Pages

Sunday, April 10, 2011

ஆசையின் முடிவு



विशेषदर्शिन आत्मभावभावनानिवृत्तिः ।।25।।
விஶேஷத³ர்ஶிந ஆத்மபா⁴வபா⁴வநாநிவ்ரு«த்தி​: || 25||

விஶேஷ த³ர்ஶிந = முன் சொன்ன யுக்தி பரிசீலனையால் தேகம்- இந்திரியம்- சித்தங்களினின்றும் புருஷன் வேறானவன் என்ற விசேஷ ஞானத்தை அடைந்தவனுக்கு; ஆத்ம பா⁴வ = ஆத்ம தத்துவ விஷயத்தில்; பா⁴வநா = அறிய வேண்டும் என்ற ஆசையின்; நிவ்ரு«த்தி​: = முடிவு (உண்டாகிறது)

"நான் யார்? எனக்கு மற்ற வஸ்துக்களுடன் என்ன சம்பந்தம்?" என அறிய ஆசை ஏற்படவே மிகுந்த புண்ணியம் செய்து இருக்கவேண்டும். நான் என்று அறியப்படுபவன் தேகத்தில் இருந்தும் வேறானவன்; இந்திரியங்களில் இருந்தும் வேறுபட்டவன்; புத்தி முதலியவற்றிலிருந்து வேறுபட்டவன்; ஞான ஸ்வரூபன்; இப்படி விவேக ஞானத்தை ஒருவன் அடைய வேண்டும். யாருக்கு தேகம், இந்திரியங்கள் முதலானவற்றில் ஆத்ம பாவனை இருக்கிறதோ (அதாவது இவையே தான், ஆத்மா என்று நினைக்கிறானோ) அவனுக்கு மோக்ஷத்துக்கு அதிகாரமில்லை. யார் ஆத்ம தத்துவத்தை அடைய விரும்புகின்றானோ அவனுக்கே மோக்ஷத்தில் அதிகாரம் உண்டு.

யுக்தி பரிசீலனையால் தேகம்- இந்திரியம்- சித்தங்களினின்றும் புருஷன் வேறானவன் என்ற விசேஷ ஞானத்தை அடைந்தவனுக்கு ஆத்ம தத்துவத்தை அறிய வேண்டும் என்ற ஆசையின் முடிவு உண்டாகிறது. அதாவது அது நிறைவேறுகிறது- ஆத்ம தத்துவத்தை அறிந்து கொள்கிறான்.

6 comments:

Karthik Raju said...

முடிவில் இந்த தொகுப்புகளுக்கும் PDF DOC அளிப்பிர்கள் என நம்புகிறேன்
;-).
கடினம் என்பதைவிட நாம் ஆன்மிக தேடலுக்கு அதிக (நேரம்) முதலிடு செய்தால் முன்னேற்றம் நன்றாக உண்டு. நன்றி

திவாண்ணா said...

நிச்சயமா கார்திக்! உண்மையிலே எழுதி முடிச்சாச்சு. பதிவிலே போடறப்ப ஒண்ணு ரெண்டு எ.பி கண்ணுல படும். அதை சரி செய்து முடிந்ததும் பிடிஎஃப் ஆக்கி போடுவேன்.
நேர முதலீடு பற்றி நீங்க சொல்கிற மிகவும் உண்மை!

Geetha Sambasivam said...

இப்படி விவேக ஞானத்தை ஒருவன் அடைய வேண்டும். யாருக்கு தேகம், இந்திரியங்கள் முதலானவற்றில் ஆத்ம பாவனை இருக்கிறதோ (அதாவது இவையே தான், ஆத்மா என்று நினைக்கிறானோ) அவனுக்கு மோக்ஷத்துக்கு அதிகாரமில்லை. //


ம்ம்ம்?? இது எப்படி?? ஆத்மா வேறு, ஆத்ம தத்துவம் வேறா?? யோசிக்கிறேன். இப்போதைக்கு மீண்டும் சந்திக்கும் வரை விடைபெறுகிறேன்

திவாண்ணா said...

ம்ம்ம்?? இது எப்படி?? ஆத்மா வேறு, ஆத்ம தத்துவம் வேறா?? யோசிக்கிறேன். இப்போதைக்கு மீண்டும் சந்திக்கும் வரை விடைபெறுகிறேன்//

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.
இந்த உடலும் இந்திரியங்களும் ஆத்மா இல்லை. அப்படி நினைக்கிறவர்களுக்கு ஆத்ம தத்துவம் இன்னும் பிடிபடவில்லை. அவ்வளவே!

Geetha Sambasivam said...

சரிதான், இப்போக் கொஞ்சம் மூளையிலே ஏறுகிறாப் போல் இருக்கு. இந்த வாரம் கல்கியிலும் பெரியவாளின் அருள் வாக்கு இதைக் குறித்தே வந்திருக்குனு நினைக்கிறேன்.

திவாண்ணா said...

:-))