हानमेषां क्लेशवदुक्तम् ।।28।।
ஹாநமேஷாம்° க்லேஶவது³க்தம் || 28||
ஹாநம் =முற்றிலும் விடுபடுதல்; ஏஷாம்° = இவற்றுக்கு (வ்யுத்தான ஸம்ஸ்காரங்களுக்கு); க்லேஶவத்³= க்லேசங்களை போன்றதாக: உக்தம் = சொல்லப்பட்டுள்ளது.
வ்யுத்தான ஸம்ஸ்காரங்களுக்கு முற்றிலும் அழிவு க்லேசங்களை போன்றதாக சொல்லப்பட்டுள்ளது. க்லேசங்கள் எப்படி அழியும்? பாதம் 2 முதல் சூத்திரம் முதல் சொன்னவற்றில் இருந்து: முதலில் க்ரியா அனுஷ்டானத்தால் அதை தேயச்செய்து, பின் விவேக க்யாதி உண்டாகி, முதிர்ச்சி அடைய ஸம்ஸ்காரங்கள் பொசுக்கப்பட்டு, பின் முற்றிலும் அழியும் என்று அறிந்தோம். அதேதான் இங்கும். விவேக க்யாதி முதிர முதிர அது வ்யுத்தான ஸம்ஸ்காரங்களை விதைகளை வறுப்பது போல் வறுக்கும்.
2 comments:
விதைகளை வறுப்பது போல் வறுக்கும்.//
வறுத்த பயிறு முளைக்காது????
//வறுத்த பயிறு முளைக்காது????//
ஆமாம். ப்ரோட்டீன் எல்லாம் டிநேசர் ஆகிடும். முளைச்சா அதை சரியா வறுக்கலைன்னு அர்த்தம்.
Post a Comment