது என்பதால் அது அட்வான்ஸ்ட் தான். சாதாரணமாக புரியக்கூடியது பக்தியும் கர்மாவும் மட்டுமே. யோகமும் ஞானமும் ஒரு குருவின் வழி காட்டுதலுடன் செய்யக்கூடியவை. அதைப்பற்றி கொஞ்சம் மேலோட்டமாக தெரிந்து கொள்ள உதவியாக இருக்கலாம் என்று பதிவு செய்கிறேன். இந்த தொடர் ஏறக்குறைய இறூதிக்கு வந்தாயிற்று. இன்னும் 15 பதிவுகள் இருக்கலாம்.
அடுத்து என்ன எழுதுவது என்று முடிவாகவில்லை. தினம் ஒரு குட்டிக்கதையாக போடலாம் என்று உத்தேசம். பார்க்கலாம்!
கொஞ்சம் புரியலை, மறுபடியும் நாளைக்கு வரேன்.
மறுபடியும் படிச்சேன், ஆனாலும் கொஞ்சம் புரியத்தான் இல்லை. :(((((
நேராதான் பேசணும்!
நேரா தான் பேசணும்?? நீங்க நேரிலே விளக்கணும்னு அர்த்தம்?? நான் அப்படித் தான் எடுத்துண்டேன்.
ஆமாம்!
Post a Comment