Pages

Tuesday, April 12, 2011

ஆத்ம தத்துவத்தை அறிந்தவனுடைய சித்தம்:



तदा विवेकनिम्नं कैवल्यप्राग्भारं चित्तम् ।।26।।

ததா³ விவேகநிம்நம்° கைவல்யப்ராக்³பா⁴ரம்° சித்தம் || 26||

ததா³ = ஆத்ம தத்துவத்தை அறிந்த பின்; விவேக = புருஷன் - மற்ற வஸ்துக்கள் இடையே வித்தியாசத்தை; நிம்நம்° = பற்றிக்கொண்டதாயும்; கைவல்ய = மோக்ஷத்தை; ப்ராக்³பா⁴ரம்° = முடிவான பலனாக உடையதாயும்; சித்தம் = சித்தம் (ஆகிறது)

உலக விஷயங்களில் பற்றுள்ளதாக இருந்த சித்தம் ஆத்ம தத்துவத்தை அறிந்தபின் கைவல்லியம் என்ற மோக்ஷத்தை பலனாக அடைகிறது. தர்மமேகம் என்ற த்யானத்தில் பற்றுகொள்கிறது.


3 comments:

Geetha Sambasivam said...

தர்மமேகம் என்ற த்யானத்தில் பற்றுகொள்கிறது.//

பற்றுக்களை அறுக்கவேண்டிய சித்தம் மீண்டும் பற்றுக் கொள்ளுகிறது?? ம்ம்ம்ம்ம்??

Geetha Sambasivam said...

மோக்ஷத்தில் பற்றுக் கொள்கிறது??

திவாண்ணா said...

இதுக்கு அடுத்த ௩ வது பதிவில் தர்மமேக சமாதி பத்தி படிச்சா விளங்கிடும். பற்றுக பற்றற்றான் பற்றினை கதைதான்.